தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! – தொல்காப்பிய மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை

தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் இணைய வழியில் ஆற்றிய தலைமையுரை (புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024– முதல் நாள்) எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் நேரிடையாகவும் இணைய வழியாகவும் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்களே! தமிழன்பர்களே, தொல்காப்பியப் பற்றாளர்களே, அனைவருக்கும் வணக்கம்.  மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியும் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டியும் வரும் தொல்காப்பிய மன்றத் தலைவர்…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. விளைவு ‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம். ‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்….

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 – முனைவர் சான் சாமுவேல்

(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 1856-இல் தென்னிந்தியாவில் பேசப்படும் ஒன்பது மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக இனங்கண்ட காலுடுவெல் தமது இரண்டாவது பதிப்பில், அஃதாவது 1875-இல், மேலும் மூன்று மொழிகளையும் இணைத்து 12 மொழிகளைத் திராவிட மொழிகளாக இனங்கண்டு காட்டினார். இன்று திராவிட மொழிகளின் எண்ணிக்கை         35-ஐத் தொட்டுள்ளது. வட இந்தியாவில் பேசப்படும் பிராகுயி போன்ற சில மொழிகள் திராவிட மொழிகளின் பட்டியலில் இணையவே தென்னிந்திய மொழிகளாகத் திராவிட மொழிகளை நோக்கிய பழைய குறுகிய பார்வை பரந்து விரிந்து…

உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா நிகழ்ச்சி நிரல்

கனடா – தொல்காப்பிய மன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு தொரண்டோ நகர், கனடா புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,22, பொதுவறுசிறப்பின்புகார் பிற்பகுதி

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி பொதுவறு சிறப்பின் – பிற்பகுதி மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச்சரும், கூடிக் கண்ணை கவரும் வனப்புடன் அமைத்த அரசன் பெருங்கோயில் இருப்பது பட்டினப்பாக்கம்; பெரு வாணிகத் தெருவும், மன்னரும் விழையும் மாநிதி படைத்த வாணிகப் பெருமக்களின் மாட மாளிகைகள் நிறைந்த நெடிய வீதியும், வேதம் வல்லமறைவோரும். வேள்குடிவத்தோரும் வாழும் வீதிகளும், அரண்மனையைச் சூழ் அமைந்திருந்தன. மருத்துவரும், நாளறிந்து கூறும் கணியரும் தனித்தனியே வாழும் வீதிகளும், முத்துக் கோப்போர்,…

சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 781. Adjudication Committee நீதிமுறைக் குழு   எதிர்ம நடவடிக்கை மேல்முறையீடுகளைக் கேட்டுத் தீர்ப்பதற்கு அமைக்கப்படும் இடைக்காலக் குழு. 782. Adjudicative Process தீர்ப்புப் படிமுறை     நீதிமுறையில் தீர்மானிக்கும் நெறிமுறை. தீர்ப்புச் செயல்முறை. 783. Adjudicator தீர்ப்பாளர், தீர்ப்பு வழங்குபவர், தீர்ப்பு வழங்குநர்   பூசல் அல்லது தகராறு அல்லது போட்டியில் தகுநிலையில் தீர்ப்பளிப்பவர். 784. Adjudicatory Bodies (Adjudicatory Body) தீர்ப்புரைக் குழாங்கள்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?-தொடர்ச்சி) பூங்கொடி கயவர் தாக்குதல்           முரடர் சிலர்அம் மீனவன் முகத்தில்                  குருதி சிதறக் குத்தினர்; மயக்குறக்        185           கட்டவிழ்த் தேகினர்அக் கருணை மாந்தர்; சுட்டாற் செம்பொன் கெட்டா போகும்? முட்டாள் தடுக்க முற்படின் பயணம் தொட்டார் குறியிடம் விட்டொழி வாரோ?                  மயங்கினன் கிடக்கும் மகன்றனை வளர்த்தவன்     190           புயங்களிற் சுமந்து தன்மனை புகுந்தனன்;     —————————————————————           தேலா – தோற்காத, வேட்டம் – வேட்டை, கோடு –…

கிரந்தப் பயன்பாடு தமிழ்ப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கவே!I இலக்குவனார் திருவள்ளுவன்| விசவனூர் வே.தளபதி

இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை கிரந்தப் பயன்பாடு தமிழ்ப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கவே!

சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 771. Adjourn Sine Die கால வரையறையின்றி ஒத்திவைப்பு   வேறு நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு   இலத்தீனில் sine  என்னும்  சொல்லிற்கு இன்றி என்றும்   diē என்னும் சொல்லிற்கு நாள் என்றும் பொருள். சேர்த்து வரும் பொழுது நாளின்றி எனப் பொருள் தருகிறது.  எனவே, நாளில்லாமல் – நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பது எனப் பொருளாகிறது.   நீதிமன்றம், வழக்கினை மறு/வேறு நாள் குறிப்பிடாமல் – கால வரையறையின்றி மறு…

அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் – 24-26

(அறிவுக் கதைகள் நூறு 21-23 தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 24. பேராசிரியர் தேடிய மனிதன் மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் போகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவர்களில் ஒருவன் வியப்படைந்து, “ஏன் ஐயா பட்டப்பகலிலே மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றிக்கொண்டு ஒவ்வொருவர் முகத்திலும் காட்டி அனுப்புகிறீர்களே, என்ன காரணம்?”…