தமிழ் வளர்கிறது! 1-3 : நாரா.நாச்சியப்பன்

தமிழ் வளர்கிறது! 1-3   விடுதலைத் தமிழ ரென்று  வீறுடன் பேசு கின்ற முடிநிலை காண்ப தற்கு  முழக்கடா சங்க மென்று திடுமென வீர ரெல்லாம்  திரண்டுவந் தெழுப்பு மோசை கடிதினிற் கேட்டேன் இன்பக்  களிப்பினில் துள்ளி வந்தேன். வடவரின் பிடியி னின்றும்  வளர்தமிழ் நாட்டை மீட்கத் திடமுடன் தொண்ட ரெல்லாம்  திரண்டனர் என்ற போது கடனெலாம் தீர்ந்தவன் போல்  களிப்புடன் ஓடி வந்து படையினில் சேர்ந்து கொண்டேன்;  பாடினேன் தமிழ்வாழ் கென்றே.   தமிழரின் நாட்டை மீட்போம்  தமிழ்நறு மொழியைக் காப்போம் தமிழரின்…

தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

தமிழ் நன்று என்றிரு! ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32    உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன. இதோ ஓர் எடுத்துக்காட்டு: உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம்      உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக்      குடல் நிரப்பி ஆனந்தம் அடைகின்றோரே அந்தோ திண்டாடும் ஏழைமகன் விடுதி வாசல்      தெருவோரம் நின்றானே கவனித்…

இனிது இயற்கைக் குளியல் -சுதாகர்

இனிது இயற்கைக் குளியல் இனிக்கும் இன்பக் குளியல் இனிது இயற்கைக் குளியல் குளம், ஏரிக் குளியல், உளம் விரும்பும் குளியல்; உள்ளங் கால் தொட்டதும், உள்ளம் உடம்புள் துள்ளும்; உடல் முழுதும் சிலிர்க்கும்; உடல் நீரில் மூழ்கப், பற்கள் வாத்திய மாக பண் ணொன்று பிறக்கும்; இழுத்து பிடித்த உணர்வை, ஓடை இழுத்துக் கொண்டு ஓடும்; குழந்தை மனம் ஓங்கும், அக்கம் பக்கம் மறக்கும், பரவசம் பிறக்கும்; நீரில் உள்ள வரை நிலைக்கும், நிலை குலைய வைக்கும்; உடல் மிதக்கும் வரை உள்ள சுகம்…

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! – ஏரூர் கே. நெளசாத்து

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! நல்லவர் போலவே நகைத் திருப்பார் – சிலர் நாவினில் நஞ்சை விதைத்திருப்பார் . உள்ளவை யாவையும் கறந்தெடுப்பார் – அவர் உண்மையைச் சொல்வதாய் நம்ப வைப்பார் , பசுத்தோல் போர்த்திய புலியாவார். – சிலர் பாதகம் செய்வதில் நரியாவார். எரிகின்ற வீட்டுக்குக் கொள்ளி வைப்பார் – அவர் ஏதேனும் செய்தியை அள்ளி வைப்பார். நல்லவர் கெட்டவர் பகுத்தறிவாய் – நீயும் நான்கு குணத்தையும் பிரித்தறி வாய் . கோடரிக் காம்பினை முறித்திடுவாய்.- நல்ல கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய். கவிஞர். ஏரூர்…

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – நாரா.நாச்சியப்பன்

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. முன்னுரை  என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன். இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப்பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள். நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை…

வா.செ.குழந்தைசாமி நினைவேந்தலும் தமிழ் மேம்பாட்டு விருது அளிப்பும்

ஞாயிற்றுக்கிழமை 10.12.2017 காலை 10.00 விவேகானந்தர் அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம் முனைவர் வா.செ.குழந்தைசாமி முதலாமாண்டு நினைவும் குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது அளிப்பும்  

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 – கி.சிவா

(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 – தொடர்ச்சி) காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4    தூதுப் பொருள்கள் பொதுவாக, தூது இலக்கியங்களில் எல்லாப் பறவைகளையும் தூதுவிடும் மரபு என்பது இல்லை. “தூது நூல்களில் 35 பொருள்கள் தூதுப்பொருள்களாக அமைந்துள்ளன. அவற்றில், குயில், கூகை ஆகிய இனப்பொருள்களைத் தூது விடுத்தனவாக அமைந்த நூல்கள் இன்று இல்லை” என்று ந.வீ.செயராமன், ‘தூதிலக்கியங்கள்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997, ப.192). அன்னம்,…

நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ.  1/2

நான் கண்ட வ. உ. சி.  1/2  திருவாளர் வ.உ. சிதம்பரம்(பிள்ளை) அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம். பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். (உ)லோக மான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள். பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்ற…

கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா

அன்புடையீர் வணக்கம்   கார்த்திகை 26, 2047  செவ்வாய் 12.12.2017  அன்று  மாலை 06.30 மணிப்பொழுதில்  பாரதிய வித்யா பவனில்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும்    ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை :  அமுதசுரபி ஆசிரியர் முனைவர்   திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி)  வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) தென்புலத்தார்     “படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசையாதலின் தென் புலத்தார் என்றார்” என்பது பரிமேலழகர் கூறும் உரையாகும். உலகத்தை அயன் படைத்தான் என்பதும் அப்பொழுது படைக்கப்பட்டவர்  தென்புலத்தில் உளர் என்பதும் அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஏன் படைக்கப் பட்டார்கள்? அவர்களுடைய கடமை யாது? தென்…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி)  வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                 அன்பும் அறனும் உடைத்தாயின்  இல்வாழ்க்கை                பண்பும் பயனும் அது (திருக்குறள்  45)                 இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும்,  உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம்  பெற்றிருத்தலாகும். அன்பு   பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை…