(வெருளி நோய்கள் 1116-1120 தொடர்ச்சி)

    செயற்கை நுண்ணறிவு குறித்த வரம்பற்ற பேரச்சம் செயற்கை நுண்ணறிவு வெருளி.
    கணிணி முதலான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு மனித ஆற்றலையும் விஞ்சுவதால் தீங்கு நேரும் என்ற பேரச்சம் கொள்கின்றனர்.
    செயற்கை உயிரி வெருளி(Logicomechanibiophobia) உள்ள வர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு வெருளி(Arachtophobia) வரும் வாய்ப்பு உள்ளது.
    00

    செய்தித்தாள் குறித்த வரம்பற்ற பேரச்சம் செய்தித்தாள் வெருளி.
    திடீர் இறப்புகள், பயங்கரமான நேர்ச்சி( விபத்து)கள், துயர நிகழ்வுகள் , போர்ச்செய்திகள் முதலானவற்றைப் படிக்க நேர்வதால் செய்தித்தாள் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உறவினர்களிடையே நடைபெறும் சண்டைகள், கத்திக்குத்து, கொலைகள் முதலான செய்திகளைப் படித்துச் செய்தித்தாள் வெருளிக்கு ஆளாவோர் உள்ளனர். துயரத்தின் பாதிப்பால் ஒரு புறமும் இவை போன்ற நேர்வுகள் தங்கள் குடும்பத்தில் நிகழுமோ என்ற பெருங்கவலையும் பெருவெறுப்பாகிச் செய்தித்தாள் வெருளியாக மாறி விடுகின்றன.
    00

    செய்யுள் மீதான அளவுகடந்த பேரச்சம் செய்யுள் வெருளி.
    பள்ளிப்பருவத்தில் செய்யுள் படிப்பது அல்லது எழுதுவது குறித்த பேரச்சம் கொண்டு அதனை வெறுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதுவே நாளடைவில் வளர்ந்து செய்யுள் வெருளியாக மாறுகிறது.
    சிலருக்கு எல்லாச் செய்யுள்கள் மீதும் வெறுப்பும் அதனால் அச்சமும் இருக்கும். சிலருக்குக் குறிப்பிட்ட செய்யுள் வகைமீது மட்டும் பேரச்சம் இருக்கும். சிலருக்குக் குறிப்பிட்ட பாடுபொருள் தொடர்பான செய்யுள்கள் மீது மட்டும் பேரச்சம் இருக்கும்.
    00

    செயற்கைக்கோள் தொடர்பான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் செய்கோள் வெருளி.
    செய்கோள் (செயற்கைக்கோள்/satellite) தலையில் விழுந்துவிடும் என்று பேரச்சம் கொண்டு தலைக்கவசம் அணிந்து வெளியில் செல்பவர்களும் உள்ளனர் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    00

    பெருமை / செருக்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செருக்கு வெருளி.
    Yperifaneia என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செருக்கு என்று பொருள்.
    00