போர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 15. போர்கள் (தொடர்ச்சி) சங்கக்காலத் தமிழரசர்கள் அமைதி நோக்கோடு அருள் நோக்கமும் உடையவராவர். இக்காலத்தில் இரு பகைநாடுகள் போரிலீடுபட்டிருக்கும்போது அவ்விரு நாடுகளையும் சாராது, இரு நாட்டுப் படைகளிலும் துன்புறுவோர்க்குச் ‘செஞ்சிலுவைச் சங்கம்’ எனும் அருள்நெறி அமைப்பு அன்போடு சென்று ஆம் உதவிகளைச் செய்கின்றது. இது போன்றே அக்காலத்தில் உதியன் சேரலாதன் எனும் சேரநாட்டுப் பெருமன்னன், பாரதப் போர் நிகழ்ந்த காலத்து, பாண்டவர்…
என் வாழ்வில் குறள் – அளவளாவல்
புரட்டாசி 17, 2052 / ஞாயிறு / 3.10.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல் என் வாழ்வில் குறள் கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931 கடவுச் சொல் / passcode kuvikam123 ஒருங்கிணைப்பு – துரை. தனபாலன்
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விவரம்
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விவரம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாய் வழங்கித் தோற்றுவித்துள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பெறும். இவ்விருது இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகும். பத்து இலட்சம் உரூபாய் (உரூ.10,00,000) பரிசுத்தொகைக்கான காசோலை, மதிப்புச் சான்றிதழ், நினைவுப்பரிசாகக் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவச் சிலை ஆகியவை…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார்: 3/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 3/17 தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும்வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானைவானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்தவானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானைவாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை (11) இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில்பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானைபிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோபிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானைபிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை (12) அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள்தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானைதமிழ்நாடென் றாலேயோர்…
பிசிராந்தையார் 2 : ந. சஞ்சீவி
(பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார் ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவனாகிய பாண்டிய மன்னன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும்…
கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் பத்தாண்டிற்கு அறிவிப்பு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தன. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8- ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: 1. 2010 – முனைவர் வீ.எசு. இராசம், (Former Senior…
ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! – பெ. மணியரசன்
ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள்…
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4:பேராசிரியர் வெ.அரங்கராசன் சமுதாயம் சார்ந்தவற்றுள் மருத்துவம் சார்ந்த ஒர் உண்மை நிகழ்வு: தம்முயிரைப் பற்றிச் சிந்திக்காமல், பல்லுயிர்களைக் காத்த நல்லறத்தர்: குடியேற்றம் [குடியாத்தம்] மண்ணுக்குப் பெருமையைக் குடியேற்றிய நல்லறத்தர் செவிலியர் செயக்குமார். பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர் செயக் குமாரை நேரில் அழைத்து, மாண்பமை முதல்வர் முத்து வேல் கருணாநிதி இசுதாலின் அவர்கள் பாராட்டிப் பெருமைப்படுத்தி, அகம் மகிழ்ந்த அரிய உண்மை நிகழ்வு. வேலூர் மாவட்டம் குடியேற்றம் நெல்லூர்ப்பேட்டைப் பாவோடும்தோப்பு, நீலிக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் செயக் குமார்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 32
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 31. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 13(தொடர்ச்சி) அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது. அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று…
போர்கள் – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 15. போர்கள் ‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது. ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள. கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி…
மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள அறிமுகக் கூட்டம்
மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள அறிமுகக் கூட்டம் மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள முன்னெடுப்பான ‘Common Voice ‘ (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘Common Voice’ தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதன் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: புரட்டாசி 10,…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி 1/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 2/17 கற்றார் களிப்பெய்தக் கவின்சிறந்த நயமீந்துவற்றா வளமுடைத்து வண்தமிழ்காண் அம்மானைவற்றா வளமுடைத்து வண்தமிழே யாமாகில்பற்றார் பலகுறைகள் பகருவதேன் அம்மானைபகரல் கடல்முதலாம் பகைவரினால் அம்மானை (6) பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்ததுபோல்மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானைமொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்குவழியுடன்ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானைதமிழ்என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை (7) அயல்மொழியில் இல்லாத அரியதொரு ழம்முதலாம்இயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டம்மானைஇயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டாமாயின்முயல்வுறுஆ ரியஎழுத்தை மொழிவதெங்ஙன் அம்மானைஇயலினிய…
