ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  780 – 802 இன் தொடர்ச்சி) 803. தாங்குட்டியல்                                                                        தாங்குட்டு(Tangut) மக்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு முதலியன குறித்து  ஆராயும் துறை தாங்குட்டியல் எனப்படுகிறது. 804. தாசியா இயல்         தாசியா இயல்(Dacology) என்பது திரேசியலின்(Thracology ) ஒரு பிரிவாகும். பழைய உரோமானியப் பேரரசின் தாசியா நாட்டு மக்களின்  மொழி, இலக்கியம், வரலாறு, சமயம், கலை, பண்பாடு, பொருளியல், நெறிமுறைகள் குறித்து ஆராயும் துறையே தாசியா இயல். Tangutology Dacology 805. தாடைஎலும்பியல் தாடை எலும்பு என்னும் பொருள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 31

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 30 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம்…

குவிகம், சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, கண.சிற்சபேசன்

நிகழ்வு 1 மாலை 6.30-6.45  : குறும்புதினப் போட்டிமுடிவுகள் நிகழ்வு 2 மாலை 6.45-7.45 : சங்க இலக்கியத்தில் நகைச்சுவை : பேரா.கண.சிற்சபேசன் 6.15 மணி முதல் நிகழ்வில் இணைய இயலும்நுழைவு எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 – கடவுச் சொல்  / passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/34L3qlzநம் வலை  youtube இணைப்பு  https://bit.ly/3sFFJTQ

தமிழர் வரலாற்றுத் தடம் – 4 – தாய்மொழி காக்க நடைபெற்ற போராட்ட வரலாறுகள்

தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாற்றுத் தடம் – 4 பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளை  முன்னிட்டு    தாய்மொழி காக்க நடைபெற்ற  போராட்ட வரலாறுகள் என்ற தலைப்பில் இணைய வழி நினைவுப் பகிர்வுகள் நாள்:  மாசி 08, 2053 20-02-2022, ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 அடையாள எண்:  839 6569 6118 ; கடவுச் சொல்: 101010 கூட்டத்தில் இணைய… https://us02web.zoom.us/j/83965696118?pwd=eEVQb3ZXV3A1ZEhlUnBWNm0zY01FUT09 சான்றோர்களின் கடந்த கால ஈகத்தையும் பட்டறிவையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திடும் நோக்கத்துடன் இந்நிகழ்வில்.. மொழிப் மீட்புப் போராட்டங்களில் களம் கண்டவர்களின் களப் பணியை பற்றி அல்லது தமது நேரடி களப் பணியைப் பற்றிய நினைவுகளை  பகிர உள்ளவர்கள் 👇👇👇 மொழிப் போர்  ஈகையர் ஐயா அ. இரவீந்திரன் என்ற இரவி வாமணன் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேராசிரியர் சி. இலக்குவனார் பற்றி அவருடைய பெருமகனார் ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பற்றி அவருடைய பெயரர் முனைவர் கோ. வீரமணி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்  பற்றி அவருடைய பெருமகனார் முனைவர் மா. பூங்குன்றன் அவர்கள் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பற்றி அவருடைய துணைவியார் அம்மா இறை பொற்கொடி அவர்கள் இணைய வழி நடைபெறும் இக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்! அழைக்கிறது.. தமிழகப் பெண்கள் செயற்களம் சென்னை, தமிழ்நாடு. 9884187979 ; 9094430334

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் கிழக்கு நாடு   26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில் விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக் கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால். கிழக்கு நாடு 27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச் செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும் பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே. 28. அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில் மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  759 –  779  இன் தொடர்ச்சி) 780. தண்டனை யியல்                        781. தண்டூர்திக் கணிப்பியல் Penology / Poenology 781. Sporalogy 782. தணிப்பக உளவியல்  Clinical psychology 783. தமிழியல் Tamilology 784. தரப் பொறியியல் Quality Engineering 785. தர மும்மை Quality Trilogy 786. தரவரிசைப் புள்ளியியல் Rank order statistics 787. தரவு வனைம நுட்பியல் Data Processing Technology 788. தரவுக் கட்டமைப்பியல் Stringology 789. தரவுப் புள்ளியியல் Data…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  746 – 758  இன் தொடர்ச்சி) 759. தகவலியல் Informatics 760. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 761. தகவல் நுட்பியல் Information Technology 762. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 763. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர்.   தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும்.  Axiology  என்பதை விழுமியம்…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) – இலக்குவனார் திருவள்ளுவன்

(முன் பகுதியின் தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,)  காமத்துப்பால் 119. பசப்புறு பரவல் – பிரிவால் வந்த பசலையைக் கூறல் 101.  காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181) 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182) 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183) 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? (1184) 105. காதலர் பிரியும் போதே பசலையும் பரவுகிறதே (1185) 106. விளக்கில்லையேல் வருகிறது இருள்….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 746 – 758 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  722 – 745 இன் தொடர்ச்சி) 746. தகவலியல் Informatics 747. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 748. தகவல் நுட்பியல் Information Technology 749. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 750. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர்.   தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும்.  Axiology  என்பதை விழுமியம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 55

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 54. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி “நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?” என்றார் பாக்கியம். இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது. “பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?” என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள்….

ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம்

தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம் மாசி 08, 2053 / ஞாயிறு / 20.02.2022 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி.  வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரியிலிருந்து பணியாளுமையர் பொறி. த.ஞானசேகரன், மே.வங்கத்திலிருந்து எழுத்தாளர் புதிய மாதவி, மராட்டியத்திலிருந்து திருவள்ளுவர் விருதாளர் மு. மீனாட்சி சுந்தரம்,…

பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 39 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 40 பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி (18) “மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை ‘நாத்திகன்’ என்று கூறும் அன்பர்கள் நாத்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். . . அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகளை,…