(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  431 – 451 இன் தொடர்ச்சி)
453. கணித இயற்பியல்Mathematical physics
454. கணிணி சார் பொறியியல்Computer-Aided Engineering
455. கணிதப் புவியியல்Mathematical Geology
456. கணித வியல்Mathematics
457. கணிப்பி மொழியியல்Computational linguistics
458. கணிப்பிப் பொறியியல்Computer Engineering
459. கணிப்பியப் பாய்ம இயங்கியல்Computational Fluid Dynamics
460. கணிப்பியப் புள்ளியியல்Computational statistics
461. கணிப்பொறி வரைவியல்Computer Graphics
462. கணிய நுட்பியல்Software Technology
463. கணன வானிலையியல் Astrometeorology – சோதிடக் கலை மூலம் வானிலையைக் கணிப்பது.  எனவே இதனைக்   கணன வானிலையியல் – Astrometeorology எனலாம்.Astrometeorology
464. கணிவட்டிலியல்Gnomonology
465. கணையனியல்Cenematics
466. கணையாழி இயல் கணையாழி / மோதிரம் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.Dactyliology(1)
467. கண்ணியல் Ophthalmology – கண் இயல், கண் மருத்துவம், கண்ணியல், கண்ணாய்வு நூல்,  கண்ணமையப்புப் பாயுனுல், கண்ணமைப்புப்பாய்வு நூல், விழியியல், கண் மருத்துவயியல், கண் சிகிச்சை எனப்படுகிறது. கண்ணமையப்புப்பாயுனுல், கண்ணமைப்புப்பாய்வு நூல் என்பன கண்ணமைப்பாய்வு என்றே இருக்க வேண்டும். தட்டச்சுப்பிழை. முதல் சொல்லில் வேறு தட்டச்சுப் பிழையும் உள்ளது. கண்கள், கண்நோய்கள், கண்மருத்துவம் முதலியவை பற்றிய அறிவியல். எனவே, மேற்கண்டவாறு கூறப்படு கின்றன. இவற்றுள் சிகிச்சை தமிழ்ச்சொல்லல்ல.  Ophthalmós என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கண். Ophthalmo என்றால் கண் தொடர்பான எனப் பொருள். எனவே மேற்குறித்த யாவும் சரிதான். எனினும் தரப்படுத்தல் கருதிச் சுருக்கமான கண்ணியல் என்றே குறிப்பிடுவோம்Ophthalmology
468. கண்ணி நுட்பியல்Loop Technology
469. கதிரிய உயிரியல் Actinobiology – கதிரிய உயிரியல், கதிர் விளைவியல், ஒளிக் கதிர் உயிரியல், ஒளிய உயிரியல், (நிற) ஒளிய உயிரியல். ஒளி விளைவியல், ஒளிவேதி இயற்பியல், மின்காந்தக் கதிர்வீச்சியல் எனப்படுகின்றது. Radiobiology என்பது கதிரியக்க உயிரியல் எனப்படுகிறது. Actin என்பது கதிர் என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. எனவே, Actinobiology / Radiobiology கதிரிய உயிரியல் எனலாம். மின்காந்தக் கதிர்வீச்சியல்  என்பது  electromagnetic radiation ஆகும். எனவே அதனை இதனுடன் சேர்க்க வேண்டா. ஒளிவேதி இயற்பியல் என்பது Photo-physics and photochemistry ஆகும். எனவே, இதனையும் இதனுடன் சேர்க்க வேண்டா. Actinobiology / Radiobiology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000