புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…
தோழர் தியாகுவின் அரசியல் வகுப்பு : தமிழ்நாடு இனி 91
ஆவணி 01, 2053 புதன் 17.08.2022 இரவு 7.00 கூட்டப் பதிவெண் 864 136 8094 புகு சொல் 12345
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 368-370
(தமிழ்ச்சொல்லாக்கம்: 362-367 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 368-370 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 368. Conductor – நடத்திக்கொண்டு போகிறவன் மின்சாரம் சாதாரண உலர்ந்த காற்றின் வழி சுலபமாகச் செல்வதில்லை, சலத்தின் வழியும் ஈரமான வசுத்துகளின் வழியேயும் இரும்பு…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 3
(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 2/4 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 3 அத்தியாயம் 1 – எங்கள் ஊர் கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா சோசியர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் (இ)ரிசபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரசுதேதார் மூலமாக அவரைச் சில விசயங்கள் கேட்கலானார். கலெக்டர் :-உமக்குப் படிக்கத் தெரியுமா?சோசியர் :-தெரியும்.கலெக்டர் :-கணக்குப் பார்க்கத் தெரியுமா?சோசியர் :-அதுவும் தெரியும். நான் சோசியத்தில்…
பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,சிங்கப்பூர்,மே 26-28,2023
உலகத் தமிழ் ஆய்வு மன்றம் International Association of Tamil Research (IATR) பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், வைகாசி 12-14, 2054 / மே 26-28,2023 ஆராய்ச்சிச் சுருக்கம் வரவேண்டிய நாள் 15.10.2022 ; அனுப்ப வேண்டிய மின்வரி: academic-committee@11.org தெரிவு முடிவு நாள் கார்த்திகை 29, 2053 /15.11.2022 இற்கு முன்னதாக விரிவுக் கட்டுரை நாள் தை 17, 2054 / 31.01.2023 கட்டுரையாளர் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாட்டின்போது ஏற்படுகின்ற உள்ளூர்ப் போக்குவரத்துச்…
மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை
பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய ‘கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00 நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன் நூல் வெளியீட்டுச் சிறப்புரை: திரு.சு.வெங்கேசன், நா.உ. நூல் பெற்றுச் சிறப்புரை: புகழகிரி வடமலையான் பொறி இ.திருவேலன்
தமிழ்நாடும் மொழியும் 1 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
1. தமிழ் நாடு 1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி தமிழகத்தின் சிறப்பு உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனியிடம் கொண்டுள்ள நாடுகள் சில. அந்தச் சிலவற்றிலே சிறந்த வரலாற்றைக் கொண்ட நாடு தமிழ் நாடு. இக்காலச் சென்னை மாநிலம், மைசூர், ஆந்திர நாடுகளின் ஒரு பகுதி, கேரளம் ஆகியன சேர்ந்த பகுதியே பழங்காலத் தமிழகமாகும். தமிழகத்தின் வட எல்லை வேங்கடம்; ஏனைய முப்புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தன. இந்திய வரலாற்றிலேயே தமிழகத்திற்குரிய சிறப்பினைக் குறைக்க எவராலும் முடியாது. தமிழகம் பக்தி வெள்ளத்தில் மூழ்கும் ஒரு நாடு….
தமிழ்க் கவிதை – கவிஞர் க.பெருமாள்
தமிழ்க் கவிதை எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்தபதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடமெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடமமெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடயான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி! வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்றவழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்கஅருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாயசூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பாருண்டோ!யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்! துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்குமதொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்நிறைவான…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 362-367
(தமிழ்ச்சொல்லாக்கம்: 355-361 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 362-367 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 362. பரிணாமம் — திரிபு 363. கிரியா — தொழில் 364. பரிமாணம் — அளவு 365. அனுக்கிரகம் — அருளுதல் நூல் : …
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3
(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி) செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்….
உதிக்கும் சூரியனே! – க. இராசேசு
உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா! சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா! ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்! சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவேபுது சூரியனாய் வானில் உதித்திடடா,சிகர தூரம் அது மிகத் தூரமில்லைஉன் புன்சிரிப்பால் அதை…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி ஆங்கிலேயர்களின் முன்னோர்களான ஆங்கில சாக்சானியர்கள் உரூனிக்கு (Runic) என்று அழைக்கப்பட்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந்தனர். இவ்வெழுத்துகளுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்று கருதித் தம் போர்க் கருவிமீதும் பிற கருவிகள் மீதும் இவ்வெழுத்துகளைப் பொறித்து வந்தனர். சிகாந்தினேவியர்களும் (Scandinavians) இவ்வெழுத்து முறையையே கொண்டிருந்தனர். ஆங்கில சாக்குசானியர்களும் சிகாந்தினேவியர்களும் கிருத்துவ சமயத்தைத் தழுவிய ஞான்று உரூனிக்கு முறையைக் கைவிட்டு உரோமானிய முறையைக் கொண்டனர். தமிழர்கள் எழுத்துமுறையை என்று அமைத்துக் கொண்டனர்…
