”நான் பார்வையாளன் அல்லன்” நாடகமும் ஃச்டேன்சாமி குறித்த முந்நூலும்

ஆவணி 28, 2053 சனி மாலை 4.30 13.08.2022 அருண் உணவகம், தொடரிநிலையம் அருகில், திருச்சிராப்பள்ளி

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 12

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்  11 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி “என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!” “நான் வைசிய குலம். ………..”“நான் உப்பிரசாதி . . . . . . . . . . . .” “உப்பிரசாதியில் பெண் கொள்ளும் வழக்கம்,…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 355-361

(தமிழ்ச்சொல்லாக்கம்: 346-354 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 355-361 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 355. காவி வசுத்திரம்    —        துவராடை 356. தவசிகளின் ஆசிரமம்      —        நோன்புப்பள்ளி 357. இயந்திரம்           —        பொறி 358. முத்திரை மோதிரம்         —        பொறியாழி 359. விவாகச் சடங்கு  —        மணவினை 360. நட்சத்திரம்           —        விண்மீன் நூல்      :           சித்தார்த்தன் (1918) நூலாசிரியர்      :           அ. மாதவையர் அருஞ் சொல் உரை      :           அ. மாதவையர் ★ 361. சுவதேச கீதங்கள் – நாட்டுப்பாட்டு 1907 – ஏப்பிரல் –…

தமிழ்,தமிழர்,தமிழ் நிலம் – இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் : உரையரங்கம்

தமிழ்க்காப்புக் கழகம் ஆடி 29, 2053 / 14.08.2022 ஞாயிறு  காலை 10.00 இணைய வழி இந்திய விடுதலை நாள் உரையரங்கம் தமிழ், தமிழர், தமிழ் நிலம் – இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் உரையாளர்கள்: தோழர் தியாகு தோழர் பொழிலன் திருவாட்டி புனிதா சிவக்குமார் வரவேற்புரை: திரு. ப.சிவக்குமார் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை: : தமிழாசிரியை (உ)ரூபி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)    …

எரிமலையும் சிறு பொடியே! – தனிமையின் நண்பன்

எரிமலையும் சிறு பொடியே! கண்ணாடி முன் நின்று பார் கவலையை முகத்தில் அகற்றிப் பார் ஓய்வின்றி உழைக்கும் கடலலையென ஓயாது முயற்சி செய்து பார் உன்னை நீயே அறிந்து பார் உலகமே சிறிதெனக் கூறிப் பார் எறும்புகளை உற்றுப் பார் எவ்வளவு ஒற்றுமை வியந்து பார் தோல்வியில் சிரித்துப் பார் அதில் கற்றதை உணர்ந்து பார் ஆசையைத் துறந்து பார் அச்சத்தை மறந்து பார் எதிரியை எதிர்த்துப் பார் எரிமலையாய் வெடித்துப் பார் வியர்வை சொட்ட உழைத்துப் பார் வெற்றிக்கனியை சுவைத்துப் பார் தனிமையின்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  66

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்தமேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை      — திருவிருத்தம் இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது (இ)ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 346-354

(தமிழ்ச்சொல்லாக்கம்: 345 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 346-354 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 346. Tamil Cyclopedia – தமிழ்க் களஞ்சியம் தமிழ்க்களஞ்சியம் (Tamil cyclopedia) இப்பெயர் கொண்ட நூலொன்று மாத சஞ்சிகையாக வெளிவருகிறது. பகுதி ஒன்று வெளி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 1/4 தொடர்ச்சி) என் சரித்திரம் மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4 இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள்…

இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் – தேமொழி

இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே…

தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும் தமிழ்நாட்டில் – மாமல்லபுரத்தில் – 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டியை அரசு சிறப்பாக நிகழ்த்தி இன்று(09/08/22) நிறைவு விழாவும் நிகழ்கிறது. போட்டியில் வாகை சூடிய அனைவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற பிற போட்டியாளர்களுக்கு அடுத்து வெற்றியைச் சுவைக்க வாழ்த்துகள். சிறப்பாக நடத்திய தமிழக அரசிற்கும் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலினுக்கும் பாராட்டுகள்.   ஆடி 12, 2053 / 28.07.2022  முதல் நடைபெறும் சதுரங்க விழாவிற்கு வந்துள்ள 186 நாடுகளிலிருந்து  பங்கேற்ற 1,736 பன்னாட்டு வீரர்களும் வீராங்கனைகளும்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 345

(தமிழ்ச்சொல்லாக்கம்: 342 – 344 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 345 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)  345. கலியாண சுந்தரம் – மணவழகு 1917இல் திசம்பர் மாதம் 24உ செம்பியத்தில் கூடிய மகாசமாசக் கூட்டத்தில் நடந்த தீர்மானங்கள். 1. இவ்வருடத்து அறிக்கைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. 2. சிரீமான் – கி – குப்புச்சாமி முதலியார் அவர்கள் ஐந்து வருடமாகப் புரிந்த உதவிக்காக சமாசம் நன்றி பாராட்டுகின்றது. சபைத்தலைவர்            :           சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபிரீ – கலியாண கந்தர யதீந்திர சுவாமிகள், சென்னை உதவி…