அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்
(எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் அ. தமிழும் – தமிழரும் தமிழ்நாட்டில் இன்று ஆரியர், ஆந்திரர், கன்னடர், துளுவர், கேரளர், துருக்கியர், ஆங்கிலோ-இந்தியர் முதலிய பலர் வாழ்கின்றனர். ஆயினும், பல்லாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதனால் இவர்கள் தம் தாய்மொழி “தமிழ்” என்றே மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், படிக்கவும், வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் போதும் பதிவு செய்கின்றனர். அவர்கள் இல்லங்களில் ஒருவர்க்கொருவர் உரையாடும் போதும், உறவினர்களுடன் பேசும்போதும், அவரவர் உண்மையான தாய்மொழிகளாகிய சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்,…
குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க! அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர். அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வி…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 16 : ஆகமங்களின் தோற்றம் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – தொடர்ச்சி) 5. ஆகமங்களின் தோற்றம் வேதங்களுக்கு எதிரான ஆகமங்கள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ‘’இந்தியத் தத்துவத்தின் சுருக்கம்” என்ற என் நூலில், இந்தியர்களால் இன்று பின்பற்றப்படும் சமயம், பெரும்பாலும் ஆகமங்களையே முழுமையாக அடிப்படையாகக் கொண்டுளது. வேதங்களோடான தொடர்பு ஒருசிறிதும், அல்லது, அறவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். வேத நெறிக் கடவுள் வழிபாட்டு முறையான வைதீக நெறி , மகாபாரதப் போருக்குப் பின்னர் அழியத் தொடங்கிவிட்டது. இக்காலை, அது பெரும்பாலும் அழிந்தே விட்டது….
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி) பூங்கொடி பொதிகைக் காட்சி தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்; முடியும் நடுவும் முகிலினம் படர்தரக் 110 கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச் சில்லெனுந் தென்றல் மெல்லென வீச நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப அலரும் மலரும் அடருங் கடறும் பலவும் குலவி நிலவும் மாமலைக் காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக்…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 இவ்வாறு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 28.08.1937 இல் கண்டனக் கூட்டம் நடைபெற்றுக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமான முந்தைய சில சூழலையும் பார்ப்போம். 1937இல் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதிவ் இந்தியத் தேசியப் ்பேராயக் கட்சி(காங்கிரசு) 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 14.07.1937இல் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இந்திப் பரப்புரை அவையத்தில்(இந்தி பிரச்சார சபாவில்)பேசிய இராசாசி வணிகத்திற்கும் அரசியல் தொடர்பிற்கும் தென்னிந்தியர்க்கு…
தமிழ்க்காப்புக் கழகம் /ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்/ஞாயிறு 09.02.2025
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௮ – 418) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம் தை 27, 2056 ஞாயிறு 09.02.2025 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் தஞ்சைப் பாவலர் சோலை ஆ.மதிவாணன் திருக்குறள் ஆய்வுச்…
சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 921. assistance, receive; receive assistance ஏற்கை உதவி பெறுகை உதவி கைக்கொள் உதவி உதவி பெறல் உதவி ஏற்றல் சட்ட அடிப்படையில், உதவி பெறுவது என்பது வழக்கில் வழக்கறிஞரை அமர்த்த முடியாத பொழுது இலவயச் சட்ட உதவியை ஏற்பதாகும். வழக்கு நுட்பம் சாந்த சட்ட அறிவுரைகளைப் பெறலையும் குறிக்கும். 922. assistance, render…
குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன?- இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 5. தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன? செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 420) செவி மூலம் பெறும் கேள்விச் செல்வத்தின் சுவையை உணராதவர்கள், வாய் மூலம் பெறும் உணவுச்சுவையை மட்டும் விரும்புபவர்கள் இறந்தாலும் என்ன? உயிரோடு இருந்தாலும் என்ன? தகவலியலறிஞர்கள் கேள்வியறிவு உடையவர்களே வெற்றிகரமான தலைவர்களாகவும் தொழில் தலைவர்களாகவும் உள்ளனர் என்கின்றனர். இரிச்சர்டு…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 77. இரு குரங்கின் கைச்சாறு பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான். ‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது. இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான். அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ!…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 5 காந்தி, சத்தியமூர்த்தி வழியில் இராசாசியும் இந்திப் பரப்புரைப் பணியில் ஈடுபட்டார். இந்தியப் பள்ளிகளில் பிரித்தானியர் வரலாறு ஆங்கிலத்தில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்று திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் கூறினார் அவர். தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவது அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார். இராசாசியும் சத்தியமூர்த்தியும் தொடர்ச்சியாக இநதிப் பரப்புரையில் ஈடுபட்டனர். எனவே, பெரியார் ஈ.வெ.இரா. “தம் குடியரசு இதழில், பழையன கழிந்து…
தமிழ்நாடு என்றால் திராவிடமே!- பேரறிஞர் அண்ணா
தமிழ்நாடு என்றால் திராவிடமே! தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும் எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடே யல்லாமல், தமிழ்மொழிப் பிரிவினையையே உடைய கருத்தில் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு. என்றும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், “தமிழே . திராவிடம் என்று மாறிற்று” என்றும் சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட…
குறள் கடலில் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார் – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 4 – இலக்குவனார்திருவள்ளுவன் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார்! நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 419) நுட்பமான கேள்விச்செல்வத்தைக் கேட்டு அறியாதவரால், பணிவான சொற்களைக் கூற இயலாது என்கிறார் திருவள்ளுவர். தீவிரமாகக் கேட்பவர்(active listener) அடுத்தவர் என்ன சொல்கிறார என்பதை அடக்கத்துடன் கேட்கும் இயல்பைப்பெற்று விடுகிறார் எனக் கல்வி உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அடக்கத்துடன் கேட்பவர்கள்,…
