தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!   வரும் தேர்தலில்  அஇஅதிமுக வெற்றி பெற்றுத் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் வருவார் என ஆருடம் கூறவில்லை.   இன்றைக்கும் அவர்தான் முதல்வர் எனத் தேர்தல் தளம்  ஒன்று கூறுகிறது.   தேர்தல் ஆணையர் அறிவிப்புகளை அறிவதற்காகத் தேர்தல் ஆணையத் தளத்தைப் பார்வையிட முயன்றும் வழக்கம்போல் இயலவில்லை. பல முறை முயன்றாலும் ஒருமுறைதான் தளத்தைப் பார்க்க இயலும்.  தேர்தல் ஆணையத் தளத்தின் நிலை இதுதான். எனவே,  தனியார் தளம் (Elections.in  – India’s 1st Elections website)  ஒன்றில்…

கணையாழி / மோதிரம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல் முத்திரை

கணையாழி / மோதிரம் –  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல்  முத்திரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும், 2006 சட்டசபைத் தேர்தலில்  நின்ற போதும் அம்பு  முத்திரையில் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது மக்கள் நலக் கூட்டணியில் ம.தி.மு.க. இ.பொ.க.,  மா.பொ.க. ஆகிய கட்சிகளுடனும் தே.தி.மு.க. தொகுதி உடன்பாட்டுடனும் போட்டியிடுகிறார்.   இத்தேர்தலில் தொல்.திருமாவளவன் வேண்டுகோளுக்கு இணங்க, விடுதலைச்சிறுத்ததைகள்கட்சிக்குக் கணையாழி…

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016  காலை 10.00 – இரவு 10.00 கோயம்புத்தூர்    தமிழ்நாடு சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம்

பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு 23  பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒவ்வோர் ஆண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு  நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23 ஆம் நாள் பங்குனி மாதம் அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron)  வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர்   சேம்சு பெர்ரி (James Berry MP) தலைமை வகித்தார்.  தலைமை விருந்தினராகத் தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டுத்துறை அமைச்சர் …

கொக்குப்பறக்கும் புறாப்பறக்கும் – இராம கவிராயர்

நானேன் பறப்பேன் நராதிபனே! கொக்குப்பறக்கும் புறாப்பறக்குங் குருவிபறக்குங் குயில்பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன் நராதிபனே திக்கு விசயஞ் செலுத்தியுயர் செங்கோல் நடாத்தும் அரங்காநின் பக்கம் இருக்க வொருநாளும் பறவேன் பறவேன் பறவேனே.   இராம கவிராயர்

வளரி – சூல் வாசிப்புத்தளம் வழங்கும் கவிப்பேராசான் மீரா விருது

பங்குனி 21, 2047  / ஏப்பிரல் 03, 2016 காலை 10.00 மதுரை   வழங்குநர் : பேரா.கவிஞர் ஆதிராமுல்லை மீரா படத்திறப்பு : பேரா.தி.சு.நடராசன் அன்புடையீர், வணக்கம். கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு தங்கள் வருகையால்  சிறக்கட்டும்.   கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன்  ஆசிரியர் – வளரி

மெய்யறம் – 1. மாணவர் கடமை : வ.உ.சிதம்பரனார்

  மெய்யறம் தமிழறிஞர் செக்கிழுத்த செம்மல் வ. உ.  சிதம்பரனார்(சிதம்பரம்பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல் ‘மெய்யறம்’ என்பதாகும். இந்நூல். மாணவரியல் (30 அதிகாரங்கள்) இல்வாழ்வியல் (30 அதிகாரங்கள்) அரசியல் (50 அதிகாரங்கள்) அந்தணரியல் (10 அதிகாரங்கள்) மெய்யியல் (5 அதிகாரங்கள்) என ஐம்பிரிவுகளையும் 125 அதிகாரங்களையும் உடையது; அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களையும் விளக்கங்களையும் உடையது. அகரமுதல நவம்பர் 22, 2015 இதழில் மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார் என்னும் தலைப்பில் முதல் அதிகாரத்தின் பாடல் வரிகள் மட்டும் பதியப்பட்டு…

அரபிக்கடலில் தமிழர் ஆட்சி! – மயிலை சீனி.வேங்கடசாமி

  அரபிக்கடலில் தமிழர் ஆட்சி!   அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப்பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத்தீவுகளில் அதற்கு முன்னர் ஆட்சி புரிந்து வந்த அரசர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்.1 மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப்போரில் ஈடுபட்டான்.2   கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும்,…

கொழும்பு கம்பன் விழா 2016

    அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! தொடர்ச்சி கதைப்பாத்திரங்கள்:  சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது]. முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு…

பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்

    ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…

நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு – சென்னைப்பல்கலைக்கழகம்

  பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016  பிற்பகல் 3.00 தமிழ்த்துறை   விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு