தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்! – வ.சுப.மாணிக்கம்

தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்!   தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத்திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன். புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்; விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப்பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஓர் அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு; தமிழ்மொழியின்…

மாணிக்கவாசகம்பள்ளி மாணாக்கரின் வாக்காளர் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள்

மாணிக்கவாசகம் பள்ளிமாணாக்கரின் வாக்காளர் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள்   பள்ளி மாணவர்களின் நாடகம்,கும்மி நடனம்,கவிதை,ஆங்கில பேச்சு  100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு   தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசுஉதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக நடராசபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக 100  விழுக்காட்டு  வாக்காளர் விழிப்புணர்வினை வலியுறுத்திக்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.     நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)செயபால் சிறப்புரை வழங்கிப்…

உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா

அருவிக்கரை அன்று கண்ட அருவிக்கரையே! பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்; படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய். வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்; வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்! சிறுவனாக உன்மேல் குதித்தேன்; சீரிய உந்தன் அழகை மதித்தேன். வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க, விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்!   -கெர்சோம்செல்லையா

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்   சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம் மறைமலை இலக்குவனார்,  செயலர், தமிழகப்புலவர் குழு, சென்னை 600 101

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும்  ஒளிப்படப் போட்டி!   கோவை  இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த  முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு  ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.  போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம்.  யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும். அனுப்பும் படத்திற்குக் கட்டாயமாகத் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும். படங்களை  இணையவழியில்தான் அனுப்பவேண்டும்.   இயற்கை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4. மெய்யைத் தொழுதல்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்  மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 4.மெய்யைத் தொழுதல் மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள் உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும். உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது. உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும். அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது. உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது. உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது. உலகந்…

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்!

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்   வெளியூர்  பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்குச் செல்லும்  பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க  இசைவில்லை.   மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்குக் குழு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசுப் பேருந்தில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது. மீதிக் கட்டணம் செலுத்த முன்வந்தாலும் ஏற்பதில்லை.   அதே நேரத்தில், சென்னையில்…

பாவிற்கு வேண்டிய நயங்கள் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

பாவிற்கு வேண்டிய நயங்கள் சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும் கற்பனையாச் சொல்லா நின்ற நன்னயமும் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும் எந்நயமும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

கூடா நட்பு -தமிழ் சிவா

கூடா நட்பு ஆங்கிலப் புத்தாண்டை அமைவுறக் கொண்டாட அடுத்த நாட்டுக்குப் போகும் அ“று”ந்தகையே! அரிசனர் வீட்டிலே அரிசிச் சோறுண்டால் ஆகுமோ அனைவரும் இணைதான் என்றே? முட்டிலாக் காவலில் கட்டினில் உறங்கிய சுரங்கக் கோப்புகள் பிள்ளைக் கரிக்குச்சியோ? வெட்டிய வெளிச்சமும் திட்டிய வாய்களும் எட்டியாய் இருந்த இணக்கமும் இன்று வெற்றிலைக் காம்பாய் ஒட்டி இருப்பது வெட்டி எறிய அல்லால் வேறெதற்கு? -தமிழ் சிவா

சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்!

சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்! – சேம வங்கி ஆளுநர் எச்சரிக்கை!   “உங்களுக்குப் பத்துக் கோடி உரூபாய் பரிசு விழுந்திருக்கிறது”, “இத்தனை நூறாயிரம் (இலட்சம்) உரூபாய் குலுக்கலில் (lottery) உங்களுக்குக் கிடைத்திருக்கிறது” எனவெல்லாம் அன்றாடம் போலி மின்னஞ்சல்கள் வருவது வாடிக்கையானதுதான். ஆனால், அண்மையில் இது போல இந்தியச் சேம வங்கியின் (Reserve Bank of India) பெயரைப் பயன்படுத்திச் சிலருக்கு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இது தொடர்பாகப் பேசிய சேம வங்கி ஆளுநர் இரகுராம் இராசன், “சேம வங்கி…

நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்

நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல் பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்

விருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு – தொடக்க நிலை மாணவர்கள் கருத்து

விருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு – தொடக்க நிலை மாணவர்கள் கருத்து 1 ஆம் வகுப்பு படிக்கும்போதே விருது (shield)  பெற்றது நெகிழ்ச்சியான , மகிழ்ச்சியான நிகழ்வு – 1 ஆம் வகுப்பு மாணவி திவ்யசிரீ பேச்சு  பாராட்டு விருது பெறும் நிகழ்வு அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு   நண்பர்களே! தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல்…