மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் – அப்துல் கையூம்

மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர்  [ 1955/1924 – 2033/2002]   இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர்.  வரலாற்றாய்ப்  போகின்றவர் வெகு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று.  வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும்.  ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும். அதற்கு எடுத்துக்காடு நம் பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர். தமிழ்…

தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்!   தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் ‘அகரமுதல’ முதலான பல இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் செய்தியாளரும் கட்டுரையாளரும் ஆன வைகை அனீசு மறைந்து 3 திங்கள் ஆகின்றது. அவர் பிரிந்ததை இன்னும் உணராச் சூழலில் குடும்பத்தினர் இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   வரும் கல்வியாண்டிற்கு ஐந்தாம் வகுப்பு பயிலப்போகும் மகனுக்கு [செல்வன் அகமது இன்சமாம் உல் அக்கு – Ahmed Inzamam-ul-Haq] உரூபாய் 28.000,…

குமரித்தமிழ்வானம் அமைப்பின் நூற்கள் திறனாய்வு

  நூற்கள் திறனாய்வு குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் ப.மாதேவன்(பிள்ளை) எழுதிய”ஒரு கோட்டைக்கதைகள்” சிறுகதைத்தொகுப்பும், கிருட்டிணகோபால் எழுதிய,”ஆடிமாதமும் வயலின் இசையும்” சிறுகதைத்தொகுப்பும் திறனாய்வு செய்யப்படுகின்றன. நாள்:  மாசி 09, 2047 / / 21-02-2016 ஞாயிறு மாலை 4.00 மணி. இடம்:பாபு(சி) நிலையம், மரவாடி(timber depot)தெரு,  இராணித்தோட்டம், நாகர்கோவில்.

தொல்லியல் ஆய்வுமையம் – நூல் வெளியீடும் பாராட்டரங்கமும் கருத்தரங்கமும்

  மாசி 09, 2047 / 21.02.2016 காலை 10.00 – மாலை 5.00 திருச்சிராப்பள்ளி கீழ்வாலைப் பாறைஓவியங்களின் மருமங்கள் – ஆங்கில நூல் வெளியீடு  

தமிழக உயர்கல்வியும் எதிர்காலமும் – கருத்துக்களம் , சென்னை 41

  மாசி 09, 2047 /  21.02.2016 மாலை 6.30 – 8.00 பேருரை : இராமு.மணிவண்ணன் பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர்

இருநூல் வெளியீட்டு நிகழ்வு, தியாகராயநகர், சென்னை

  மாசி 09, 2047 / 21.02.2016 மாலை 4.00 சரவணகுமாரின் கருப்புச்சட்டை இரவிபாரதியின் முதல் படி தலைமை : அற்புதம் அம்மாள் வெளியீடு : கோவைஇராமகிருட்டிணன் பெறுநர்:  கொளத்தூர் மணி

இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா

இசை, தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர்   இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்து, இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கி விட்டது. பேரறிஞர் அண்ணா: தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18-19

தாய் மொழியிலேயே எல்லாம்! – பேரறிஞர் அண்ணா

தாய் மொழியிலேயே எல்லாம்!   தமிழ்நாட்டார் மட்டுமே வேற்றுமொழியில் பாடுவதைக் கேட்கின்றனர். தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி பெற்று வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது. பேரறிஞர் அண்ணா : தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18

சமூக ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு! – நாமக்கல் ஆட்சியர்

குமுக (சமூக) ஆர்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு   நாமக்கல் மாவட்டக் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகஆர்வலர் பணியிடத்திற்கு வரும் பிப்பிரவரி 25-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:   குழந்தைகள் தத்தெடுப்பு மாநில ஆதார மையத்தின் மூலம் தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் இல்லம் குறித்த நிலையை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும் பணியிடம் காலியாக உள்ளது.   இப்பணியிடத்திற்குக் சமூகச் சேவை, குமுகவியல் (சமூகவியல்), உளவியல், குழந்தை வளர்ச்சி, மனையியல் ஆகிய ஏதேனும்…

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்   தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம்  பிப்பிரவரி 15  முதல் 29–ஆம் நாள் வரை 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைக் களைதல், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளவர்கள் பெயர்களையும் இறந்தவர்கள் பெயர்களையும் நீக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.  …

புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்

ஏழை  எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி!  இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.   உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…

ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி

வல்லிசையின் எளிய பறவை   கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட…