‘மகளிர் சிறப்பு’ இதழின் வெள்ளி விழா ஆண்டிற்குக் குவிகத்தின் பாராட்டு
புரட்டாசி 10, 2052 / 26.09.2021 ஞாயிறு மாலை 6.30 ‘மகளிர் சிறப்பு’ இதழின் வெள்ளி விழா ஆண்டிற்குப் பாராட்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம் நிகழ்வில் இணைய கூட்ட எண் Zoom Meeting ID: 6191579931 கடவுச்சொல் passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCibyoutube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இரு நிகழ்வுகள்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை புரட்டாசி 09, 2052 / 25.09.2021 இரு நிகழ்வுகள் 1. பொருநை நதி நாகரிகம் இந்தியத் தொல்லியல் வரலாற்றில் ஓர் எல்லைக்கல். இந்திய வரலாற்றில் 5000 ஆண்டு கால நாகரிகத்தின் தொடர்ச்சியைக் காட்டிய காலக் கண்ணாடி. அண்மையில் வெளிவந்த பொருநை நதி நாகரிகம் குறித்தும் , அதன் வரலாற்று இன்றியமையாமை குறித்தும் தமிழகத் தொல்லியல் துறையின் கல்வி – ஆய்வு அறிவுரைஞர் பேராசிரியர் கா. இராசன் அவர்கள் விரிவாக விளக்க இருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து…
பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி
(சங்கக்காலச் சான்றோர்கள் – 23: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார் உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும், ‘அன்பின் வழிய(து) உயிர்நிலை; அஃதிலார்க்(கு)என்புதோல் போர்த்த உடம்பு.’ …
மின்னூல் உருவாக்குவது எப்படி? – உரை
இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை மின்னூல் உருவாக்குவது எப்படி? புரட்டாசி 08, 2052 24.09.2021 நண்பகல் 12.15 இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468
கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுக உரை
பைஃபிரான் (PhyFron) குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுகம் புரட்டாசி 08, 2052 வெள்ளி 24.09.2021 மாலை 5.30 – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும். தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 31
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 30. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 13 மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லாருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லாரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இடைநிலை(இண்டர்) வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான். தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும்…
தமிழர் வாணிகம் 2 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27 14. வாணிகம் ( தொடர்ச்சி) காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், தொண்டி, முசிரி முதலியன உலகப் புகழ் பெற்ற துறைமுகங்களில் தலைமையானவை. “உலகுகிளர்ந் தென்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி”1 விரைந்து சென்று கொண்டிருந்தன. ”அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”2 திசைகள்தோறும் திரிந்தன. ”நெடுங்கொடி நுடங்கும் நாவாய்கள்” 3 துறைமுகங்கள் தோறும் தோன்றின. …
இரிக்கு வேதத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை! , 26.09.2021
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 10 இரிக்கு வேதத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை! புரட்டாசி 10,…
எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’
எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4, கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித…
ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை எதிர்த்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து 20.09.21 காலை 10 மணிக்குச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்திற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் எடுவின், பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன
சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவிற்குக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. கவிதைகளை அனுப்ப விரும்புவோர் கீழ்வரும் இணையத்தின் வழித் தங்களின் கவிதைகளை அனுப்பலாம். https://forms.gle/stabPG2ZXvJ6rphb8 அல்லது niraikol2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் கவிதைகளை அனுப்பி வைக்கலாம். * நூலாக்கத்திற்கு 50 சிறந்த கவிதைகள் ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும். * கவிதைகள் ஏ 4 தாளில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode) அமையபெற வேண்டும். * கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் புரட்டாசி 29, 2052…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 1/17
அம்மானை மூன்று பெண்மணிகள் கூடி ஒருவகையான காய்களை மேலேபோட்டுப் பிடித்துக்கொண்டும், தொடை தடை விடைகளுடன் ஒருவர்க்கொருவர் உரையாடிக்கொள்ளும் முறையில் இன்னிசையுடன் பாடிக்கொண்டும் விளையாடுகின்ற ஒரு வகையான ஆட்டத்திற்கு அம்மானை என்று பெயர். இந்நிலையை அமைத்துப் பாடுகின்ற பாட்டிற்கு அம்மானைப் பாட்டு என்று பெயர். இப்பாட்டு (பெரும்பான்மையும்) ஐந்து அடிகளை உடையதாய் ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பெறும். தொடை : ஒரு பெண் ஒரு செய்தியை (தொடுத்து) அறிவிப்பதாக முதல் இரண்டடிகளும் இருக்கும். தடை : முதற்பெண் அறிவித்ததற்கு, இரண்டாவது பெண் (தடுத்து) குறுக்குக் கேள்வி…
