இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 8 சிறந்தோரைப் பாராட்டிப் புகழ வேண்டா என்று கூறவில்லை. வியத்தல் வேண்டா என்றுதான் கூறுகின்றார். வியத்தல் என்றால் அளவுக்கு மீறி இல்லாத சீர்மைகளை இருப்பதாகப் புகன்று உயர்த்துதல். அதுதான் வேண்டா என்கிறார். அதனினும் ஒருவரைப் பதவியில் புகழில் பொருளில் சிறியவரென்று இகழ்தல் மிகக் கொடியது. ஆகவே இகழ்தலும் வேண்டா என்கிறார். வியந்து போற்றினாலும் போற்று; ஆனால் இகழ்ந்து விடாதே என்பதுதான் அவர் அறிவுரை. தம் இயல்பு கூறுவார்…

தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

(தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 சரி, இந்தச் சமூக மற்றும் கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எந்த ஊரில் அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? அப்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பின்தங்கிய வகுப்புகள் –  இதுதான் அம்பேத்துகர் பயன்படுத்திய வார்த்தை – சமூக வழியில் கல்வி வழியில் பிற்பட்ட வகுப்புகள் என்றனர். ‘கிளாசு’ என்றால் என்ன? அந்த ‘கிளாசு’க்குள் மறைந்திருப்பது ‘காசுட்டு’. நீங்கள்  ‘பிசி’ என்பதை எப்படிக்…

பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை

(பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக- தொடர்ச்சி) 2. பழியுரை காதை வஞ்சியின் கவலை முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம் 5 தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி சோரா  நின்றனள் ; தன்மகட் டோழி தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும் 10 தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள், தேன்மொழி செல்லல் அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி…

தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8

(தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 உயர்நீதிமன்றத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள்?  வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்துகிற வரை வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு உதவியாக இன்னொருவர் நீதிபதியாக இருந்தார்கள். அவர்கள் பார்ப்பனர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான். வேறு யாரவது ஒரிருவர் இருந்திருக்கலாம். இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அந்த கம்யூனல் அரசாணையோ செல்லாது என்று சொல்லி விட்டார்கள். திரும்பவும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்கள்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 786

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 786 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 776. சப்தாலங்காரம்          –              சொல்லணி 777. அர்த்தாலங்காரம்      –              பொருளணி 778. உபமாலங்காரம்        –             …

தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8

(தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 இப்போது இந்தக் கூட்டத்தைக் கேட்டுக்  கொண்டு தெருவில்  நின்று கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் ஒரு கணக்கெடுத்துப் பார்ப்போம் எவருக்காவது 8 இலட்சம் உரூபாய் வருமானம் இருக்கிறதா? இல்லை, 8 இலட்சத்திற்குக் கீழே இருந்தால் நீங்கள் எல்லாம் ஏழைகளாம்! எட்டு இலட்சம் வந்தால்தான் நீங்கள் ஏழை இல்லை. அதற்கு மேலே போக வேண்டும். நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தாலின் அவர்கள் இந்த நவம்பர் 12ஆம் நாள் கோட்டையில் அனைத்துக்…

மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே! தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த…

தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8

(தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4. தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 இது போன்ற ஒரு தெருமுனைக் கூட்டத்தை இப்போது நடத்த வேண்டிய தேவை என்ன?  இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் இலாவணிகளுக்கு நடுவே, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே, கொள்கை சார்ந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். ஒன்று, இந்தித் திணிப்பை எதிர்ப்போம், தமிழ் மொழி காப்போம்! இரண்டு, பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான…

தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4.

(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4 மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள். சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7 தொடர்ச்சி) இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர்களுள் இராமராய நிம்கார், பார்த்தசாரதி இராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாசையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஅசுத்தி சமசுதானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய இராமராய நிம்கார் பானகல் இராச பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி இராய நிம்கார் தற்காலம் பானகல் இராசாவாகி சீவிய திசையில் இருக்கிறார். மற்றெருவர் வே. பா. இராமேசம்….

நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல

நூலாய்வு:சமற்கிருதம் செம்மொழியல்ல வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்தையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.–…

நன்னன் நூற்றாண்டு நிறைவு

நாள் : ஆடி 14, 2054 / 30.07.2023 ஞாயிறு மாலை 6.00வயவர் பிட்டி தியாகராயர் கலைமன்றம்சென்னை 600 017 மாப்புலவர் மானமிகு மா.நன்னனுக்கு நூற்றாண்டு நிறைவுநன்னன்குடி நடத்தும் பரிசளிப்பு விழாமானமிகு இரா.செம்மல் நினைவாகக்குழந்தைகளுக்காகச் சிறுகதைப்போட்டி-பரிசளிப்பு விழா தலைமை : ஆசிரியர் வீரமணிசிறப்புரை : முதல்வர் மு.க.தாலின்