அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! – தி.வே.விசயலட்சுமி

அறிவியலாளர்கட்கு அறைகூவல்! விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளவேண்டா! ‘எங்கள் ஊரில் விண்ணுக்குப் ‘பறக்கும் விலைவாசி ஏற்றத்தை இந்த மண்ணுக்குக் கொண்டுவர ஏதேனும் வழிமுறைகள் சொல்லுங்கள்! இல்லையெனில் உங்கள் அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! தி.வே.விசயலட்சுமி

நட்சத்திர மட்டையாட்ட அணிப்பெயர்களைத் தமிழில் சூட்டுக! – தமிழ்க்காப்புக்கழகம்

நட்சத்திர மட்டையாட்ட அணிப்பெயர்களைத் தமிழில் சூட்டுக!   தென்னிந்தி நடிகர் சங்கம் சார்பில் கட்டட நிதிக்காக நட்சத்திர மட்டையாட்டம் வரும்  சித்திரை 04, 2017 / ஏப்பிரல் 17, 2016 அன்று நடைபெற உள்ளது.   நட்சத்திர  மட்டையாட்டத்தில்  8 அணிகள் மோதுகின்றன.  8 அணிகளின் பெயர்கள் மாவட்டங்களின் பெயர்களில் ஆனால், ஆங்கிலச் சொல் இணைந்தே உள்ளன.     சென்னை சிங்கம்சு’  ‘மதுரை காளைசு’, ‘கோவை கிங்சு’, ‘நெல்லை டிராகன்சு’, ‘ராம்நாட் ரைனோசு’, “தஞ்சை வாரியர்சு”, ‘சேலம் சீட்டாசு’, “திருச்சி டைகர்சு”  என்பனவே…

நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்……. – இலக்குவனார் திருவள்ளுவன்

நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்…….   பொதுமக்களின் சிக்கல்கள், துயரங்கள் களைய  நடிகர் சங்கம் குரல் கொடுக்காது என்று அறிவித்த நடிகர் சங்கம், இன்று தன் வளர்ச்சிக்காகப்  பொதுமக்களிடம் கையேந்தியுள்ளது.  வரும் சித்திரை 04, 2017 / ஏப்பிரல் 17, 2016 அன்று சென்னையில் சேப்பாக்க விளையாட்டரங்கத்தில் நடிகர் சங்க வளரச்சிக்காக நட்சத்திர மட்டைப்பந்தாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.   பங்கேற்கும்  திரைக்கலைஞர்கள் யாரும் மிகப்பெரிய ஆட்டக்காரர்கள் என்று சொல்ல முடியாது. ஆட்டத்தைத் தெரிந்தவர்கள் என்ற நிலையில் ஒரு பகுதியினரும் பெயரளவிற்கு ஆடுவோர் என ஒரு…

உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா

உலகத்தொல்காப்பிய மன்றம், கனடா   சித்திரை 03, 2047 / ஏப்பிரல் 16, 2016 பிற்பகல் 3.00  – மாலை 5.00   திரு பொன்னையா விவேகானந்தன் :  தொல்காப்பியத்தில் களவியலும் கற்பியலும் – ஒரு நோக்கு  

புதிய வேந்தர்கள் – தமிழ் சிவா

புதிய வேந்தர்கள் சென்ற மாதம் செறிந்த பகலில் இருந்தன மணலும் இன்முக ஆறும் இந்த மாதம் எரிந்த பகலில் அடாவடி அரசியல் கயவோர் ஆற்றைக் கொன்றனர் மணலை அள்ளியே! நன்றி – பாரிமகளிர்: புறநானூறு-112 – தமிழ் சிவா  

புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா

புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா   கந்தப்பளை கோட்லொசு தோட்டத்தில் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்குப் புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண  அவை உறுப்பினர்களான ஆர்.  இராசாராம், சோ.,சீதரன், திருமதி சரசுவதி சிவகுரு,  அறக்கட்டளை அமைப்பின் தலைவர் புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.   ஏறத்தாழ  தனித்தனியே 12  இலட்சஉரூபாய்ச் செலவில் அமைக்கப்படும் 23 வீடுகள் தோட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கான நிதி…

தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத்   தலவாக்கலையில் நடாத்துவதற்கு    மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்!   தொழிலாளர்  நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை   இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி  அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ.வி.கே.சிவஞானம்

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை! – சீ.வி.கே.சிவஞானம் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.   எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள்…

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு  திண்டிவனம் அருகே, கீழ்ப்பசார்  ஊரி்ல், சிதிலமடைந்த சிவன் கோவிலைத் திருப்பணிக்காக தோண்டிய போது, 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் கோவில் திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, கீழ்பசார் ஊர். இங்கு மிகவும் சிதிலமடைந்த நிலையில், சிவன் கோவில் உள்ளது.   இக்கோவிலை மீளமைத்துத்  திருப்பணி செய்வதற்காக ஊர் மக்கள் தோண்டிய போது, தொல்லியல் ஆய்வாளர் கோ.உத்திராடம்  17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்….

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! – தமிழ் சிவா

தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே!   சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி உன்மகன் எங்கே என்று கேட்பவனே! என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன். நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான். வௌவால் தங்கிய குகையாய், அய்யோ ஈன்ற வயிறோ இதுவே, அடேய்! மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக் கும்பிடு போட்டுத் தூக்கி வந்து கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால் தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் /…

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3 – கி. வெங்கட்ராமன்

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3   “தேசியம் குறித்த தருக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்சா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 – 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.   “தேசியம் குறித்த தருக்கத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இஃது உண்மையென்பதும் புலப்படும்.   அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான…