தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ!

(தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் தாெடர்ச்சி) செந்தமிழ்க்கோ!  இனிய அன்பர்களே! இனவழிப்புத் துயரத்தில் அமிழ்ந்த ஈழ மண்ணிற்கு மிக நெருக்கமான ஒரு தமிழ்நாட்டுப் புள்ளியில்…  கோடியக்கரைக் கடலில் உப்புநீரில் கால் நனைத்துப் பின் கரையேறிக் கதிரொளி முதுகுதொட ஊக்கத்துடன் நெடுநடைப் பயணத்தைத் தொடங்கிய போது எங்கள் அணியில் முதல் வீரரராக இயக்கக் கொடியேந்தி நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ. யார் இந்தத் தாடிக்காரர்? எனக்கு அதுதான் அவரோடு முதல் அறிமுகமே. எங்கள் அணியில் அவர்தான்…

பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும்

(பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை – தொடர்ச்சி) பூங்கொடி 3 : பதிப்புரை உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ளனர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம். அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆனால், மறக்க முடியாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத்திற் கொண்டு உணர்ச்சி குன்றா…

தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தொடர்ச்சி) பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் இனிய அன்பர்களே! குசராத்தில் 2002ஆம் ஆண்டு நரேந்திர மோதி ஆட்சியில் நடந்தது என்ன? மதக் கலவரமா? இல்லை. தற்செயலாக வெடித்த வன்முறை நிகழ்ச்சிகளா? இல்லை. உண்மையில் நடந்தது இசுலாமிய மக்கள் மீதான இனக் கொலை; திட்டமிட்ட இனக் கொலை. நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வழிநடத்திய இனக் கொலை என்பதை நாம் முன்பே அறிந்து வைத்துள்ளோம், பல முறை கூறியுள்ளோம் என்றாலும் பி.ஒ.நி.(பிபிசி)யின் மோதி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 733. Homeopathy – ஒப்புமுறை வைத்தியம் பல நோய்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையினாலேயும் நல்லுணவு கொள்ளாமையினாலும் ஏற்படுகின்றன. ஒழுங்கான வாழ்க்கையும் சுகாதாரமான உணவும் நோயைத் தடுப்பன என்று ஒப்புமுறை (Homeopathy)…

தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ் நாசரின் பேச்சு

(தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி – தொடர்ச்சி) குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எசுஎசு மாணவர் பிரிவான அ.பா.மா.அ. (ஏபிவிபி) குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அன்புத் தோழர் தமிழ்நாசர் தாக்கப்பட்டதை அறிவீர்கள். அப்பொழுது  குருதிக் காயத்தோடு அவரது மருத்துவமனைப் படமும் கண்டு நானும் தோழர்களும் பதறிப் போனோம். சப்தர்சங்கு மருத்துவமனையில் காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு திரும்பி வந்ததும் தொலைபேசி வழி அவர் தெரிவித்தவை வருமாறு: ச.நே.ப.(J.N.U.) மாணவர் சங்க அலுவலகத்தில் ‘நூறு பூக்கள்’ (100…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’   3. தாய் தந்தையர் போற்றல்

(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 2. தொடர்ச்சி) என் சுயசரிதை’   3. ஏழைக் குடும்பம் தொடர்ச்சி அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சிபுரம் சிரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் சிரீ ஏகாம்பரேசுவரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீசுவரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தருமகர்த்துவாக இருந்தார். அவர் சீவித காலத்தில் வருடா வருடம் காஞ்சிபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த…

தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி

(தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்ச்சி) இரத்தினம் மணி தாழி குறிப்பு: வழக்கறிஞர் இரத்தினம் அன்று போலவே இன்றும் களத்தில் நிற்கிறார். 1980ஆம் ஆண்டு சென்னைச் சிறையில் என்னையும் தோழர்களையும் நேர்காண வந்த இளைஞர் இரத்தினம் இப்போதும் அதே துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். பகைவர்களையும் நண்பர்களையும் உறங்க விட மாட்டார்.    திண்ணியம் வழக்கைத் திறம்பட நடத்திய வழக்கறிஞர் சு.க. மணி என் கல்லூரி நண்பர், குடந்தை கல்லூரியில் அறிவியல் இளநிலையில் எனக்கு ஓராண்டு மூத்தவர். சேக்குசுபியரின் ஒதெலோ நாடகத்தின் ஒரு காட்சியை…

என் சரித்திரம் 41 : தந்தையார் சிவ பூசை

(என் சரித்திரம் 40 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி) தந்தையார் சிவ பூசை அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சிலநாள் தங்கினோம். அங்கே என் பிதா என் மாதாமகரிடம் படிக லிங்க பூசையை எழுந்தருளச் செய்துகொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சிசுந்தரேசுவர ரென்பது திருநாமம். குடும்பத்துக்குரிய பூசையை அதுகாறும் செய்துவந்த எந்தையார் அக்கால முதல் சிவபூசையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என் பாட்டனாரைப் போலவே அபிசேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமற் பூசை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவபூசையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார்….

தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ –  தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உலகத் தாய்மொழி நாள் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு!…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 39 – மலையும் குன்றும் – தொடர்ச்சி

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும் தொடர்ச்சி) மலையும் குன்றும் – தொடர்ச்சி காளத்தி மலை     தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12 “கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடும்” காளத்தி மலையைக்கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13  திருவாட் போக்கி மலை     திருச்சி நாட்டுக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ

(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் ஆ. தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் –  இ மருத்துவச்சான்று வலுவற்று இருப்பதாக நீதிபதி குறைபட்டுக் கொள்வது பொருளற்றது. தாக்குண்டவர்கள் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது காயங்கள் பெரும்பாலும் ஆறிப்போய் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 323 / 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி இதே மருத்துவச் சான்றைத்தான் நம்பியுள்ளார். வழக்குரைஞர்களின் போற்றத்தக்க பணி இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 42 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 3  மக்கள் பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழ்ந்துள்ளனர். முதியோர் கையில் கொண்டிருந்த கோலே தொடித்தலை விழுத்தண்டு என்று கூறப்படுகின்றது. அத் தண்டினைக் கொண்டிருந்த முதியோர் தம் கடந்த கால வாழ்வை நினைந்து இரங்குகின்ற முறையில் பாடப்பட்டுள்ள பாடல் பல முறை படித்துச் சுவைக்கத் தக்கது.             இனிநினைந்து இரக்க மாகின்று; திணிமணல்             செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்             தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து             தழுவுவழித் தழீஇத்…