தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம் ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: கலைமாமணி குத்தாலம் மு.செல்வம் பரதக் கலாலயப் பள்ளி திருபுவனம் ஆத்துமநாதன் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை கலைச்சுடர் மணி சசிரேகா கனகசபை பரதநாட்டியப் பள்ளி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                              வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி தலைமையுரை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்  23.    சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த                  நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த                  பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ ளப்பொன்                  னிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார்.           24.     மண்ணுமுழ வோடுகுழல் நண்ணுமிசை யாழின்                  எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப்                  பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள                  எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார்.           25.     உண்ணிகழ்…

இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! – யாழ்ப்பாவாணன்

இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! இணைய வழித் தொடர்புகள் அடிக்கடி வந்து சேரும் அதில் வந்துள்ள மடல்களில் தன்னைக் கட்டு, தன் பிள்ளையைக் கட்டு, அழகான அக்காவைக் கட்டு, தங்கச்சியைக் கட்டு என்றவாறு விண்ணப்பங்கள் பல… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்! மனைவிக்கும் இவற்றைக் காட்டி கதைத்துச் சிரித்து மகிழ்வேன்… இணையத்தில் இப்படிப் பல உங்களுக்கும் வந்து சேரும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்… அப்பிள் திறன்பேசி, அப்பிள் மடிக்கணினி அனுப்புவதாக ஒருத்தி கனடா விமான ஓட்டியாம் மனைவியும் உடன்பட்டாள் நானும் அனுப்பு…

என் சரித்திரம்-உ. வே. சா. : அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை தொடர்ச்சி) என் சரித்திரம்மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர்அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4 சற்றேறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமசுதானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து கல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போசனம்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 333 – 339

(தமிழ்ச்சொல்லாக்கம்: 325- 332தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 333-339 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 333. சராசரம் = சரம் + அசரம் : அசையும் பொருள் அசையாப் பொருள் 334. கமனம்    —        நினைவு 335. கனடம்பம்          —        மிக்க பெருமை 336. பட்சண வர்க்கம்  —        பலவித சிற்றுண்டி 337. சரித்திரம் —        வரலாறு 338. விவேகிகள்         —        மதியுள்ள பேர் நூல்      :           வடிவேலர் சதகம் (1915) நூலாசிரியர்      :           உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயண கவியின் ஆசிரியர்…

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023  பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாகவும் சீரிய முறையிலும் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி, செயற்குழு அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.சி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச்…

‘வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி

வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி வஃகியாய் வந்த வசந்தம் – பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. இதாயத்துல்லா அவர்களின் நான்காவது நூலாகும். நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி : https://www.youtube.com/watch?v=fsZGz0MXF0I நூலுக்கான இந்திய இணைப்பு : https://www.amazon.in/dp/B0B5GZPBKB நூலுக்கான பன்னாட்டு இணைப்பு : https://www.amazon.com/dp/B0B5GZPBKB முதுவை இதாயத்து துபாய் 00971 50…

நீ உயர - கவிஞர் சீனி நைனா முகமது

நீ உயர உயரத் துடிக்கிறாய் உரிய வழியெது உனக்குத் தெரியுமா தம்பி – கொஞ்சம் உட்கார்ந்து முதலில் சிந்தி உயர்வுத் தாழ்வுக்கோர் உண்மைக் காரணம் உள்ளத்தில் இருக்குது தம்பி – அதை ஒழுங்கு படுத்துநீ முந்தி வெள்ளத்தின் அளவே தாமரை மலருமே வெருங்குளமானால் அழியும் – புது வெள்ளத்தில் மீண்டும் தழையும் உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்கை உன்வச மாகிடும் உலகம் – இதை உணரத் திருக்குறள் உதவும் நல்லதை நினைத்து நல்லதை உரைத்தால் நல்லவை வந்துனை சேரும் – நீ நடந்தால் வாழ்த்துகள்…

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 7/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 6/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] அறிவுகெட்ட தமிழகம் எங்கே – எடுத்துக் கொள்ளுங்களேன், ஒரு பத்திரிகை “பகவத் கீதையிலே நாலு சாதி இருக்கவேண்டும்” என்று பரமாத்மா கூறியிருக்கிறார் என்று எழுதும். “அது யார் சொன்னது? பகவத் கீதையிலே சாதிக்காதாரமில்லை” என்று ஒரு பத்திரிகை எழுதும், மற்றொரு பத்திரிகை, “நீங்கள் கீதையை வேறு விதமாக…

. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. : 3/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – 3/4 சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். சைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவக-சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு…