30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் :  தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலைப் பணிப்பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரம் வருமாறு: அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441  நாள் 29.07.2016 பணி:  இளநிலை  அறிவியல் அலுவலர்(Junior Scientific Officer) காலியிடங்கள்: 30…

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!  தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேசியத் தமிழ் மொழி நாள் விழா…

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு

கற்பித்தலில் புதுமை! – தமிழ்நாடு அரசின் ஆவணப் படம் வெளியீடு  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏறக்குறைய 1320 பள்ளிகளில் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்று மட்டுமே முதற்கட்டமாகத் தேர்வாகி, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் சார்பாக உலக அளவில் முதன் முதலாக இதற்கெனக் காணொலி ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   தேவகோட்டை, பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளைப் பள்ளித்…

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி

மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை வென்றது கொட்டக்கலை மகளிர் அணி!   ‘அடையாளம்’ எனும் தொண்டு நிறுவனமும் ‘தாமரைக்குளம்’ பதிவர் சங்கமும் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தைக் கொட்டக்கலை உ.தொ.ம.(g.t.c.) மகளிர் அணி வெற்றி கொண்டது. நானுஓயா தாச்மகால் அணி இரண்டாம் இடத்தையும் நுவரெலியா மிசுரோ உயர்மன்னர்(சூப்பர் கிங்சு) அணி மூன்றாம் இடத்தையும் அடைந்தன.  முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 உரூபாய்ப் பணப் பரிசும் அளிக்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வெற்றிக்…

சென்னைக் கம்பன் கழகத்தின் 42 ஆம் ஆண்டு விழா

  வணக்கம். சென்னைக் கம்பன் கழகத்தின்  ஆண்டு விழா வருகிற ஆடி 28,29&30, 2047 / 12,13&14.08.2016 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. தாங்கள், தங்கள் உறவு நட்புடன் வருகை தர வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்! – மறைமலை இலக்குவனார்

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!   வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது. தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின்…

மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள்

  மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன்,   ஆடி 17, 2047 / ஆகத்து 01, 2016, அன்று (01) தன் 64ஆவது பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா நம்முயிர்காப்போம்(எசு..ஓ.எசு.) சிறார்  ஊரில் சிறுவர்களுடன் கொண்டாடினார். (படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்)

வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07

(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 தொடர்ச்சி) வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன்,  வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தனது…

காவித் துணிவேண்டா – பாரதியார்

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார்

பெண்கள் விடுதலைக்காகப் பாரதியார் கூறுவன

பெண்கள் விடுதலைக்காக முதன்மையான தொடக்கப்படிகளாகப் புரட்சிக் கவிஞர் பாரதியார் கூறுவன – (1) பெண்களை  பருவமடையும் முன்பு திருமணம் செய்துகொடுக்கக் கூடாது. (2) அவர்களுக்கு  விருப்பமில்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. (3)  திருமணம் செய்துகொண்ட பிறகு அவள்  கணவனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது. (4)  முன்னோர்  சொத்தில் பெண்குழந்தைகளுக்குச் சம பாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது. (5)  திருமணமே இல்லாமல் தனியாக இருந்து  வணிகம், கைத்தொழில் முதலியவற்றால்  மதிப்புடன் வாழ விரும்பும் பெண்களை விரும்பியதொழில் செய்து …

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் – பாரதியார்

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால், நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்; பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே! – பாரதியார்

தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – பேராசிரியர் மு.முத்துவேலு சொற்பொழிவு

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-16 “தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மு.முத்துவேலு (தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார்.                       நாள்   : ஆடி 28, 2047 /  12.08.2016, வெள்ளிக்கிழமை                     நேரம்…