உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 74: நான் பதிப்பித்த முதல் புத்தகம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-74 நான் பதிப்பித்த முதல் புத்தகம் திருநெல்வேலியில் மேலை இரத வீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம்ஒன்று உண்டு. அதனை ஈசான மடம் என்று சொல்லுவர். நானும் மகாவைத்தியநாதையர் முதலியோரும் மதுரையிலிருந்து போன சமயம்அவ்விடத்தில் மடாதிபதியாகச் சாமிநாத தம்பிரானென்பவர் இருந்துஎல்லாவற்வையும் கவனித்து வந்தார். நாங்கள் அவருடைய ஆதரவில் அங்கேதங்கியிருந்து சுப்பிரமணிய தேசிகரது வரவை எதிர்பார்த்திருந்தோம். வாதம் தேசிகர் பல சிவ தலங்களைத் தரிசித்த பிறகு திருநெல்வேலி வந்துசேர்ந்தார். பாண்டி நாட்டிலுள்ள பிரபுக்கள் பலரும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 861. Agreement with the crew கப்பல் பணியாட்களுடனான உடன்பாடு கப்பல் பணியாளர்களுக்கும் உரிமையாளருக்கும் ஏற்படும் வேலை ஒப்பந்தமாகும். பொதுவாகப் பன்னிரு திங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே, புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.   crew  என்றால் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுநர் எனப் பொருள். எனவே, குழு என்றாகிறது. crew என்னும் சொல் கப்பல், படகு, வானூர்தி, விண்கலம் அல்லது  தொடரியில் பணிபுரியும், இயக்கும் அதிகாரிகள் நீங்கலான ஒரு குழுவைக்…

தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன்

(தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை + புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 4 தமிழர் பண்பாடு வேடன் எப்போதும் பொய்த்துப் போகாமல், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் தென்னக மேட்டு நிலப்பகுதி, ஆண்டாண்டு காலமாக அரிப்புற்று அரிப்புற்று வந்ததன் விளைவால் சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய நனிமிகத் தொன்மை வாய்ந்த நிலப்பகுதியாம். அம் மலைநாட்டின் அடிவாரத்தில், தண்டகன் என்ற அரசன் பெயரிடப்பட்ட, தன் நிலைபேற்றிற்காக, ஆதி மனிதன் மேற்கொண்ட வாழ்க்கைப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை-தொடர்ச்சி) பூங்கொடி தங்கத் தேவன் கொதிப்புரை           `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி! வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில் இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல்                   விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்;    145           மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச் செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்; கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி மேவினன் போலும், மிடுக்கினைத் தொலைப்போம்;                   தேவ பாடையின் சிறப்பினை நாட்டுவோம்;    150           யாவரும்…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40

(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 39. முதலாளிக்குத் திறமை இல்லை! பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள். பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி இலாபம் எனக் கையெழுத்திட்டு கடை நடந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். நிலமும் வாங்கிவிட்டான். முதலாளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏதோ தவறு செய்கிறான்’ என்று சிலர் சொல்லியும் முதலாளி நம்பவில்லை. காரணம் இதுதான்…

அன்னை சேதுமதியின் நினைவேந்தல், சுந்தரராசன் படத்திறப்பு, தமிழ்த் தொண்டறத்தாருக்குப் பாராட்டு

அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30 இடம்: நான் ஓர் இ.ஆ.ப.கழகம்(ஐ.ஏ.எசு.எகாடமி)(அஞ்சலகம் பின்புறம்) 3362, ஏ.இ.தொகுதி, 8 ஆம் தெரு, 10ஆம் முதன்மைச் சாலை, அண்ணாநகர், சென்னை 600 040 நிகழ் நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : கலைமாமணி தி.க.ச.கலைவாணன் தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்திறப்பு திறந்து வைப்பவர்: புலவர் மா.கணபதி வரவேற்புரை : தமிழ்மாமணி…

