தமிழர் பண்பாடு, தொடர்ச்சி – புலவர் கா.கோவிந்தன்

(தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன், தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 6 தமிழர் பண்பாடு தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய அறிவியல், ஒரு சிறிதே துணை புரியவல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நன்மிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக் கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மண்ணும், தண்டகன் பெயர் பெறும் காட்டின் அழிந்த புல் பூண்டுகளின் கூளமும் கலந்த கலவையாம் நிலப்பகுதி, ஆற்றுப்படுகைக்கு அப்பால் கிடந்தது. இந்நிலப்பகுதிதான், பருத்திச்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச்                   சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5           தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்; அருண்மொழியும் இசைதல்           `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்;           பூண்டநல்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 44. செட்டியாரும் காகமும் செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம். மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது. நரி – “காக்கா காக்கா – உன் குரல் எவ்வளவு அழகாக – இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது. காகம் அதை நம்பி, வாய்திறந்து – கா கா என்றது. உடனே மூக்கிலிருந்த வடை விழவே – அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது….

சட்டச் சொற்கள் விளக்கம் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 876. alternative and cumulative remedy மாற்று – திரள் தீர்வழி மாற்று ஒட்டுமொத்தத் தீர்வழி திரள் தீர்வழி என்பது தரப்பாருக்கு நடைமுறையில் உள்ள தீர்வைவிடக் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகும். ஒரே இரண்டு தீர்வழிகளும் தவறு செய்பவருக்கு அல்லது தவறு செய்பவர்களுக்கு எதிராக அவரால் அல்லது அவர்களால் பாதிப்புற்றவருக்கு அல்லது பாதிப்புற்றவர்களுக்கு வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. தீங்கிழைத்தவர் ஒரே ஆளாக இருப்பின் தீர்வழிகளில் மிகுதியான மாறுபாடு இருக்காது. எடுத்துக்காடடாக மண…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-75 இரண்டு புலவர்கள் புலவர்கள் பலர் உள்ள புளியங்குடியென்னும் ஊரிலிருந்து இருவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க ஒரு நாள் செவந்திபுரத்திற்கு வந்தனர். அவர்களோடு வந்த கட்டைவண்டியில் பல ஓலைச் சுருணைகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் திண்ணையில் இறக்கி வைத்தனர். அப்போது அத்திண்ணையிலிருந்து தேசிகர் எங்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். வந்தவர்களையும் அந்த ஏட்டுச் சுருணைகளையும் கண்டபோது, “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்ற…

பேரா.சி.இலக்குவனார் 116ஆவது பிறந்தநாள் நிகழ்வு, சென்னை

பள்ளிக்கல்வித் துறை பொது நூலக இயக்ககம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரம், சென்னை 85பள்ளிக்கல்வித் துறை செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் 1 பேராசிரியர் சி.இலக்குவனார் 116ஆவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வு கார்த்திகை 02, 2055 ஞாயிறு  17.11.2024 மாலை 5.00 சிறப்புரை முனைவர் மறைமலை இலக்குவனார் இயக்குநர் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் நிகழ்விடம் இரண்டாம் தளம் ஆ பிரிவு அண்ணா நூற்றாண்டு நூலகம்

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில் திருத்துறைக் கிழார் கட்டுரைகள் அணிந்துரை வை.மு.கும்பலிங்கன்    திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 கட்டுரைகளும், தமிழ்நாட்டுத் தோப்பில் 9 கட்டுரைகளுமாக மொத்தம் 42 கட்டுரைகளைத் தொகுத்து அவர்தம் மகளார் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இங்கு  தந்துள்ளார். தற்போது, இத்தோப்பின்…

தமிழர் பண்பாடு- தொடர்ச்சி: புலவர் கா.கோவிந்தன்

(தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன், தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 5 தமிழர் பண்பாடு- தொடர்ச்சி: புலவர் கா.கோவிந்தன் ஆயர் குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். அக்காலக் கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் வாழ்வில் பண்டே பழக்கப்பட்டு, வேட்டை ஆடுவார்க்குப் பெரிதும் பயன்பட்ட நாயையும் வளர்த்துப் பயன்கொள்வதாய, மனித நாகரீக முன்னேற்றத்தின் அடுத்த பெருநிலையை எட்டிப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் தூண்டு மொழி           தங்கத் தேவன் தகவல் அறிந்ததும் `எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்;                  யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக்         180           கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்;     —————————————————————           கட்படு – கண்ணில்படும், செகுத்து – அழித்து, முனம் – முன்பு. ++ உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக் கொய்தமை வேன்’எனக் கூறி முடிக்கக் கைதவன் ஏம கானன் கயவனும்             `நிற்பகை கொண்டோர்…

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் 115 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா

தமிழேவிழி!                                                       தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 115 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) கார்த்திகை 02, 2055 * ஞாயிறு காலை 10.00 *17.11.2024 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள் முனைவர் ஞானம் பாண்டியன் முனைவர் நாக.இளங்கோ நூலாய்வு: தமிழ்ப்போராளி…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43: குடும்பம்

(அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்நூறு 3.  குடும்பம்41. திருமண வீடு ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான். அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்” – என்றான். “திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா” என்று நண்பன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 871. alternative dispute resolution பிணக்குத் தீர்வு மாற்று வழி   பிணக்கு ஏற்படும் பொழுது நீதிமன்றம் செல்லாமல் வேறு வழிகளில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ளும் வழி.   நடுநிலை இணக்குவிப்பு, சேர்ந்து முடிவெடுக்கும் குடும்பச்சட்டம் முதலியன மாற்று வழிகளாம். 872. alternative இரண்டில் ஒன்றான, மாற்றுவழி, ஒன்றுவிட்டு ஒன்று   இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒன்றுக்கு மாற்றாக அமையும் வாய்ப்பு. 873. Alternative plea…