தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது
(தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது இனிய அன்பர்களே! இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையை (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) தாழி மடல் 153இல் வெளியிட்டிருந்தேன். உங்களில் சிலராவது சற்றே நீண்ட அந்த உரையைப் படித்திருக்கக் கூடும். அந்த உரையில் காணப்படும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் திரு அரி பரந்தாமன் தாழிக்கு…
தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 172 : பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் பொழில்வாய்ச்சி (பொள்ளாச்சி) கள்ளிப்பாளையம்புதூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வெள்ளி விழா நேற்று(10.04.23) இனிதே நடந்து முடிந்தது. இனிய நண்பர் சந்துருவை நீண்ட காலத்துக்குப் பிறகு பார்த்துப் பேசிக் கொண்டிருக்க இது நல்ல வாய்ப்பாயிற்று. அவருடனான நட்பு-தோழமை பற்றி நிறைய எழுத வேண்டும். பிறகு எழுதுகிறேன்.நேற்றைய நிகழ்வில் அவர் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைப்பட்டோர்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787 – 790
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 776 – 786 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787- 790 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 787. Loudspeaker – ஒலிபெருக்குங் கருவி திரு. பெ. இராம. இராம. சித. சிதம்பரம்…
புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன் பொதுவாகத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதிர் நிலையில் செயற்பட்டாலும் இந்தி எதிர்ப்பு, மும்மொழித்திட்ட எதிர்ப்பு, தமிழ் முழக்கம், தமிழ் நலத்திட்டங்கள், ஆட்சித்தமிழை வலியுறுத்தல் போன்றவற்றில் செய்வனவற்றிலும் செய்யத் தவறுவனவற்றிலும் ஒற்றுமை உண்டு. ஆட்சி மாறினாலும் அரசு மாறாது என்பதற்கு இவர்களின் இவை தொடர்பான கொள்கைகளே சான்றாகும். இரு கட்சிகளின் அரசுகளுமே அனைத்து வகுப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்பட வெவ்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன, இப்போதும் ஆளும் அரசு எடுத்து வருகிறது. தமிழ் மக்கள்…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8 தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை ஒரு சிறு வேடிக்கையான விசயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணிதப் புத்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் கல்லூரியில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, சகதீச ஐயர், வே. பா. இராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 172 : பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 171 : பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8 இதையெல்லாம் செய்யாமல் அவர்கள் மொழி அரசியல் செய்தார்கள் என்று புலம்பினால்? வயிற்றில் குத்திக் கொண்டாளாமே! குந்தி தேவி அம்மிக்குழவியை எடுத்து, அப்படிக் குத்திக் கொள்ள வேண்டுமா? இது அவ்வளவு எளிதல்ல. இரண்டாவதாக இன்னொன்றைப் புரிந்து கொள்ளுங்கள்: மொழி அரசியல் என்பது வெறும் மொழி அரசியல் அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்கான அரசியல். தமிழ் ஆளாமல் தமிழர்கள் ஆள முடியாது. தமிழர்கள்…
முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 தொடர்ச்சி) முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 27 மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022) “தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர் தொடர்ச்சி) என் சரித்திரம் – பாகம் 2 26. மாயூரப் பிரயாணம் 1/2 செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருlம் மார்கழி மாதமுதல் பங்குனி வரையில் (1870 திசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகப்பட்டின புராணம் அரங்கேற்றிப் பூர்த்தி செய்துகொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும் மாயூரத்திற்கே வந்துவிட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த செய்திகளெல்லாம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 171 : பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8 நமக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன வழி தெரியுமா? தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாடே முடிவு செய்து கொள்ளும் என்கிற கோரிக்கைக்காகப் போராடி வெற்றி பெறுவது ஒன்றுதான் இதற்கு வழி. ஏனென்றால் தமிழ்நாட்டில் எவனும் எதிர்க்க மாட்டான்! வெளியில் வந்து பேச மாட்டான். மண்டல்குழு வந்த போது பாச கவே எதிர்க்கவில்லை. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயலலிதா பாதுகாத்ததற்காக சமூக…
தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8 இந்திய அரசு வங்கியில் தேர்வு வைத்து எடுக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் எசுசி எசுடி பிசிக்கு எல்லாம் 80 மதிப்பெண் 90 மதிப்பெண் வந்தால் இந்த பொ.ந.பி (E.W.S.) யில் பார்ப்பனர்களுக்கு 28 மதிப்பெண் வருகிறது ஒரே ஒரு கேள்விதான் நண்பர்களே இந்த இட ஒதுக்கீடு என்கிற பேச்சு எழுந்தாலே பார்ப்பனர்கள் அவர்களுடைய அறிவாளர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? தகுதி…
ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்
(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும் துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம் தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…
தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 ஆனால் விபிசிங்கு அவர்கள் பதவி போனால் போகட்டும் என்று இதைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அப்படி அவர் உறுதியாக இருந்ததால் மண்டல்குழு பரிந்துரை செயலுக்கு வந்தது. நீதிமன்றத்தில் போய் வழக்குப் போட்டார்கள். அதுதான் இந்திரா சாகுனி வழக்கு. அதில் பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்றார்கள். ஒரு சிறுபான்மையினர் செல்லாது என்றார்கள். விபிசிங்கு அரசைக் கவிழ்த்து விட்டு நரசிம்மராவு வந்தார். ஆந்திரத்தின் சூழ்ச்சிமிக்க…
