செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் – கிரிசா ம‌ணாள‌ன்

  செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து!  வ‌ட‌மொழி ய‌டைத்த‌ மாம‌றைக் க‌த‌வினைத் திட‌முட‌ன் திற‌ந்த‌ தேன்மொழி என‌து! மும்மையை யுண‌ர்த்தி முப்பொருள் காட்டும் செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து! பொல்லாப் பிள்ளையி ன‌‌ருளினால் ந‌ம்பிமுன் தில்லையிற் க‌ண்ட‌ திருமொழி என‌து! ஆறுசேர் ச‌டையா ன‌வைமுன‌ம் அணிபெற‌ நீறுசேர் சேர‌ர் நிக‌ழ்த்திய‌ தீந்த‌மிழ்! த‌த்துவ‌ம் யாவும் த‌மிழ்மொழி யுண‌ர்த்த‌லால் ச‌த்திய‌ஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே!   கிரிசா ம‌ணாள‌ன் திருச்சிராப்ப‌ள்ளி girijamanaalanhumour@gmail.com

தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ

தமிழ் மொழி   – பண்பட்ட பழமை மொழி இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களைக் கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்லொன்றை உயிர் ஓவியமாய் உகமதில் வாழும் காவியமாய் சிந்தனையைக் கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு தாவரமாய் வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச் செழுத்திட்ட செம்மொழி தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்…

மாணிக்கவாசகம் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை பெருந்தலைவைர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா   தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகப் போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில்…

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்   மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த…

தாயகத் தாயே போற்றியம்மா! – பவித்ரா நந்தகுமார்

ஈழத்தாய்க்கு அகல் வணக்கம். பெண் எனும் பெருமை பெற்று மனைவி எனும் உரிமை கொண்டு பெற்றாயம்மா புலி எனும் வேங்கையை! இல்லறத்தில் இனியவளாக ஈழத்தின் தாயாக வாழ்ந்து விடைபெற்றீர்கள் இந்நாளில் தாய் கன்றோடு பசி மறக்க நீங்களோ சேயை சேவைக்காக அனுப்பினீர்கள் ஈழத்தின் விடிவு காண பெற்றவள் மனம் கல்லானதோ இல்லை பெரும் ஈக மனம் அம்மா உங்களுக்கு! பிரபாகரன் எனும் தலைவன் பெயர் உச்சரிக்க எமக்குத் தானமாகத் தந்தீர்கள் புலியாகச் சேயினை! கொடு நோய் உங்களை அழைக்க இந்தியக் கொடுங்கோல் உங்களை அவமதிக்க…

பார்வதித்தாயே! பார் வதியும் தாய் நீயே! -செந்தமிழினி பிரபாகரன்

தாய் என்ற சொல்லுக்கே தாயே நீ தானே? தாளாமல் அழுகின்றோம் தாயே வருவாயே! வீரத்தின் இலக்கணத்தைப் பெற்றெடுத்த பெரும் பேறே பார் போற்றும் பார்வதியே! பார் வதியும் தாய் நீயே! பேரெடுத்த பிள்ளை தனை மடி ஏந்திய தமிழ்த் தாயே.. இன வலி சுமந்து நீ பட்ட பாடு… வரலாறு பாடும்.. விழி நீர் சுமந்து என்றும்! உற்ற துயர் புற்றெடுக்க வெற்றுடலாய் உணர்விழந்து உலகெல்லாம் உறவாட உறவிழந்து உயிர் வாடினாய் பட்ட பாடு போதுமம்மா போய் வாடி தாயே! கொடியோர் முன் உயிர்…

ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் !

பங்குனி 01, 20147 / மார்ச்சு 14, 2016 14:00 – 18:00 மணி போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை! செனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை! ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு –  படுகொலைக்கு நீதி கேட்டு  செனீவா,  ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம்! காலத்தின் தேவை கருதி கை கோத்து நீதி கேட்போம்! வாரீர்! வாரீர்! செனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் 14/03/2016 நேரம் 14:00 – 18:00 மணி  ஈகைப்போராளி…

புதுச்சேரி – தனித்தமிழ்க் கழகத்தின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஒளிப்படங்கள்

  .ஆ. 2047   மாசி – கும்பம் 3  -15.02.2016 புதுச்சேரி தனித்தமிழ்க் கழகம் நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா! தலைமை :பெ.தமிழ்நாவன் வரவேற்புரை: சீனு.அரிமாப்பாண்டியன் கருத்துரை: சி.தமிழ்மாறன், சி.வெற்றிவேந்தன், முத்து.சேரன், புதுவைத் தமிழ்நெஞ்சன் சிறப்புரை: முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் நன்றியுரை: கு.அ.தமிழ்மொழி   [ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]

தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது – கவிஞர் முருகேசு

   உழைக்கும் மக்களின் நாவில் இருக்கும்    தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது.    – உலகத் தாய்மொழி நாள் விழாவில் கவிஞர் முருகேசு உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாசி 08, 2047 /  பிப்.20, 2016  அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில், “உழைக்கும் மக்களின் நாவில் உயிர்த்திருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும்,…

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி! –இரா. இரவி

‌இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்குத் தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி எண்ணிலடங்காச் சொற்கள் கொண்ட தமிழ்மொழி எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி பழமைக்குப் பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி புதுமைக்குப் புதுமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி இணையில்லாப் புகழ்மிக்க உயர்தனித் தமிழ்மொழி முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி உலகிற்குப்…

உயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி

உயிர் நாவில் உருவான உலகமொழி நம் செம்மொழியான தமிழ் மொழியே மென்மையும் தொன்மையும் கலந்த தாய் மொழியே நீ தானே தனித்துத் தவழும் தூய மழலை தேன் மொழியே இலக்கணச் செம்மையில் வரம்பே இல்லா வாய் மொழியே மும்மைச் சங்கத்தில் முறை சாற்றும் இயற்கை மொழியே இலக்கணப் பொருளின் அணிச்சிறப்பாய் அளவெடுத்த செய்யுள் மொழியே நம் தாய் மொழியாம்! – ஃகிசாலி http://www.eegarai.net/t74296-topic