சன்தொலைக்காட்சியின் சூரிய வணக்கத்தில் பேரா. மறைமலை

  சன் தொலைக்காட்சியில் மாசி 10, 2047 / பிப். 22.02.2016 திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சூரிய வணக்க நிகழ்ச்சியில் காலை 8.00 மணிக்குப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் செவ்வி / பேட்டி ஒளிபரப்பாகிறது.   http://www.sunnetwork.in/ இணையத் தளத்திலும் காணலாம்.

அரசு நூலகங்களுக்கு நூல் வழங்கு விழா, சென்னை 2

  மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016 :  காலை 11.00   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு மணற்கேணி ஒருங்கிணைப்பில் ஈசா மையத்தின் சார்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நூல்கள் நன்கொடையாக வழங்கும் விழா. இயன்ற நண்பர்கள் வருக!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியீடு!

    மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016. மாலை 6.30. எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியிடப்படுகின்றன.   சென்னையில் நடைபெறுகிற இந்த விழாவில் ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன், தொகுப்பாளர் இலெனின், பாவலர் மனுசிய புத்திரன், இதழாளர் சமசு, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்திரி சேசாத்திரி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். வெளியிடப்படும் நூல்கள்: உயிர்மை வெளியீடு: இச்சைகளின் இருள் வெளி: பாலியல் தொழிலாளி நளினி சமீலாவுடன் உரையாடல். வேற்றுலகவாசியின் குறிப்புகள்: புதிய தலைமுறையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு….

பூவுலகு நெடுஞ்செழியன் நினைவேந்தல்

மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.00 சென்னை 4   காணொளி நேர்காணல்   தமிழகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுதியவருள் முதன்மையானவராக அடையாளங்காணப்படுபவர் தோழர் நெடுஞ்செழியன். தாராளமய உலகமயப் பொருளாதார மாற்றங்கள், சூழலிய நிலைமைகளில் ஏற்படுத்திய எதிர்விளைவுகளை இடதுசாரிப் பின்புலத்தில் திறனாய்ந்தவகையிலும், சூழலியல் சிக்கல்களை சித்தாந்தப் பின்புலத்தில் அணுகியவகையிலும் இன்றளவிலும் அவரது சிந்தனைகள் மீள் வாசிப்பு கோருபவகையாகவே உள்ளன. அவ்வகையில் பசுமை இலக்கியத்திலும் சூழலியல் அமைப்புகளுக்கும் தோழரின் சிந்தாந்த/நடைமுறை பங்களிப்புகளை நினைவுகூர்வது அவரது நினைவு நாளில் அவருக்குச்…

த.நந்திவர்மனின் எழில்பூக்கள்: நூல், குறுந்தகடு வெளியீடு

மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.30 சென்னை 6 ஔவை நடராசன் திருப்பூர் கிருட்டிணன் இசையமைப்பாளர் உதயன் காந்தளகம்

உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

சமற்கிருத எதிர்ப்பு நாளைக் கொண்டாடுவோம்! உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும்!   உலகத்தாய்மொழி நாள் என்பது எந்த ஒரு மொழியையும் உலகத் தாய்மொழியாகக் குறிப்பது அன்று. மாறாக, அனைவரும் அவரவர் தாய்மொழியைக் கொண்டாட வேண்டும் என்பதே நோக்கம்.  1952இல் மேற்குப் பாக்கித்தான், கிழக்குப்பாக்கித்தான் மீது உருமொழியைத் திணித்தது. வங்காளமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகித்தானியர் அதை எதிர்த்துப் போராடினர். வங்க மொழிகாக்கும் போராட்டத்தில் வங்காளியர் பதினொருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொழிப்போரில் ஈடுபட்ட கிழக்குப்பாக்கித்தானின் வங்காளியர் இதை இனப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டமாகவும்…