‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்
‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’ -‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம். இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள். பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால்…
மதுரையில் மூலிகை மருத்துவப் பயிற்சிச் சான்றிதழ்
மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி- விரிவுப்பணித்துறை திட்ட அலுவலர் சாந்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:– மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர் கல்வி-விரிவுப்பணித் துறை சார்பில், 6 மாதகால மூலிகை மருத்துவம் சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10– ஆம் நாள் தொடங்கும் இந்தப் பயிற்சி, வாரத்தில் 3 நாட்களுக்கு (ஞாயிறு முதல் செவ்வாய் வரை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, மாணவ–மாணவியர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது….
திருக்குறள் கழகத்தலைவர் பா.இராமையா காலமானார்
புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் தலைவர் பா.இராமையா அவர்கள் 5.2.14 புதன்கிழமை இரவு காலமானார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த நெய்வேலி என்னும் சிற்றூரில் 15.03.1935 இல் பிறந்தவர். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர் புதுக்கோட்டை இந்தியன் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கல்லூரியில் பயிலும்பொழுதிலிருந்தே நல்ல தமிழுணர்வும் பகுத்தறிவும் கொண்டவராக விளங்கினார். திருக்குறளின் பால் தீராக்காதல் கொண்டிருந்த இவர் தனது பணிநிறைவிற்குப் பின்னர் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனரால் தொடங்கப்பட்டு இயங்கி வந்த திருக்குறள் கழத்தின் தலைவராக…
தாவணி நாள் கொண்டாடுக! – சகாயம் வேண்டுகோள்
கூட்டாலை(கோவாப்டெக்சு) நிறுவனம் உலக மகளிர் நாளான மார்ச்சு 8 அன்று தாவணிநாள் கொண்டாட முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் வேட்டி நாள் கொண்டாடியதுபோல், மார்ச்சு 8 வரையிலான ஒரு நாள் தாவணி நாள் கொண்டாடும்படி அதன் மேலாண் இயக்குநர் சகாயம் இ.ஆ.ப. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கேற்ப கூட்டாலை விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வேட்டிநாளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுபோல், கல்லூரி மாணாக்கியரிடமும் பல்கலைக்கழக மாணாக்கியரிடமும் தாவணி நாளுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தி எதிர்ப்பில் சிறை சென்ற செம்மல்கள், 1964
தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்புப் போரில் வெஞ்சிறை புகுந்துள்ள தமிழ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ, பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.ஏ, தோழர் எசு.சே. இராமசாமி, எம்.எல்.ஏ. தோழர் விழுப்புரம் சண்முகம், எம்.எல்.ஏ, தோழர் ஆ.தங்கவேலு, எம்.எல்.ஏ, தோழர் என் இராசாங்கம், எம்.எல்.ஏ, தோழர் அன்பில் தர்மலிங்கம் எம்.எல்.ஏ, தோழர் எம்.எசு.மணி, எம்.எல்.ஏ, தோழர் து.ப.அழகமுத்து, எம்.எல்.ஏ, தோழர் தியாகராசன், எம்.எல்.ஏ, தோழர் வெங்கலம் எஸ்.மணி, எம்.எல்.ஏ, தோழர் நாராயணன், எம்.எல்.ஏ, தோழியர் செகதாம்பாள் வேலாயுதம் எம்.எல்.ஏ, – குறள்நெறி: ஆனி…
தலை முடியில் குப்பாயம்(hair coat) உருவாக்கிய சீனப் பெண்
பீகிங் : சீனாவின் சாங்கிங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் சியாங்கு ரென்சியன்(Xiang Renxian) என்னும் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் பணியில் இருக்கும் பொழுதே தன் 34 ஆம் அகவயைில், தலைவாரும் பொழுது சீப்பில் சிக்கும் முடிகளைத் தனித்தனி இழைகளாப்பிரித்துச் சேமித்து வைத்தார். தான் சேமித்து வைத்த முடிகளைக்கொண்டு 110,000 இழைகளை உருவாக்கியுள்ளார். 2003 ஆம் ஆண்டு முடியிழைகளைக் கொண்டு கணவருக்குக் குப்பாயமும் தொப்பியும் உருவாக்கத் தொடங்கினார். 11 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை உருவாக்கி முடித்துள்ளார். ஒவ்வோர் இழையும ஏறத்தாழ 70 சிறுகோல்(செ.மீ.)…
வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்
வாழ்க்கை என்பது போராட்டம் – எனில் போரில் கலந்து வென்றிடுவோம் வாழ்க்கை என்பது விளையாட்டு – ஆயின் ஆடி வாகை சூடிடுவோம் வாழ்க்கை என்பது பயணம் – ஆனால் இனிதே இலக்கை அடைந்திடுவோம் வாழ்க்கை என்பது கேளிக்கை – என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம் வாழ்க்கை என்பது கணக்கு – எனவே போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம் வாழ்க்கை என்பது வரலாறு – அதனால் செம்மைச் செயலைப் பதித்திடுவோம் வாழநாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம் எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம் மெல்ல…
கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு… – மே.சி.சிதம்பரனார்
கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு விடைகள் வினா 6 : மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் சிஞ்சித்தும் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல் என் மனத்தில் பதிகிறது. இதில் உங்கள் மனச்சாட்சி என்ன? விடைகள்: நம்நாட்டிற்கு அண்டை நாடுகள் பண்டைக்காலம் தொட்டு வாணிபம் போக்குவரவு முதலியவை நீடிப்பினும், அந்நாட்டு மொழிகள் நட்பு மொழிகளானாதால் மொழி வளர்ச்சியே யன்றிக் கேடில்லை. ஆட்சி மொழிகளாக வந்தவைதான் மொழியைச் சிதைத்தனவென்பது மேலே கூறினோம். இந்தி ஆட்சிமொழியாக வந்தும் வராததின் முன்பே பல தமிழ்ச் சொற்களழிந்தமையையும் எடுத்துக் காட்டினோம். இந்தி…
இந்தி முதன்மைத் தனி ஆட்சி – பேராசிரியர் சி.இலக்குவனார்
இந்தி முதன்மையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆயினும் நடுவிட ஆட்சியாளர் அதைப் பொருட்படுத்தக் காணோம். ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு மட்டும் முதன்மையளிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 1. இந்தியறிவு இல்லையேல் அரசு ஊழியர்க்கு ஊதிய உயர்வு இல்லை என்றனர். 2. இந்தியறிவு பெற்றால் ஊதியம் உயர்த்தப்படும் என்றனர். 3. அரசுத்துறை ஆவண ஏடுகளில் தலைப்புக் குறிப்புக்கள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறந்துள்ளது. 4. பாராளுமன்றில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்துவதற்குரிய வசதிகள்…
மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து
நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965 ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித்…
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: மத்திய அரசுக்கு செயலலிதா வற்புறுத்தல்
இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத்தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாதுரைக்கு மறுமொழி அளித்து முதல்வர் செயலலிதா பேசியது: “இலங்கைத் தமிழர்கள் சிக்கல் பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொருத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் பன்னாட்டுப் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை…
பழி வராமல் படி – பாவலர் வையவன்
ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…
