ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம்‌ தொடர்ச்சி  சமுத்திரம்     சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன.77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 430-436

(தமிழ்ச்சொல்லாக்கம்: 426 – 429 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 430-436 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 430. Biology – உயிர் நூல் 431. பிராணதாரணப் பிரயத்தனம் – Struggle For Existence ‘போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பாயிருப்பவனே…