இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம் 11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….
ஈழத்து ச் சிறுகதை இலக்கியம் – தொடர்ச்சி: மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 14 4 1950 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் காணலாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் 60 களில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத்தம். 50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களிலேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர். புதிய எழுத்தாளர்கள் பலர் எழுத்துலகில் புகுந்தனர். 1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாாிச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு 60 ஆம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 45
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 44. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி “சந்திரா!” என்றேன். “அம்மா இல்லையா? போய்விட்டார்களா? ஐயோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?” என்று விம்மி அழுதான். அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன். “எப்போது இறந்து போனார்கள்?” என்றான். “ஒரு மாதம் ஆச்சு.” “அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே” என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், “நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்”…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 29 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 30 3. மொழிபற்றிய சிந்தனைகள் 2. மொழியின் தோற்றம் ‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 8 “நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்பொன்னானாய் மணியானாய் போகமானாய்பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னைஎன்னானாய் என்னானாய் என்னில் அல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே“ – தேவாரம் “முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு…” என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது…
இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் (தொடர்ச்சி) 6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந் தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத் தூய சங்கத் திருந்த தொழுதகு தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக் கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும் நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம். 9.கனைத்து…
குவிகம் இணைய அளவளாவல்: குரு சீடர் பரம்பரையம்
மார்கழி 11, 2052 ஞாயிறு 26.11.2021 மாலை 6.30 குரு சீடர் பரம்பரையம் பிள்ளை – உவேசா – கிவாச சிறப்புரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர், கலைமகள் திங்களிதழ் கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931கடவுச் சொல் / Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09
ஈழத்துப் புதின இலக்கியம் – . மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8 அத்தியாயம் 4. புதினம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும்…
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?
by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடு English தமிழ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 44
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 43. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். “நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்” என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், “நீங்கள் யார்? எந்த ஊர்?”, என்று என்னையே திரும்பக்…
தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு
தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும். இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி…
இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்: 26/12/21
தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர் மார்கழி 11, 2052 ஞாயிறு 26.12.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் பொழிஞர்: திருக்குறள் ஆராய்ச்சி யறிஞர் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் இர.அர.கீதா சிறப்புரை: கலைஞர் செம்மொழி விருதாளர் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு தொகுப்புரை: தோழர் தியாகு…
