மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக

    சூன் 3 ஆம் நாள்  இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச்  சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.   மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.  எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 27 – 49

   (சித்திரை 28,2045 / 11 மே 2014   தொடர்ச்சி)   27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் – சிலப்பதிகாரம், பதிகம் 10   28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37- 29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி  – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38   30. ஆடல் பாடல் இசையே தமிழே  – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 45 31. நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல்…

யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ! ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !! இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது?  

உயிர் பறிக்கப்பட்ட பொன்முருகன் குடும்பத்தார்க்கு உரூ 5 கோடி இழப்பீடு வழங்குக!

   பொன்முருகன் செய்தியாளர்களிடம் செல்வாக்குள்ள வளர்ந்து வரும் இதழாளர் ஆவார்.   ‘இன்றைய வணிகம்’ நாளிதழ் ஆசிரியர், ‘அரசியல் சதுரங்கம்’ மாத இதழ் ஆசிரியர் என இதழாசிரியப் பணியாற்றி வந்தவர்.  இந்தியன் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஆகத் தொண்டாற்றி யவர்.    30.4.2014 அன்று இரா. பொன்முருகன் சென்னை சோழவரம் நெடுஞ்சாலையில் துள்ளுந்து (மோட்டார் சைகிள்)வண்டியில் சென்றபோது மாலை 6.30 மணியளவில்  பாலத்தில் வண்டி மோதி மிகவும்  வலுத்த அடி ஏற்பட்டுவிட்டது. அவசரப்பண்டுவத்திற்காக, அம்பத்தூர் நிலா மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்க்கப்பட்டது. பின்னர் 2.05.2014…

இதழாளர் பொன் முருகன் நினைவேந்தல் – படத்திறப்பு

19.05.2014 அன்று பொன்.முருகனின் நினைவேந்தல் நிகழ்வு பெரும்புலவர் கி.த.பச்சையப்பனார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி சிவ இளங்கோ இல்லத்தில் நடைபெற்றது.   அவ்வமயம், கவிஞானி அ. மறைமலையான் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராசா அவர்கள் பொன்முருகனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் மறைமலை இலக்குவனார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் திரு. பெ. மணியரசன், பாவலர் தமிழேந்தி(மா.பெ.பொ.கட்சி),  சங்கப்பலகைத் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன் மூத்த இதழாளர் டி.எசு.எசு.மணி, பொன் முருகனின் தந்தை அன்றில் இறைஎழிலன் ஆகியோர்…