இலக்கிய அமுதம், குவிகம் : கவி.கா.மு.செரீபு
இலக்கிய அமுதம், குவிகம் இணைந்து வழங்கும் இணைய வழி அளவளாவல் கவி.கா.மு.செரீபு சிறபபுரை : திரு காதர் செரீபு மாசி 15, 2053 ஞாயிறு 27.02.2022 மாலை 6.30 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணைய நுழைவு எண் 619 157 9931கடவுச் சொல் / Passcode: kuvikam123 அல்லது https://bit.ly/3wgJCib இணைப்பு நம் வலை youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
தந்தை பெரியார் சிந்தனைகள் பின்னிணைப்பு 1 & 2
(தந்தை பெரியார் சிந்தனைகள் 41 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 42 பின்னிணைப்பு-1 சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்குக் கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி…
வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வந்தவாசியை…
குவிகம் இலக்கிய வாசல் நேரடிக் கூட்டம் – 26/02
மாசி 14, 2053 சனி 26.02.2022 மாலை 6.30 குவிகம் இலக்கிய வாசல் நேரடிக் கூட்டம் கடந்து வாத பாதை: திரு கணேசு பாலா நிகழ்விடம்: சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை : 600018 தொடர்பிற்கு 97910 69435
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 32
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 31 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி “அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.” பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான்….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35
(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 120. தனிப்படர் மிகுதி – பிரிவால் ஏற்படும் தனிமைத் துன்பம் விரும்புநர் விருப்பம் விதையில்லாப் பழம். (1191) காதலர் மீதான காதல் வான் மழை. (1192) விரும்புநர் பிரிந்தாலும் மீள வருவார் என்னும் செருக்கு வரும்.(1193) விரும்புநர் விரும்பவில்லையேல் உலக உறவால் பயன் என்? (1194) காதல் கொண்டவர் காதலிக்காவிட்டால் வேறென் செய்வார்? (1195) காவடிபோல் இருபுறக் காதலே இன்பம். (1196) காமன் ஒருபக்கமே நிற்பதால் என் துன்பமும் துயரமும்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 850 – 854 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 இன் தொடர்ச்சி) 850. துண்ட நகர்வியல் Plate Tectonics என்பது கண்டத்தட்டு நகர்வியல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, புவித்தட்டு நகர்வியல், புவித்தட்டுக் கட்டுமானவியல் எனப் பலவகையாகக் கூறப் படுகின்றது. பழங்கிரேக்கத்தில் tecton என்றால் கட்டுமானம் எனப் பொருள். Plate என்பது இங்கே புவித்தட்டை / புவியின் கண்டத் தட்டைக் குறிப்பிடுகிறது. எனவே, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு நீங்கலாகப் பிற பொருள்கள் யாவும் சரியே. ஆனால், வெவ்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகின்றது. எனவே, ஒரே…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 56
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 55. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்சு, எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 இன் தொடர்ச்சி) 835. திண்ம ஏரண நுட்பியல் Solid Logic Technology 836. திபேத்தியல் Tibetology 837. திமிங்கில இயல் cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம். Cetology 838. திராட்சை வளர்ப்பியல் திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது. Enology 839. திராவிடவியல் Dravidology 840. திருமறைக் குறியீட்டியல் மூலச்சொல்லான typus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு. இங்கே…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 இன் தொடர்ச்சி) 820. தாவரமருந்தியல் Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல் என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது. Ethnopharmacology 821. தாவரவியல் Botany 822. தாழ் ஆற்றல் இயற்பியல் Low energy physics 823. தாழ் ஓசையியல் கீழ் ஓசையியல் என்றும் கூறுவர். அதனினும் தாழ் ஓசையியல் என்பது ஏற்றதாக இருக்கிறது. Infrasonics- அகச்சிவப்பு என்றும் பொருள்…
தந்தை பெரியார் சிந்தனைகள் முடிவுரை: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 40 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 41 முடிவுரை முடிவுரை: என் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. மொழி ஆராய்ச்சியில் தெய்வக்கூறு பெரியரால் வெறுக்கப்பெற்றது என்றும், மூளையின் வளர்ச்சி காரணமாகத்தான் மொழி வளர்ந்தது என்றும் கூறி கிளியின் பேச்சில் மூளையின் கூறு…
