தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்:  படிப்பு வட்டம் – திறனாய்வுக்கூட்டம்

மார்கழி 01, 2048 சனி திசம்பர் 16ஈ 2017 மாலை 5.30 க.க.நகர், சென்னை 600 078 தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்:   படிப்பு வட்டம் – திறனாய்வுக்கூட்டம்

இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு & கம்பதாசன் நூற்றாண்டு விழா,  சென்னை

  மார்கழி 02, 2048 – ஞாயிறு – திசம்பர் 17,2017 மாலை 5.30 – 7.30 தே.ப.ச.(இக்சா) மையம், எழும்பூர், சென்னை 600 008 இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு கம்பதாசன் நூற்றாண்டு விழா கவியரங்கம் அன்புடன் சோலை தமிழினியன் 9840527782

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 32

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 32 மார்கழி 01,2048  சனி  திசம்பர் 16,2017 மாலை 6.00 தஞ்சை பிரகாசும் நானும் சிறப்புரை: தஞ்சாவூர் கவிராயர்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்  அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது.  நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார்….

தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!   சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு தமிழ் எழுத்துகளைச் சிதைக்கும் முயற்சிகளில் காலந்தோறும் யாரேனும்  ஈடுபட்டுவருகிறார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் தலைமை நயனாளர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி,  மாண்பமை இந்திரா(பானர்சி) அம்மையார் மாண்பமை நீதிபதி செ.நிசாபானு அவர்களுடன் இணைந்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.  தமிழ்க்காப்புப் பணிகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு அருமையான தீர்ப்பு வழங்கியுள்ள அம்மையார் இருவரையும் தமிழுலகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். பிற நயனாளர்களும் இதுபோல் உணர்வுடன் செயல்பட்டுத் தீர்ப்பு வழங்கவும் வேண்டுகிறோம்….

தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?   “தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?” என்ற வினாவை மக்கள் எழுப்புவதே தவறுதான். தமிழக மீனவர்களைக்  காப்பதற்கு மாறாகப் பல வகைகளிலும் தாக்குகின்ற, சுடுகின்ற, அழிக்கின்ற இந்தியக் கடலோரப்படை அல்லது கப்பற் படை அல்லது இவை போன்ற அமைப்பு எப்படி அவர்களைக் காக்க முன்வரும்? தங்கள் பணிகளை இயற்கையே எளிதாக்கிவிட்டது என மகிழத்தானே செய்யும்? அதுதான் இப்பொழுது நடக்கிறதோ என மக்கள் ஐயுறுகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்குக் குமரி மாவட்ட மீனவர்கள் கொடும் புயலால்…

பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

கார்த்திகை 26, 2048 செவ்வாய்  12.12.2017 மாலை 6.00 கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா தலைவர்:  முனைவர் ஆசைத்தம்பி இராமையா, மலேசியா சிறப்புரை:  முனைவர் மறைமலை இலக்குவனார் திரு அன்பு செயா,ஆத்திரேலியா

இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து

ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018     ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University)  இங்கிலாந்து  இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு  SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL     கருப்பொருள்:  தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India    கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான…

விட்ணுபுரம் விருது 2017

விட்ணுபுரம் விருது 2017  2017 ஆம் ஆண்டுக்கான விட்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் மார்கழி 01, 02  / திசம்பர் 16,17 ஆம் நாள்களில் விட்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16  அன்று காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 அன்று காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். மாலை ஆறுமணிக்குப் பொது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தப்படைப்பாளிகளில் தனித்துவமானவர். தொடர்ந்து தோட்டத்தைக் களமாக…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06   தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…

 ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை -2 வெளியீட்டு விழா

    கார்த்திகை 24, 2047  ஞாயிறு 10.12.2017 மாலை 5 மணி  அரினா அரங்கம், அண்ணாநகர் வட்டகம் (இரவுண்டானா),   W-100, 2 ஆவது நிழற்சாலை, இந்தியன் வங்கி மாடி, சென்னை – 40.  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை  புத்தகம்-2.  (விண்ணகரக் கோயில் & கடம்பூர் மாளிகை , அத்தியாயங்கள்) (படக்கதை) வெளியீட்டு விழா   வரவேற்புரை : வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: திரு சீதா. செந்தாமரைக் கண்ணன் இ.வ.ப.,  வருமான வரி முதன்மை ஆணையர் (ஓய்வு). சிறப்புரை : அருள்திரு சகத்து கசுபர், தமிழ் சங்கம் 4. நன்றியுரை : திரு சரவணராசா பொன்னுசாமி, நிலா படக்கதை புத்தக வெளியீட்டகம். www.nilacomics.com தொலைபேசி: 26213146,. அலைபேசி: 9884806302.   முனைவர் பா.இறையரசன்,  செயலர், …

அப்பாத்துரையார் நூற்றொகுதி வெளியீடு – தமிழ்மண் பதிப்பகம்

அப்பாத்துரையம் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் 110- ஆம் ஆண்டு நினைவு நூல் வெளியீட்டு முன்பதிவுத் திட்டம் தமிழ்மண் பதிப்பகம்

1 5 6 7 9