வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1607-1610
- பந்தய ஊர்தி வெருளி – Saichephobia
பந்தய ஊர்தி(race car) மீதான வரம்பற்ற பேரச்சம் பந்தய ஊர்தி வெருளி.
பந்தய ஊர்திகள் நேர்ச்சிகள் குறித்த செய்திகளாலும், பங்கேற்பர்களிடம் போட்டி மனப்பான்மை இல்லாமல் பொறாமை மேலோங்குவதாக அறிய வருவதாலும் சாலைவழி செம்மையாக இருக்குமா என்ற கவலையாலும் பேரச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
00 - பந்து வீச்சு வெருளி – Bowlingphobia/ Pallosmokarfitsophobia
பந்து வீச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பந்து வீச்சு வெருளி.
பந்தைச் சரியாக வீச முடியுமா என்ற பயம், தசைகளில் ஏற்படும் இறுக்கம், முந்தைய தவறுகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகள் பந்துவீச ஓடிவரும் போது அல்லது மட்டையாளைப் பார்க்கும்போது ஏற்படும் கடுமையான பயம் அல்லது நடுக்கம், பிழை வீச்சு(No Ball)அகல் வீச்சு(Wide Ball) ஏற்படுமோ என்ற காரணமற்ற கவலை ஆகியவற்றால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00 - பயங்கரத் திரைப்பட வெருளி – Horametophobia
பயங்கரத் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பயங்கரத் திரைப்பட வெருளி.
திகிலூட்டும் காட்சிகளைப்பார்க்கும் பொழுது கற்பனையாக எண்ணாமல், நேரிடையாக ஏற்படுவதாகக் கருதிப் பேரச்சம் கொள்வர்.
“hora me to” என்னும் சப்பானியத் தொடருக்குப் பார் என் கண்களைச் சந்தி எனப் பொருள்.நேருக்கு நேர் பார்க்குமாறு கூறுவது.
திகிலூட்டும் காட்சிகளைநேருக்கு நேர் பார்ப்பதற்குத் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00 - பயண வெருளி-Amaxophobia / Hamaxophobia
பயணம் மேற்கொள்வது தொடர்பில் தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது பயண வெருளி.
யாத்திரை என்பதும் தமிழ்ச்சொல்லே. எனவே, யாத்திரை வெருளி என்றும் சொல்லலாம். ஆனால், இருவகை வேண்டா.
பயண வெருளி உள்ள பலர் தாங்களே ஓட்டுநராக இருக்கும் பொழுது அஞ்சுதில்லை. ஓட்டுநர் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் பொழுதும் சிலர் அஞ்சுவதில்லை.
சாலைப்பயணத்தில்/இருப்பூர்திப் பயணத்தில்/கடல் பயணத்தில் /வானூர்திப் பயணத்தில் இடையூறு ஏற்படும், நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடன் பயணம் செய்யாத பிற ஓட்டுநர், நடப்போர், கடப்போர், விலங்கினங்கள், வானிலை போன்ற பிற சூழல்களால் நேர்ச்சி ஏற்படும் என்று அஞ்சி இதன் தொடர்பிலான கவலைகளையும் அச்சத்தையும் வளர்த்துக் கொண்டு பயணம் மீது பேரச்சம் கொள்வர்.
Amaxo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வாகனம்.
hயmaxa என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வண்டி / ஊர்தி.
காண்க: பொறிஊர்தி வெருளி-Motorphobia; ஊர்தி வெருளி – Ochophobia
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply