இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை

புரட்டாசி 06, 2049  சனி 22.09.2018  மாலை  6.00 அரங்கம் மகாலட்சுமி நல மன்றம் 11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ)  இராசா அண்ணாமலை புரம் சென்னை 600028 இலக்கிய அமுதம் தொடக்க விழா   தலைமை: திரு ப.இலட்சுமணன், இலக்கியச் சிந்தனை சிறப்புரை:  முனைவர் திருப்பூர் கிருட்டிணன், ஆசிரியர், அமுதசுரபி தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள்  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்  அரங்கம் அடைய

பெரியாரைப் படி! உரிமையைப் பிடி! – கவிஞர் கண்மதியன்

இளைய சமூகமே! பெரியாரைப் படி! எரிமலையாய் எழுந்துன் உரிமையைப் பிடி!   காற்றும் மழையும் புயலும் – இங்கே காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் – ஒன்றே புத்தியில் கொண்ட தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’ இம்மண் கண்ட மானுட ஏக்கம்!   கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார்! விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்! மேற்கிலோர்…

சிங்கப்பூரின் தந்தை (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, சென்னை

தமிழ்நாடு – சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, புரட்டாசி 01, தி.பி. 2049  திங்கட்கிழமை 17.9.2018 மாலை 5.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் “பாரதீய வித்யாபவன்” குளிரி முதன்மை அரங்கில் நடைபெறுகிறது. இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை கூத்தரசன் வரவேற்றுப் பேசுகின்றார். நா.சந்திரபாபு விழாவிற்குத் தலைமை ஏற்கிறார். சிங்கப்பூர் நாகை தங்கராசு (இ)லீ-குவான்-இயுவின் படத்தினைத் திறந்து வைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்…

தமிழ் – ச.சுதாகர்

தமிழ் தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க, தொடங்கினேன் கற்க தொல் காப்பியம். குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல் எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்; என் உயிர் உள்ள வரை, உணவு போல் உயிர்மொழித் தமிழை மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே! ச.சுதாகர் 

எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்

எம்மை மகிழ்விப்பாய்!   என் எழுதுகோல் களத்தில் உன்பெயர்தான் முளைக்கிறது என் இதழ்ச் செடியில் உன்பெயர்தான் பூக்கிறது என் மன ஊஞ்சலில் உன்பெயர்தான் ஆடுகிறது என் கண்ஆடிகளில் உன்பெயர்தான் தெரிகிறது என் செவி மணிகளில் உன்பெயர்தான் ஒலிக்கிறது என் புத்தகத் தோட்டத்தில் உன்பெயர்தான் மணக்கிறது என் இல்லக் கோயிலில் உன்பெயர்தான் குடியுள்ளது என் எண்ண வானத்தில் உன்பெயர்தான் பறக்கிறது என் வாணாளில் நீ வந்து எம்மை மகிழ்விப்பாய்!   – இளவல்  

திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை

ஆவணி 31, 2018 ஞாயிறு 16.09.2018 மாலை 5.00 மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை  6 தொகுதிகள் வெளியீடு தலைமை: பி.வரதராசன் முனைவர்: சு. இராமர் மூதறிஞர் இரா.இளங்குமரன் புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை  

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !    எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள்…

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்

  புரட்டாசி 30, சனி 15.09.2018  மாலை 6.00 விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்  சிறப்புரை : சத்தியானந்தன் [புனைகதையாளர், கவிஞர்,  புதின எழுத்தாளர், கட்டுரையாளர்] திரைப்படம், தொலைக்காட்சி ஊடகம் தரும் துய்ப்பறிவும் வாசிப்பின் மேன்மையும்   சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம், ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய  

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! -மறைமலை இலக்குவனார்

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா? ஆண், பெண் வேறுபாடுபற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங்  களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக்…

தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !

விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : தலைமையர் வி.உருத்திரகுமாரன் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை.  ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது…