(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  722 – 745 இன் தொடர்ச்சி)

746. தகவலியல்

Informatics

747. தகவல் தொடர்புப் பொறியியல்

Communication Engineering

748. தகவல் நுட்பியல்

Information Technology

749. தகவல் முறைமைப் பொறியியல்

Information Systems Engineering

750. தகைமையியல்

Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர்.   தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும்.  Axiology  என்பதை விழுமியம் என்பதால் இதனைத் தகைமையியல் எனலாம்.

Timology

751. தசைநாணியல்

Tenontology / Syndesmology

752. தசையியல்

Myology

753. தடய இயற்பியல்

Forensic physics

754. தடய மானிடவியல்

Forensic Anthropology

755. தடயவியல்

Forensic Science

 

756. தடயக் கதிரியல்

Forensic Radiology

757.தடுப்பு இனமேம்பாட்டியல்

Preventive eugenics

758. தடுப்பூசியியல்

vaccine – பகைப்பால், அம்மைப் பால், அம்மைப்பால், ஆவைன், ஊசியேற்றம், தடுப்பாற்றல் மருந்து, தடுப்பு ஊனீர், தடுப்பு மருந்து, தடுப்புநிரல், தடுப்பூசி, தடுப்பூசி மருந்து, பாலேற்றம், வேக்சின் பகைப்பில் எனப்படுகிறது.

வேக்சின் பகைப்பில் என்பதில் பகைப்பால் என்பது தான் தட்டச்சுப் பிழை யாகப் பகைப்பில் எனக் குறிக்கப் பட்டுள்ளதா எனத் தெரிய வில்லை. அல்லது இது சரி என்றால் விளக்கம் தெரிய வில்லை. எப்படியாயினும் ஒலிபெயர்ப்புச் சொல்லையும் கலந்து கியூ வரிசை என்பதுபோல் சொல்லப் பட்டுள்ள இச்சொல் விலக்கப்பட வேண்டும். ஒலி பெயர்ப்பிலும் வேக்குசின் என்றுதான் குறிக்க வேண்டும்.

மாட்டம்மைப் பாலை எடுத்து மனிதர்களுக்குப் போடும் முறை என்பதால், இலத்தீனில் பசு என்னும் பொருளுடைய vacca என்னும் சொல்லில் இருந்து vaccīnus  உருவானது.

தொடக்கத்தில் அம்மைக் கான அம்மைப்பால் ஏற்றப் பட்டிருந்தாலும் பிறகு எல்லா நோய்க்குமான தடுப்பூசி களையும் குறிப்பதாக அமைகிறது. எனவே, சுருக்கமாகத் தடுப்பூசி எனலாம். தடுப்பூசிகள் ஆக்கம், மேம்பாடு குறித்த அறிவியல் இது.

எனவே,

தடுப்பூசியியல் -Vaccinology  என்பதையே பயன்படுத்தலாம்.

Vaccinology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000