வீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்

தை 02, 2047 / சனவரி 16, 2016   உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்   ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் நமது தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது” என கூறி…

இலக்கு – ஆண்டு நிறைவு

மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம்.                    இளைஞர்களுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக  ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம்  இலக்கு.   இது –    * இளைஞர்களுக்கான இலக்கியப்  பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை…    2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08   “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி)   இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *…

916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்

செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் –  தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்

அறிவாயுதத்தின் கருத்துக்களம் – சிந்துவெளியில் முந்துதமிழ் நாகரிகம்

மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016 மாலை 3.00 – 5.00 பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர்,  சென்னை 600 042    

தொல்காப்பியர் தலைசிறந்த மொழிநூல் புலவர் – சி. இலக்குவனார்

   சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப்படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக்குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக்குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும் ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள்ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவராகவும் விளங்குகின்றார்.    மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி; அக்கருவி வழக்காற்றினுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும்…