3ஆம் உலக முத்தமிழ் மாநாடு, 2025 – இலங்கை & தமிழ்நாடு

உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் ஒருங்கிணைப்பில் மூன்றாம் உலக முத்தமிழ் மாநாடு 2025 நாள் தை 4-5, 2056 —-17-18 சனவரி 202 (இலங்கை) தை 11-12, 2056 —- 24 -25 சனவரி 2025 (திண்டுக்கல்) மையக் கருப்பொருள் பன்முகத் தளத்தில் தமிழியல் இணைப்பின் மகிழ்வில் தமிழ் மாமணி முனைவர் தாழை இரா.உதயநேசன் (நிறுவனர்/தலைவர்) முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் பொதுச்செயலாளர் மின்வரி : mutamilconferencewmf2025@gmail.com

சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 851. Affidavit         உறுதியம்உறுதி யுரை ஆவணம்; உறுதி ஆவணம்; உறுதியாவணம்   ஆணை மொழி ஆவணம், பிரமாணப் பத்திரம் .ஆணை மொழி ஆவணம் . உறுதிப்பாடு; உறுதிமொழி; உறுதிமொழி ஆவணம்; உறுதிமொழித்தாள்; உறுதிமொழித்தாள்ஆணைப்பத்திரம்எனப் பலவாறாகக் கூறுகின்றனர்.   தான் கூறுவது உண்மைதான் என்று உறுதி செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம்.   நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்த…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 110: அத்தியாயம் – 72: நான் பெற்ற சன்மானங்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்–73 நானே உதாரணம் சுப்பிரமணிய தேசிகர் எழுபொற் கோட்டை வழியாகக் காளையார் கோயில் முதலிய தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு மதுரைக்கு அருகிலுள்ள திருப்பூவணத்தை அடைந்து அங்கே பரிவாரங்களுடன் தங்கினார். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட காலங்களிலும், தேவாரம், தலபுராணங்கள் முதலியவற்றைப் படித்த காலங்களிலும் பல சிவத்தலங்களுடைய வரலாறுகளை நான் அறிந்திருந்தேன். பிள்ளையவர்களுக்கும் அவரோடு பழகியவர்களுக்கும் சிவத்தல தரிசனத்தில் ஆவல் உண்டு. நான் அத்தகைய சமூகத்திற் பழகியவனாதலின் இடையிடையே…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,  9. 6. அரண் ஏமம்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்- தொடர்ச்சி ) அறிவியல் திருவள்ளுவம் ++ஃ திருவள்ளுவரை அறிவியற் கவிஞராகக் கண்டோம்ஃ ”யாம்” என்று நம்முடன் நேருக்கு நேர் பேசித் திருவள்ளுவர் காட்சி தந்தார்.ஃ அப்பெருமகனாரின் பட்டறிவுப் பேச்சு குடும்பத்தையும், தனிமாத்தப் பண்பாட்டையும், குமுகாயத்தையும் அளவிட்டுக் காட்டியது.ஃ ”அறிவறிந்த” என்னும் ஒருசொல் அறிவியல் சொல்லாகப் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றதுஃ அறிவியலில் ஓர் இயலான வானவியல் ஒரு குறளின் இரு தொடர்களில் பொதிந்துள்ளமை நயப்பில் நம்மை நிறுத்தியது. ஃ நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி,ஃ…

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 3 2.தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை தமிழர், தென்னிந்திய மண்ணுக்குரியவர் ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 841. Advisory Jurisdiction அறிவுரை வரம்பு   சட்டம் தொடர்பில் அரசியல் யாப்பின்படியான அமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் மேல் நீதிமன்றத்தின் அறிவுரையை நாடலாம். நீதிமன்ற அறிவுரை என்பது நீதிபதியின் வழிகாட்டும் அறிவுரையே.   சட்டமன்றம் அல்லது பொது அலுவலர்கள்  எழுப்பும் வினாக்கள் அடிப்படையில் அறிவுரை வரம்பு வரையறுக்கப்படுகிறது.   அரசியல் யாப்பு பிரிவு 143 இன்படிக் குடியரசுத் தலைவர் பொது முதன்மை வாய்ந்த எது குறித்தும்…