மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  45

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 17 “எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!”+ பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. ‘அம்மா’ என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ்வொன்றாகக் காற்றில்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1631-1640 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1621 -1630இன் தொடர்ச்சி) 1631. யப்பானியல் Japanology 1632. யாப்பியல் Stichology 1633. யானைத்தோலியல் Pachydermatology 1634. வகைமுறை விசையியல் Analytic mechanics 1635. வகையியல் அமைப்பு வகையியல், பொதுப் பகுப்பாய்வியல், வகைப்பாட்டியல், வகையாக்கம், அமைப் பியல், வகைமையியல், வகையியல், திருமறைக் குறியீட்டியல் எனப்படுகின்றது. இவற்றுள் குறியீட்டியல்  என்பது கிறித்துவ இயலில்  திருமறைக் குறியீட்டியல்- Typology(2) எனப்படுகிறது. பிறவற்றுள் சுருக்கமான வகையியல் – Typology(1) இங்கே குறிக்கப்பெற்றுள்ளது.    Taxo- என்னும் பிரெஞ்சுச் சொல்லிற்கு வகைப்பாடு எனப் பொருள். Typology1/Taxology…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 71

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 70. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி “நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே” என்றேன். “எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே! ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே.   7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.    8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ.   9. முதலில் வெம்பசி மூளவே…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 21- 40

(தமிழ்ச்சொல்லாக்கம் 12- 20 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 21. சமித்தருளல் —           பொறுத்தல் 22. கசகும்பம்     —           யானை மத்தகம் 23. நிபுணை        —           மிக வல்லவள் 24. வாஞ்சை       —           பிரியம் 25. சம்பூரணமாகும்         —…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி “நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ” என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி. அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றாற் போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கு நடுவில்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1621- 1630 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1611-1620இன் தொடர்ச்சி) 1621. மேலோச்சு கருத்தியல் Dominant Ideology 1622. மையவிளிம்புநிலை அரசியல் Centre Periphery Politics 1623. மொத்தவியல் Grossology 1624. மொழி இயங்கியல் Physiology of language 1625. மொழிஒப்புமை யியல் Analogy linguistic 1626. மொழிக்காலவியல் Glottochronology  – மொழிக்கால வரிசையியல், சொல்தொகைப் புள்ளியியல், சொல்தொகை வரலாற்றியல் என மூவகையாகச் சொல்லப்படுகின்றது. Glôtta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் நாக்கு, மொழி என்பன. சுருக்கமாக மொழிக்காலவியல் – Glottochronology எனலாம். Glottochronology 1627. மொழிப்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1611 – 1620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1601-1610இன் தொடர்ச்சி) 1611. மெய்ம்மி நுட்பியல் Histotechnology 1612. மெய்ம்மி நோயியல் Histopathology 1613. மெய்ம்மை யளவையியல் Criteriology 1614. மெல்லமைப்பியல் Gnathology 1615. மெல்லுடலி யியல்     Malacology(2) 1616. மேக நோயியல் Syphilology 1617. மேடுபள்ள விளிம்பு Undulate Margin 1618. மேலாண்மை வரைவியல் Management Graphics 1619. மேலாண்மைக் குமுகவியல் Managerial sociology 1620. மேலாண்மைப் பொருளியல்     Managerial economics (தொடரும்)  இலக்குவனார் திருவள்ளுவன்,அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1311-1320)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1301-1310) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 132. புலவி நுணுக்கம் (தலைவனுக்கு மற்றொருத்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கற்பனையாய்க் கருதிக் காய்தல்) 231. பெண்கள் பலரால் பார்க்கப்படும் பரத்தனே, உன்னைத் தழுவேன். (1311) 232. வாழ்த்தை எதிர்நோக்கி ஊடும்போது தும்மினார். (1312) 233. மலரைச் சூடினாலும் யாருக்குக் காட்டச் சூடினாய் எனச் சினப்பாள். (1313) 234. எல்லாரையும் விடக் காதலிப்பதாகக் கூறினாலும் யார்,யாரை விட என ஊடுவாள். (1314) 235. இம்மைப்பிறவியில் பிரியேன் என்றால் வரும் பிறவியில்…

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும்- இலக்குவனார் திருவள்ளுவன்

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஒளவை அருள் நடராசன் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 517)  என்பதற்கிணங்க முதல்வர் தக்கவர்களைத் தக்கப்பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதை மெய்ப்பித்தன. அவற்றின் தொடர்ச்சியாக இந்நியமனமும் அதனை உணர்த்துகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதவிக்குப் பொருத்தமானவராக ஒளவை ந. அருள் திகழ்கிறார். சில…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 12- 20

(தமிழ்ச்சொல்லாக்கம் 8-11 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) அந்தக் கரணம் – உட்கருவி பூமியென்னுங் கற்பக விருட்சத்தினது யெளவன மென்னும் நறும் புட்ப மஞ்சரி, மங்கையரது அந்தக் கரணங்களாகிய (உட்கருவிகள்) வண்டுகளை ஆகருசிக்கின்றமை சகசமே. நூல்        : வில்கணீயம்…

செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்

செம்மொழிச் சிந்தனை : என்னுரை உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக அமைந்தன. 1986-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் சார்பில் மிகப் பெரியதொரு கருத்தரங்கிற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்…