யானையியல் – இலக்குவனார் திருவள்ளுவன், புதிய அறிவியல்

யானையியல் (யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன. தும்பி, கரிணி, தோல், கண் டாலி,கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,வழுவை, வேழம், வாரணம், மொய்யே,உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,தந்தி, அத்தி, கடிவை, கயமே,நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,மத்த மா,வே மதகயம், ஆம்பல்,இபம்(ஏ),…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை        —————————————————————           தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான்.  ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல்                பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட       270           நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன்…

தமிழ் முத்துக்கள் விருது வழங்கு விழா, இளவேனில் விழா

தமிழர் தன்னுரிமைக் கட்சி தமிழ் வல்லான் பெருமக்களுக்கு விருது வழங்கு விழா தமிழ்ச்சித்திரைப் புத்தாண்டு வரவேற்பு இளவேனில் திருவிழா பங்குனி 19, 2056 புதன் ஏப்பிரல் 02, 2025 இடம் : செ.நா.தெய்வநாயகம் பள்ளி தியாகராய நகர், சென்னை 600 017 தலைமை: பாவலர் மு.இராமச்சந்திரன் தலைவர், தமிழர் தன்னுரிமைக் கட்சி

சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 941. Assurance காப்புறுதி   வாக்குறுதி   காப்பீடு   உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, வாழ்க்கைக் காப்பீடு, அறுதியிடல்,உத்தரவாதம் எனவும் பொருள்கள்.   இறப்பு முதலிய துயர நிகழ்ச்சி அல்லது இழப்புகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல்.     சட்டப்பூர்வச் சூழலில், “உத்தரவாதம்” என்பது ஒரு பொறுப்புறுதி அல்லது வாக்குறுதி.     வாக்குறுதியின் அடிப்படையில்தானே காப்பீடு வழங்கப்படுகிறது. எனவே,   இது…

நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக!: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: தொடர்ச்சி) அறம் புரிந்து அருளாளர் ஆகுக ! தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். -நாலடியார், செல்வம் நிலையாமை, 7 பொருள்: சூரியனை, முகத்தல் அளவுக்கருவியான ‘நாழி’ போன்று அளவுக் கருவியாகக் கொண்டு வாழ்நாளை இயமன் நாள்தோறும் அளக்கிறான். அவ்வாறு முழுமையாக உண்பதற்கு முன்னதாக அருள் உடையவர் ஆகுங்கள். இல்லாவிடில் பிறந்தும் பிறவாதவர்போல் கருதப்படுவீர் சொல்…

நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? தலைப்பைப் பார்த்ததும் இசுலாமியருக்கு எதிராக அலலது நோன்பைப் பழிக்கும் வகையில் சொல்வதாகக் கருதக் கூடாது. தூய நோன்பு குறித்த சொல்லாட்சி தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில் இரமலான் நோன்பு குறித்துத் தெரிந்து கொள்வோம். (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும்) உறுதி யேற்பு(கலிமா), தொழுகை, நோன்பு, தானம், மெக்கா நகரில் உள்ள கஅபாவிற்குப்) புனிதப் பயணம்(Hajj) ஆகியன இசுலாத்தின் ஐந்து தூண்களாகும். கஅபா(Ka aba) என்றால்…

உ.வே.சா.வின் என் சரித்திரம்  124 : எனக்கு உண்டான ஊக்கம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம்  123 : இரண்டாவது பாடம்-தொடர்ச்சி) என் சரித்திரம்  அத்தியாயம்-84 எனக்கு உண்டான ஊக்கம்       இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி கல்லூரிக்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், சீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று இராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். சாக்கிரதையாகப்…

பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்! : சங்கப்புலவர்கள் பொன்னுரை– 6  : இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 : பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!- கலித்தொகை  “என்றும்பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்சான்றவர்க்கு எல்லாம் கடன்”                நல்லந்துவனார், கலித்தொகை 139, 1-3 நோ என்றால் துன்பம் எனப் பொருள். நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய். பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறது. இங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது….

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு   22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென்இந்தியாவும்  – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு  21 : வருணங்கள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதைகளின் தொகுப்பாகிய சாதகக் கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தருமவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக…

நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!:  இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-தொடர்ச்சி) பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை , 6 பொருள்: வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும். எனவே, பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே!…

நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-இலக்குவனார் திருவள்ளுவன்

(நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-தொடர்ச்சி) இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க! சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை – நன்றேகாண் முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடியார்  பாடல் 24) பொருள்: (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சற்று நேரம் சென்றதும் மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிக்கும் பொழுது இனி இறக்கப் போகிறவர்கள், பாடையில் இறந்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்புச்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 98. எது அறிவு? நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராகத் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா? நண்பன் :…