அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் – அறிஞர் சி.யூ.போப்பு

அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் பணிவு, அறம், தீங்கினைப் பொறுத்தல் ஆகிய கிருத்துவப் பண்புகள் அரிசுடாடிலால் விளக்கப்படவில்லை….  தமிழ்நெறியாளரால் இம்மூன்றும் பதியும்படி வலியுறுத்தப்படுகின்றன. இம்மூன்றுமே சிறந்த பாக்களான திருக்குறளின் மையக் கருத்துகளாகும். எனவே, நாம் இத்தமிழ்ப் புலவரைக் கிருத்துவராக அழைக்கலாம். -அறிஞர் சி.யூ.போப்பு

திருக்குறளின் பொதுமையுணர்வு – இராதாகிருட்டிணன்

திருக்குறளின் பொதுமையுணர்வு தமிழ்ச் செவ்வியல் நூலான திருக்குறள் வேறுபட்ட சமயத்தவராலும் பிரிவினராலும் உரிமை கொண்டாடப்படும் உண்மையே இதன் பொதுமையுணர்வைப் புலப்படுத்துகின்றது…… திருக்குறள் புத்தசமயத்தவர், சமணத்தவர், சைவர்கள், வைணவர் எனப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. இது “பொதுமறை” என அழைக்கப்படுகிறது.   ஒழுக்கக் கேடரான ஆரிய இனத்தவர் எப்பொழுதும் குடிப்பதும் சூதாடுவதுமாக இருந்துள்ளனர். இவ்விரண்டிற்கும் இரிக்கு வேதத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. – மேதகு இராதாகிருட்டிணன்: சமயமும் பண்பாடும் (Religion and Culture)

நூலை ஆராய்ந்து ஏற்க! – உமாபதி சிவனார்

நூலை ஆராய்ந்து ஏற்க!   தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம் நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம் தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்; தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல் இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே   -உமாபதி சிவனார், சிவப்பிரகாசம், அவையடக்கப்பாடல்

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி   ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பயிலுநர் (apprentice) பயிற்சிக்குப் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre) இடம்: ஐதராபாத்து பணி: ஓர் ஆண்டு பயிலுநர் பயிற்சி காலியிடங்கள்: 42 தகுதி: பொறியியல் துறையில், தொடர்புடைய பிரிவில் 65 விழுக்காட்டு (percentage) மதிப்பெண்களுடன் பட்டயம் (Diploma) அல்லது இளநிலைப் பொறியியல் (B.E), இளநிலைத் தொழில்நுட்பப் (B.Tech)…

இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

  இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.1/2016/MRDPC பணி: தொழில்நுட்பர் (Technician T-1) – 102 பணி: தொழில்நுட்பர் (Technician T-1) ஓட்டுநர் (KVK) – 01 பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant T-4) – 01 பணி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant T-3) – 03 பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01 பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (T-4)…

நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்!

நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்  ஆந்திரப்பிரதேசம் இராசமுந்திரியில் செயல்பட்டு வரும் நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 34 பணி: தொழில்நுட்பர் (Technician: T-1) – 16   தகுதி: பள்ளி இறுதி வகுப்புத் (+2) தேர்ச்சி. பணி: தொழில்நுட்ப உதவியாளர் (களவயல் / ஆய்வகம்) (Technical Assistant: T-3) (Field Farm/Lab) – 18 தகுதி:…

முழுமையாக முடங்கியது வட மாகாணம்

இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம்   வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது.  பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள…

அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.   அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]

வணிகச் சட்ட வாரியத்தில் 109 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    வணிகச் சட்ட வாரியத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: துணைப் பதிவாளர் (Deputy Registrar) – 09 பணி: உதவிப் பதிவாளர் (Assistant Registrar) – 07 பணி: நீதிமன்ற அலுவலர் (Court Officer) – 13 பணி: அணுக்கச் செயலர் (Private Secretary) – 33 பணி: கணக்கு அலுவலர் (Accounts Officer) – 02 பணி: முதன்மைக் கணக்காளர் (Senior Account)…

புதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்

  தனித்தமிழ் இயக்கமும் புதுவைத் திருக்குறள்மன்றமும் இணைந்து வீடுதோறும் திருக்குறள் அன்பளிப்பாகத் தரும் முயற்சியில் 2047 மாசி / கும்பத்திங்கள் 11ஆம் (23.2.2016) நாளில் ஈடுபட்டன.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் முதலியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.   புதுச்சேரிச் சிவாசி நகரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை வரவேற்றனர்.

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி  கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமானர் – பொறியாளர் நிறுவனம் (Garden Reach Shipbuilders & Engineers Limited) எனும் குழுமத்தில் 20 இளநிலை மேலாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 20 பணி: இளநிலை மேலாளர் [Junior Manager (E-0)] தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical), மின்னணுவியல் (Electronics) பிரிவுகளில் பட்டயத் (Diploma) தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணியறிவு(அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். தேர்வு…

எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி

ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது! – நளினி வேதனை      “சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்” என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.   முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி…