குறள் கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்:  ௪௱௩௰௭ – 437) நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார் திருவள்ளுவர். பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவை; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத்…

உ.வே.சா.வின் என் சரித்திரம்  125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை

(உ.வே.சா.வின் என் சரித்திரம்  124 : எனக்கு உண்டான ஊக்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-85 கோபால ராவின் கருணை திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது கல்லூரியைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகத்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புகளைக் காட்டிக் கொண்டு வந்த கோபாலராவு நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவு கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில்…

நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக : இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 5 நிலையில்லாச் செல்வததால் நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக! செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும் –நாலடியார், செல்வம் நிலையாமை, 8 பொருள்:  நாம் செல்வமுடையவர்கள் என்று மகிழ்ந்து தாம் இனி இறப்பிற்குப் பின் போக உள்ள  மறுமையுலகத்தை நினைத்துப் பார்க்காத சிற்றறிவுடையோரின் மிகுந்த செல்வம், இரவில்,…

மெய்ம்மி – tissue: இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம் மெய்ம்மி – tissue ஆகத்து 29, 2012    12:03  இந்தியத் திட்ட நேரம் உடல் என்றும் கூறப்பெறும் மெய் அமைய ஏதுவாக ஓரே திறனும் ஒத்த பண்பும் கொண்ட உயிர்மிகள்(cells) இணைவதற்கு மெய்ம்மிகள் என்று பெயர். திசு எனத் திஃச்யூ (tissue) என்னும் சொல்லின் தமிழ் ஒலிவடிவமாகக் கூறப்படுவது இதுவே ஆகும். நெய்வு என்னும் பொருளுடைய இலத்தீன் சொல், பழைய பிரெஞ்சில் இடம் பெற்று, . அதிலிருந்து இடைக்கால ஆங்கிலத்தில் உயர்வகைத் துணியைக் குறிக்கும் (tissu என்னும்) சொல்லில் இருந்து…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் முதன்மைப் பங்கு இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை. பெரியார் ஈ. வெ. இராமசாமியும்  எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய,…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 : உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!  “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”                       கலித்தொகை 149 : 6 – 7  கலித்தொகை – நெய்தற் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை – மருதம் கி.மு. காலத்துப் பாடல் ஒற்கம் என்றால் வறுமை. தான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம்…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம் 

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு   22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும்  – தொடர்ச்சி) 7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 – 500 பாலத்தீனமும் இந்தியாவும் கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க இரத்தினக் கற்களையும் கொடுத்தாள். சீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (I Kings….

உயிர்மி (உயிரணு) – cell-இலக்குவனார் திருவள்ளுவன்

உயிர்மி (உயிரணு) Cell (Biology) ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம் நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல். செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி, தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள்…

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 126 & 127; நூலரங்கம்

நிகழ்வில் ஒரு மாற்றம் – பெரியாருக்குக் கடிதங்கள் நூல் குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் திறனுரை வழங்குவார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)  தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 126 & 127; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 பங்குனி 23, 2056  ஞாயிறு 06.04.2025  காலை 10.00 மணி…

உடல் உறுப்புகள் விளக்கம், இலக்குவனார் திருவள்ளுவன்

உடல் பழந்தமிழர்கள் உடலுறுப்புகளுக்கு வைத்துள்ள பெயர்களும் அவர்களது அறிவியல் அறிவை உணர்த்துன்றன. சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம். ‘உடு’ என்பதன் அடிப்படையில் உயிருக்கு உடுப்பு போல் அமைந்தது உடல் எனப்பட்டது. பண்டத்தை உள்ளே வைத்துக்கட்டப்பட்டது பொதி. அதுபோல் உறுப்புகளை அடக்கிய உடல் ‘பொதி’  எனப்பட்டது.  கட்டப்படுவதை யாக்கை என்பர். தோல், நரம்பு, எலும்பு, தசை, குருதி முதலிய தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பதால்  யாக்கை என்றனர். கூடை முடையப் பெற்றிருப்பது  போல் ‘தாதுக்களால்’   முடையப்பட்டது முடை என்று சொல்லப்பட்டது. உயிர் புகுவதற்குரியது உடல்; ஆதலின் உடலைப்  புகல் என்றனர்; திரண்டு அமைந்ததைப் பிண்டம்  என்பர்; உயிர்மிகளால் திரண்டுஅமைந்த உடல் பிண்டம்  எனப்படுகிறது. இவை  போன்று…

க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார்

(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – -தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்           க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள். இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், (இ)லட்சியம், (இ)லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர்…

இலக்குவனார் திருவள்ளுவனுக்குப் படைப்பாற்றல் அரசு விருது

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் பங்குனி 08, 2056, மார்ச்சு 22, 2025 அன்று புதுச்சேரியில் இலக்கியப்போடடிப் பரிசளிப்பு விழாவும் மகளிர் நாள் விருது வழங்கு விழாவும் கொண்டாடியது. இவ்விழாவில் ‘அகரமுதல’ ஆசிரியர் எழுத்தாளர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுக் கட்டுரைப் பிரிவில் முதல் பரிசு வழங்கியதுடன் படைப்பாற்றல் அரசு விருது வழங்கிப் பாராட்டியது. புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின் நிறுவனர்,தலைவர், செயலர், பொருளர், பிற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர்.