(சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 தொடர்ச்சி)

1056. Appropriate allocation     உரிய ஒதுக்கீடு
உரியவாறு ஒதுக்கீடு செய்தல்


சட்டப்பணிகள் ஆளாண்மைச் சட்டம்1987, பிரிவு 4இல்(S. 4(c) LSAA,1987 – Section 4 in The Legal Services Authorities Act, 1987) தம் முடிவிற்கேற்ப நிதிகளைப் பயன்படுத்தவும் மாநில அதிகாரர்களுக்கும் மாவட்ட அதிகாரர்களுக்கும் உரியவாறு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

authority என்பது அதிகாரம் உள்ள அமைப்பு. அதிகாரி என்றும் குறிப்பிடுவர். அதிகாரம் உள்ள ஆளை அதிகாரன் என்று முன்னர்க் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரம் உள்ளவர்களைக் குறிப்பதாயின் அதிகாரர்கள் எனலாம். அதிகாரம் உள்ள ஆளுமை அமைப்பைக் குறிப்பதாயின் ஆளாண்மை எனலாம்.
1057. Appropriate authorityஉரிய ஆளாண்மை
உரிய அதிகார அமைப்பு
உரிய அதிகாரி


உரிய அதிகாரன் ஊர், நகரம், அல்லது நாட்டின் ஆளுகைக் குழுவே தக்க ஆளாண்மையாகும்.  
விதிமீறல் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அதிகாரம் மிக்க அமைப்பு இதன் தொடர்பில் தக்க ஆளாண்மையாகும்.
காண்க: Appropriate
1058. Appropriate case   பொருத்தமான வழக்கு
உரிய நேர்வு
தக்க நேர்வு
உகந்த நேர்வு  

வாதுரையின் பொழுது முன் நிகழ்வைக் குறிப்பதாயின் பொருத்தமான வழக்கையே குறிப்பிட வேண்டும். தொடர்பில்லாத வழக்கைக் குறிப்பின் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

காண்க: Appropriate
1059. Appropriate forum  தக்க அமைப்பு
உரிய அமைப்பு
உகந்த அமைப்பு


அதிகாரம் செலுத்துவதற்குரிய அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது நிதியைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது வழக்கைத் தொடுப்பதற்குரிய அல்லது வழக்கை எதிர்கொள்வதற்குரிய தக்க அமைப்பு.
1060. Appropriate government   உரிய அரசு

ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை ஆளுவதற்கு முறைப்படியான அதிகாரம் படைத்த அரசு.

மரணத்தண்டனையைச் செயற்படுத்துவதற்கு அல்லது மரணத்தண்டனைய மன்னித்துக் குற்றவாளியின் தண்டனையைக் குறைப்பதற்கு அல்லது நீக்கி விடுதலை செய்வதற்கு அல்லது பிற தண்டனைகளை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு அதிகாரம் உள்ள அரசு