மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 4 இந்திஎதிர்ப்புப் போராட்டங்கள் அடுத்து இக்கால இந்திஎதிர்ப்புப் போராட்டங்களுக்கு வருவோம். 1930-1940 இல் எழுந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ‘முதல் மொழிப்போர்’ என்கின்றனர். பொது மொழி விரும்பிய வடநாட்டுத்தலைவர்கள் இந்தியைப் பரப்பும் பணி 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. 1893இல் ‘நகரி பிரச்சாரனி சபா’ எனக் காசியிலும் 1910 இல் அலகாபாத்தில் ‘இந்தி சாகித்திய சம்மேளன்’ என்றும் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1905 இல் பனாரசில் தேவநாகரி பரப்புரை அவை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 120: அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 119: அத்தியாயம் 81. பிரியா விடை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி கும்பகோணம் நிலையத்தில் இறங்கி இரவு பத்துமணிக்கு நான் நேரே தியாகராச செட்டியார் வீட்டை அடைந்தேன். மாணாக்கர்களிடம் பேசிக்கொண்டிருந்த செட்டியார் அப்போதுதான் அவர்களுக்கு விடையளித்து விட்டு ஆகாரத்துக்குச் செல்ல எழுந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. ஆதலால் என்னைக் கண்டவுடன் ஆச்சரியமடைந்து, “ஏது? இதற்குள் உங்களை அனுப்ப சந்நிதானத்துக்கு மனம் வந்ததா?” என்றார். “ஆம், இன்று நல்ல நாளாக இருந்தமையால் என்னை அனுப்பினார்கள். திதியென்று சொல்லி…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 வணக்கமுங்க ஐயா. காலையில் சாப்பிட்டீர்களா? அதெல்லாம் முடித்து விட்டேன். இன்று நம் வேலையைத் தொடருவோம். சரிதாங்க ஐயா. மாறன் மல்லிகை உடனே சேரக் கூடாது. அது பற்றிப்பேசப் போகிறேன். மாறன் மல்லிகை காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் சீக்கிரமே எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள் அல்லவா? ஆமாம். மரபு தழைக்க வேண்டும். உறவு வலுப்பட வேண்டும் என இவர்களின் காதலுக்கு ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் உடனே சேரக்கூடாது. பல தடைகளை மீறித்தான் சேர…
குறள் கடலில் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 4. அறிவுரைகளைக் கேட்பனவே செவிகள். பிற துளைகள்! கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 418) கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர். புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 3 ஆரிய மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா? ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்…
குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 3 கேள்விச்செல்வத்தால் அறியாமையைப் போக்கு! பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 417) நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர். காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை-தொடர்ச்சி) பூங்கொடி இசைப்பணி புரிந்த காதை சண்டிலி வருகை மணக்கும் தென்றல் மாமலை எழிலும், கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன் கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித் 55 `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும் ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங் கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும் சேர்த்தருள் செய்’கெனச்…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 2 எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர். இறைவன் படைத்தது…
சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 916. assistance, need; need assistance உதவி தேவை தேவை உதவி பணியில் அல்லது ஒரு சூழலில் உதவி அல்லது ஆதரவு தேவை எனக் கேட்பதையும் அவ்வாறு உதவி தேவையா எனக் கேட்பதையும் குறிக்கிறது. இவ்வாறு உதவி வேண்டுமா எனக் கேட்பது ஒரு கண்ணியமான வழி. தனியர், குழு, மக்கள், நாடுகள் முதலியன ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கும்போது …
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 71-73-தொடர்ச்சி) 74. மரக்கவிப் புலவர் சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – – ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற எண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார். ‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்துமரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்திமரமது வழியே…
குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 2 நல்லன கேட்டு நற்பெருமை உறுக! எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 416) சொல்லப்படும் அளவைப் பொருட்படுத்தாமல் நல்லவற்றைக் கேட்க. அஃது அந்த அளவிற்கேனும் சிறந்த பெருமை தரும் என்கிறார் திருவள்ளுவர். பெருனார்டு பரூச்சு (Bernard M. Baruch) என்னும் அரசியலாளர், “நான் அறிந்த பெரும்பாலான வெற்றியாளர்கள், கேட்பதில் கருத்து செலுத்தியவர்களே” என்கிறார். “எனைத்தானும்”…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 1 மொழிப்போர் நமது பாடத்திட்டத்தில் இடம் பெறாததால்தான் இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போராளிகள் குறித்தோ, இந்தி முதலான பிற மொழித்திணிப்புகளின் கொடுமை குறித்தோ தமிழ்க்காப்பு உணர்வு தேவை என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. இனி ஒரு மொழிப்போர் தோன்றாத அளவிற்கு இந்தித்திணிப்புகளும் பிற மொழித்திணி்பபுகளும் இலலாதவாறு ஆவன செய்ய மொழிப்போர் வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும். இந்தித்திணிப்பை மட்டும் குறிப்பிடாமல் சமற்கிருதம், ஆங்கிலம் முதலான பிற மொழித்திணிப்புகளையும் அவற்றிற்கான எதிர்வினைகளையும் பார்க்கப்போகிறோம். எனவே்தான், இந்தித்திணிப்பு என்றோ இந்தி…
