அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இலக்குவனார்

அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி   ஆட்சி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளோர். முறை வேண்டுவார்க்கும் குறை வேண்டுவார்க்கும் காட்சிக்கு எளியராய் இன்முகம் உடையராய் இருத்தல்  வேண்டும். பதவியின் உயர்வால் மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் பேயைப்போல் மக்களால் அவரும் அஞ்சப்படுவர். மக்கள் உளத்தில் அன்பை வளர்த்து ஆளுதல் வேண்டுமேயன்றி, அச்சத்தைப் புகுத்தி ஆளமுயலுதல் கூடாது. அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சிதான் ஆகும்.    மக்களாட்சி முறையில் பதவிகிட்டும் வரையில் மக்களோடு நெருங்கிப் பழகுவதும், பதவிகிட்டிய பின்னர்…

மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார்

மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர்     ஆளும் நிலையில் இருப்போர், மக்கள் விரும்பாத கொடுஞ் செயல்களைப் புரியின், “நம்மை ஆள்கின்றவர் கொடியர்” என்று மக்களால் வெறுக்கப்படுவர். மக்கள் ஆட்சியில் மக்களால் வெறுக்கப்படுவோர் ஆளும் நிலையிலிருந்து அகற்றப்படுவர். சில நாடுகளில்,  ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருக்கலாம். மறுதேர்தலில் மக்கள் மதிப்பிழந்து வீழ்ச்சியடைவர். சில நாடுகளில் ஆளும் காலத்திலேயே கொடியோரை வேண்டாம் என்று விலக்கும் முறைமை  இருக்கின்றது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட காலம்…

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்

அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்     பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார்.      அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்…

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 4/4 : மயிலை சீனி.வேங்கடசாமி

(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 தொடர்ச்சி) மறைந்துபோன தமிழ் நூல்கள் 4/4 அயலார் படையெடுப்பு  அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள்.   தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் வந்து போர்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை –   தொடர்ச்சி  கல்லூரியின் முதல்வராக இருந்த வேதாந்த(ம் ஐயங்கா)ர் ஓய்விற்குப் பின்பு பி.சா.சுப்பிரமணிய(சாசுதிரி) முதல்வராக வந்தார்; ஆராய்ச்சி ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் சமசுகிருதப் பற்றால் தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். ‘இலக்குவன்’ என்னும் பேராசிரியரின் தமிழ்ப் பெயரையே விரும்பாத முதல்வர் இவரைச் சமசுகிருத வெறுப்பாளராக எண்ணினார். தமிழின் தொன்மை, தூய்மை முதலானபற்றிய தவறான கருத்துகளை அவர் தெரிவிக்கும் பொழுதெல்லாம் சான்றுகளுடன் பேராசிரியர் மறுக்கத்…