வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1055-1060: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1061-1065
- சிறை வெருளி – Carcerophobia
சிறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சிறை வெருளி.
சிறைவாசிகளுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிந்து விடுமோ என்ற பேரச்சம் வரும்.
செல்வாக்கு உள்ளவர்க்கு ஒரு நிலைப்பாடு இல்லாதவர்க்கு ஒரு நிலைப்பாடு என நிலவுவதால், விசாரணையில் உள்ள கைதிகளுக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் சிறைபற்றிய அச்சம் மிகுதியாகின்றது. சட்டப்படியான குற்றம் புரியாதவர்களும் சிறைபற்றிய செய்திகளையும் கதைகளையும் படிப்பதாலும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகளில் காண்பதாலும் சிறைகள்பற்றிய பேரச்சம் வருகிறது.
carcer என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சிறை எனப் பொருள்.
00
- சிற்றுணாமனை வெருளி – Snicascophobia
சிற்றுண்டிகள் விற்பனையகம் குறித்த காரணமற்ற மிகையான பேரச்சம் சிற்றுணா மனை வெருளி.
சிற்றுணா மனையில் மலிவு விலையில் நொறுக்குத் தீனிகள், சிற்றுண்டிகள் தரப்படுமு்.இதனால் நலக்கேடான உணவுகளாக இருக்குமோ எனச் சிலர் பேரச்சம் கொள்வர். அதே நேரம், திரையரங்குகளில் அமையும் சிற்றுணா மனைகளில் எல்லாம் கூடுதல் விலையில் இருக்கும். எனவே, அங்கும் விலையைக் கண்டு பேரச்சம் கொள்வர்.
00
- சிற்றுரு / ஈ மோசி திரைப்பட வெருளி – Lapeliculadeemojiphobia
மோசமான இயக்கம், மோசமான கதைக்களம், மோசமான திரைக்கதை, மோசமான படம் என விருதுகள் வாங்கிய சிற்றுரு / ஈ மோசி(EMOJI) திரைப்படம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஈ மோசி வெருளி.
இராசுபெறி தங்க விருதுகள் (Golden Raspberry Awards/ சுருக்கமாக இராசீ விருதுகள்/Razzie Awards), மோசமான திரைப்பட ஆக்கங்களுக்கு வழங்கப்படும் விருதுகள்.
இசுபானிய (Spanish)மொழியில், La = தனி ஒருமைச் சுட்டுக் குறிப்பு/’the’, Pelicula = திரைப்படம், De = உடைமைக் குறிப்பு/’of’, Emoji = சிற்றுரு/’emoji’ எனப் பொருள்கள்.
00
- சிற்றெண் வெருளி – Micronumerophobia
சிற்றெண் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிற்றெண் வெருளி.
Micronumero என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிறிய எண் எனப் பொருள்.
00 - சீமை ஆல் வெருளி – Drusophobia
சீமை ஆல்(oak tree) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சீமை ஆல் வெருளி.
இதனைக் கருவாலி மரம் என்றும் குறிப்பிடுவர்.
இதனைக் குவெர்கசு என்னும் இனத்தைச்சேர்ந்தது என்பர். குவெர்கசு(Quercus) என்பது என்பது இலத்தீன் மொழியில் சீமை ஆல் / oak என்பதாகும்.
மர வெருளி (Dendrophobia) உள்ளவர்களுக்குச் சீமை ஆல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply