வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! – சி.இலக்குவனார்

வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது  என்றார்!   மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு, உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும், உழைப்பவர் படித்தல் வேண்டா என்றும விதியாக்கினர். ஆனால், வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். கண்களோடு பிறத்தல்போலக் கல்வியோடு வளர்தல் வேண்டும். கண்ணில்லாது வாழ முடியாததுபோல் கல்வியில்லாதும் வாழ முடியாது. கல்வி பெறாதிருத்தல் பெருங்குற்றம். பெறமுடியாது தடுத்தல் அதனினும் பெருங்குற்றமாகும்….

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 இசைப்பாடல்   இசைப்பாடல் என்ற பிரிவில் திருவள்ளுவர் இயற்றிய கல்வி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் வகையில் ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்னும் பாடலை கவிஞர் யாத்துள்ளார். இப்பாடலுக்கு ‘இசைமணி சங்கரனார்’ என்பவர் இசையமைத்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இசைவாணர் ஆவர்.  வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள், வீ. முத்துச்சாமியின் ‘இலக்குவனார் ஆய்வுப் பண்பு’ என்னும் ஆய்வேட்டிற்கு அளித்த பே ட்டியில்,  ‘இசைப்பாடல் யாக்கும் திறமும்…

திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார்   தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்றுகின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களின் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவராகக் கூறிக்கொண்டு அந்தணர் என்றும் ஐயர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால், செயலில் வன்கண்மை பூண்டு தம் கூட்டத்தினர் அல்லாதவரை ஒடுக்கியும் இழித்தும் விலங்கினும் கீழாக நடத்தி வந்தனர். அதனால் வள்ளுவர் அந்தணர் யார் என்று விளக்கம் கொடுத்துப் போலி…

மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும் – சி.இலக்குவனார்

மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும்!   பிறப்பால் உயர்வுதாழ்வு பேசுதல்  பேதமை. ஒழுக்கத்தால் உயர்ந்தோரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார். ஒழுக்கக் கேடர்களே இழிந்த பிறப்பினர் ஆவார்கள். ஆதலின் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்று இடித்துரைத்தார். ஒழுக்கத்தால் உயர்வுபெறும் நெறி வெற்றி பெற்றிருக்குமேல், இன்று நாட்டில் பூசல்கள் தோன்றுமா? ஒழுக்கம் உடையாரை ஒதுக்கிப் புறக்கணிப்பதனால் அன்றோ இன்று எங்கு நோக்கினும் பூசற் களமாகக் காணப்படுகின்றது. மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், ஒழுக்கமுடையோர் உயர்ந்தோராகக் கருதப்பட்டு உயர்வாகப்…

தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!

பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்! செயலணியில் முறைப்பாடு ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.   நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்.   1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழும்…

வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்! – சி.இலக்குவனார்

வள்ளுவர்  வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்   வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும்.  அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதி்ரைகளைக் கொன்றனர். மக்கள் நலன்அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா?  பேரருளாளர் வள்ளுவர்…

திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்  மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். –  பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் : குறளமுதம் பக்கம் 524  

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 எண்ணெழுத் தறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 21. எண்ணெழுத் தறிதல் 201.எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம். எண் என்பது கணிதம் ஆகும். 202.எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம். எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும். 203.எண்ணு மெழுத்துங் கண்ணென மொழுப. எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள் போன்று மிக இன்றியமையாதது என்று கூறலாம். 204.எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது. எண் அறியாதவர்கள் பொருள் ஈட்டுவது அரிதான செயல் ஆகும். 205.எழுத்தறி யார்பிற வெய்துத லரிது. எழுத்து அறியாதவர்கள் மற்றவற்றை…

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !!

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !! பேரன்புடையீர் வணக்கம்.   எதிர்வரும்  ஆவணி 31,2047 / செத்தம்பர் 16, 2016, வெள்ளிக்கிழமை குவைத்து வளைகுடா வானம்பாடி நடத்த இருக்கின்ற “வெள்ளிவிழா கண்ட வெற்றித்தமிழ்க் கலைவிழா-2016” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாகவும், குவைத்தில் மேலும் கவிஞர்களை ஊக்குவிக்கும்  வகையாகவும்ம் ”மேத்தன்” நிறுவனத்துடன் சேர்ந்து வளைகுடா வானம்பாடி சிறப்புப் போட்டிக் கவியரங்கத்தை நடத்த இருக்கிறது. இந்த மாதம் 26 அன்று நடக்கவிருக்கும் இந்தக் கவியரங்கப்போட்டியின் இடம், நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும்….

தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை

இராசல் கைமா  மருத்துவமனையில் தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை   இராசல் கைமா :இராசல் கைமாவில் உள்ள சைப்  மருத்துவமனையில்  தமிழக இளைஞர்  இராசு ஞானமுத்து(அகவை 41)  சேர்க்கப்பட்டுள்ளார். அவரைச் சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்க  வாய்ப்பு உள்ளவர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் இராசு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய உணவகத்திற்கு  வேலைக்காக வந்தார் இராசு ஞானமுத்து.   திடீரென இவருக்கு வாதம்போல்…

ஒரு சவ்வூடு பரவல் – உருத்ரா இ பரமசிவன்

ஒரு சவ்வூடு பரவல் உன் இதயம் இங்கே வந்து விட்டது. உன் சிரிப்புக்கொத்தைக்கூட‌ உருவிக் கோர்த்து கழுத்தில் மாட்டியிருக்கிறேன். சுண்டியிழுக்கும் உன் கண் தூண்டில்கள் கூட‌ என் உள்ளங்கைக்கடலில் என் கண்ணாடி மீன்களைத்தான் சுழற்றிக்கொண்டிருக்கின்றன. உன் இனிய சொற்கூட்டம் எல்லாம் என்னை மொய்த்த‌ தேன்சிட்டுகளின் ஒலிப்புகளாய் என் கண் மூக்கு காது வாய் தொண்டை என்று இன்பக் க‌மறல்களில் என்னை திணறடித்துக்கொண்டிருக்கிறது. எந்தக் கணவாய் வழியாய் இங்கே ஆக்கிரமிப்பு செய்தாய்? தெரியவில்லை. அங்கே இருந்து இங்கே ஊடுருவி வர‌ என்ன “சவ்வூடு பரவல் முறையை”…