மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 72

(குறிஞ்சி மலர்  71 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 26 குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லைமயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.      — திருமந்திரம் அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான்…

தமிழவள்! – மு. இராமச்சந்திரன்

தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! – இலக்குவனார் திருவள்ளுவன் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . .  எத்தனை பேர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 426 – 429

(தமிழ்ச்சொல்லாக்கம்: 421-425 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 429-429 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 426. Mathematics professor – கணித நூற்புலவர் அக்காலத்தில் சென்னை பிரஸிடென்சி காலேசில் மாத மெடிக் புரொபெசராக (கணித நூற்புலவர்) இருந்து காலஞ்சென்ற…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.

(இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்         11.      கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம்                ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம்                பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான்                வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய்.         12.     அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும்                முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப்                புக்கெழீ யியல்பா யின்பம்…

பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்   பகலவனே ! – பழ.தமிழாளன்

பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்                     பகலவனே ! 1. மனுநூலை  நம்பவைத்து  மக்களையே             மடமைதனில்  ஆக்கி  வைத்த     மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத்          தோலுரித்த மாண்பின்  மிக்கோன் பனுவலெனும்  வேதத்தின் முடக்காற்றை           மணக்காதே  வைத்த  பெம்மான்      பிறப்பதனில் சாதிகண்டு  பரமனுச்சி                    அமர்ந்திருந்த  ஆரி  யத்தை நுனிநாவாம்  பகுத்தறிவின்  அம்பாலும்                     கோலாலும்  வென்ற  வீரன்       நற்றமிழத்  தன்மானம்  பகுத்தறிவால்              ஆரியத்தை விரட்டி  வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின்                        மூச்சுக்காற்  றாக  மாறித்   …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 9

(உ.வே.சா.வின் என் சரித்திரம், 8 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் “எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைப்பிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பியிருக்கிறேன். அவர் என் விசயமாக உள்ளத்தே கொண்டிருந்த கவலையை நான் முதலில் அறிந்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில் உணர்ந்து உருகலானேன். அவரிடம் எனக்கு இருந்த பயபக்தி வரவர அதிகரித்ததே யொழியக் குறையவில்லை. இளமையில் எனக்கு ஒரு…

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! –  தோழர் தியாகு

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி  வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று.  ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து…

திலீபன் சாகவில்லை!  – யோ புரட்சி

திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென‌ தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…

தமிழ்நாடும் மொழியும் 7 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும்மொழியும் 6 தொடர்ச்சி) தொல்காப்பியர் காலத் தமிழகம் அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலே தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களிலே பழமைச் சிறப்புடையது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் ஒரு பல்கலைக் களஞ்சியமாகும். அந்நூல் ஒரு பொன்னூல், அது இலக்கண நூல் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் மக்களின் செவ்விய வாழ்க்கையைக் காட்டும் நன்னூலுமாகும். இதனது பெயரும், இது இடைச் சங்ககால நூல் என்பதும் இந்நூலின் தொன்மையை நன்கு விளக்குகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் விரித்துக்கூறும் சிறப்புடைய ஒரே பழைய நூல் தொல்காப்பியமே! இதனை, “ஒல்காப் பெரும்புகழ்த்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 421-425

(தமிழ்ச்சொல்லாக்கம்: 417-420 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 421-425 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 421. Cinema – படக்காட்சி இவ்வழகிய நகரத்தில் நானாவித வியாபாரத் தலங்களும், கைத்தொழிற் சாலைகளும், நீதிமன்றங்களும், உயர்தரக் கலாசாலைகளும், நாடக மேடைகளும்; சினிமா…

1 2 5