பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு – நா. கணேசன்

பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு     பகழிக்கூத்தர் அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்தவர். கவி காளமேகம்போலச்  சைவம் பாடிய வைணவர். திருச்செந்தூர் முருகன் சோதிக்க திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என அழகான பனுவல் பாடிய பெரும்புலவர். சீவகசிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூலும் பாடியவர். அதனைச் சருக்கரை இராமசாமிப் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்தார். (குறைப்படி). அதில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் பகழிக்கூத்தர் பெயர்க்காரணமும், அவரது ஊரும் விளங்குகிறது. திண்டிம கவி என்று அருணகிரிநாதர் அழைக்கப்பட்டதும் பகழிக்கூத்தர் பாடலால் தெரிகிறது. இவற்றை மு. இராகவையங்கார் பல…

வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை

ஆவணி 16, 2047 / செட்டம்பர் 01, 2016 தொடக்க அமர்வு முற்பகல் 10.30 நிறைவமர்வு  பிற்பகல் 2.30   சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை தமிழகப் புலவர் குழு

பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு

பாவலர்  கருமலைத்தமிழாழன்  நூலுக்குப்  பரிசு  தேனி  மாவட்டம்  கம்பத்தில்  37  ஆண்டுகளாகச்   செயல்பட்டுவரும்  பாரதி தமிழ்  இலக்கியப்  பேரவை, ஒவ்வோர் ஆண்டும்  தமிழில்  வெளிவந்த  கவிதை  நூல்களில்  சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து  விருதும்,  பொற்கிழியும்  வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது.  2016  ஆம் ஆண்டில்  சூலை மாதம் வரை  வெளிவந்த  கவிதை  நூல்களில்  ஓசூரைச் சேர்ந்த  பாவலர் கருமலைத்தமிழாழன்  எழுதிய  ‘செப்பேடு’   மரபுக் கவிதை நூலை  இவ்வாண்டின் சிறந்த  நூலாகத்   தேர்ந்தெடுத்தது.  ஆடி 31, 2047 / 15 -08 – 2016  திங்களன்று. …

கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குப் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு     வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இருளில் மறையும் நிழல்’ சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுகதை நூலுக்கான இரண்டாம் பரிசினை வழங்கியது.   கடந்த 37 ஆண்டுகளாகக் கம்பத்தில் இயங்கிவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ஆண்டுதோறும்  விடுதலைத் திருநாளன்று  நடைபெறும் இந்தப்…

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் – புத்தனேரி இரா.சுப்பிரமணியம்

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் பொல்லாப் பகைக் கூட்டம்                 புகழ்பெற்ற செந்தமிழின் செல்வத்தைக் கொள்ளையிடும்                 திட்டத்தால் ஏடுகளைக் கடத்திமறைப்பார்கள்;                 கருத்தைச் சிதைப்பார்கள் கடலில் எறிவார்கள்;                 கனலில் எரிப்பார்கள் கவிஞர் புத்தனேரி இரா.சுப்பிரமணியம்: தமிழில் நாட்டிய நாடகங்கள்: தமிழகக் கலைச் செல்வங்கள் பக்கம்.205

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்   தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி மொத்தப்பரிசு உரூபா. 3000.00 பரிசு வழங்குபவர் பொறிஞர் இரா.தேவதாசு அவர்கள்   கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.9.2016 முகவரி முனைவர் க.தமிழமல்லன் தலைவர் தனித்தமிழ் இயக்கம் 66.மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605009- தொ.பே 0413-2247072,9791629979 நெறிமுறைகள் அ4 தாளில் 4 பக்கம் கொண்ட குமுகாயக் கதைகள் பிறமொழிச்சொற்கள், பெயர்கள் கலவாத  நடையில் எழுதப்பெற வேண்டும்.  2. கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும் ஒருபடியில் மட்டும் பெயர் முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து…

தானே அருள்வாள் தமிழன்னை! – தாமோதரன் கபாலி

தானே அருள்வாள் தமிழன்னை! தமிழன் னையைக் கைவிடாதே தாங்கி உயிரை அணைப்பவளாம்! அமிழ்தக் கலசம் கையேந்தி அன்பு கலந்து கொடுப்பவளாம்! குமிழைப் போன்ற வாழ்க்கையிலே குன்றா விளக்காய் ஒளிதருவாள்! தமிழில் பாடி மனமுருக தானே அருள்வாள் தமிழன்னை! தாமோதரன் கபாலி

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது. (இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச்…

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் தமிழ்த் திரைவானில் புகழ்மிகுப்பாடலாசிரியராக ஒளிவிட்டவர் கவிஞர் நா.முத்துக்குமார்(அகவை 41),  மஞ்சள்காமாலையால் தாக்குண்டு  பண்டுவம் பயனளிக்காமல் இன்று காலமானார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார்.  இயக்குநராகப் பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்….

மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 தொடர்ச்சி) மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   ‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன்.   ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு…

யாரெல்லாம் தமிழரையா? – தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்! ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை! ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்! ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்! பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்! பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்! பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்! பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!   தாமோதரன் கபாலி

குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு

ஆவணி 04, 2047 / ஆகத்து 20, 2016   சனிக்கிழமை மாலை 6.30 மணி குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு அண்மையில் படித்த புத்தகங்கள் – எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் இம்மாதக்  கதைவாசிப்பு :- திருமதி இலதா இரகுநாதன் திரு சதுர்புசன் புத்தக அரண்மனை / டிசுகவரி புக் பேலசு எண் 6,  மகாவீரர் வளாகம், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு க.க.நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)