தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்கள் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்கள் தமிழே! காணுரை வினா தொடுப்பவர்: விசவனூர் வே.தளபதி முற்றம் தொலைக்காட்சி: https://www.youtube.com/watch?v=XauhwWOlVrI
சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 761. Adequate Grounds போதுமான காரணங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள, நீக்க, வழக்கினை எடுத்துக் கொள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்ய, மேல் முறையீட்டை எடுத்துக்கொள்ளப் போதுமான தற்சார்பான காரணங்கள் இருத்தல். மாநில நீதிமன்றங்களில் இருந்து வரும் வழக்கை எடுத்துக் கொள்ள உச்ச நீதி மன்றம் தரப்பாட்டை வரையறுப்பதற்கான போதிய காரணங்கள். 762. Adequate Reasons To The Contrary மாறாகச் செய்வதற்குப் போதிய காரணங்கள் மாறாகப்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 104 – மடத்திற்கு வருவோர்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்பூ 67 சந்திரசேகர கவிராச பண்டிதர் சுப்பிரமணிய தேசிகரது அன்பு வர வர விருத்தியானதை நான் பல வகையிலும் உணர்ந்தேன். கும்பகோணம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களை ஏதேனும் முக்கியமான விஷயமாகப் பார்த்துப் பேசி வர வேண்டுமானால் தேசிகர் என்னை அனுப்புவார். சங்கட நிலை அக்காலத்திற் கும்பகோணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படாமையால் திருவாவடுதுறையிலிருந்து நான் பெரும்பாலும் கும்பகோணத்துக்கு அடிக்கடி நடந்தே செல்வேன். கிட்டத்தட்ட 12 கல் தூரம் இருக்கும். அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப்…
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ – முனைவர் சான் சாமுவேல்
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ ஐரோப்பிய நாட்டு அருட்தொண்டர்களுள் காலுடுவெல்லின்(Caldwell) அளவிற்குத் தமிழாய்வில் மிகப்பெரும் பங்களிப்பு நல்கியோராக எவரையும் குறிப்பிட முடியவில்லை. தமிழரின் விழுமிய அறக்கோட்பாடுகள் ஐரோப்பிய நாட்டு அறிஞர் உலகில் பரவ அடியெடுத்துக் கொடுத்தார் வீரமாமுனிவர் எனப்பெயரிய பெசுக்கி எனும் இத்தாலிய நாட்டு இறைத்தொண்டர். அச்சுப்பொறியினைத் தரங்கை மண்ணில் நிறுவி நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து அச்சுக்கலையினைத் தமிழர் கையில் வழங்கினர் சீர்திருத்தச் சபையினைத் தமிழ் மண்ணில் நிறுவிய செருமன் நாட்டு இறையடியார் சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg) அவர்கள். தமது முன்னோடிகளான இவர்களது…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் ஆ. செல்வம் ‘பிணியின்மை’யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது “செல்வம்”. ‘செல்வம்’ என்றால் என்ன? ‘செல்வம்’ என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் ‘செல்வம்’ என்று கொள்கின்றோம். நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம். மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி பொதுவறு சிறப்பின் புகார் பூம்புகார் எனும் தொடர் அழகிய புகார் நகரம் எனப் பொருள்படும். புகார் எனும் பெயர், பொதுவாகத் துறைமுக நகரங்களைக் குறிக்கும் என்றாலும், அது சிறப்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தை மட்டுமே குறிக்க வழங்கும். புகார் எனும் பெயர், அது கடற்கரையைச் சேர்ந்த ஒரு நகரம் என்பதை மட்டுமே உணர்த்தும். காவிரிப்பூம்பட்டிளம் எனும் அதன் பிறிதொரு பெயர், அஃது இருந்த இடம் இஃது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கும். பட்டினம் எனும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 751. Address, Special தனிப் பேருரை ஒரு பொருண்மை குறித்துச் சிறப்பு அழைப்பாளரால் அல்லது சிறப்பு நிலையில் அளிக்கப்பெறும் சொற்பொழிவு. 752. Addressing Evidence ஆதாரங்களை அணுகுதல் ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதற்கு, அடிப்படை ஆதாரங்களைத் துணைக் கொள்ளல். 753. Addressing The Court நீதிமன்ற விளி சொல் நீதிமன்றத்தாரை விளிக்கும் மதிப்பிற்குரிய சொல்லாட்சி. வழக்கினை நீதி மன்றத்தில் எடுத்துரைக்கும் பாங்கு. 754. Adduce Evidence சான்று…
ஆளுமையர் உரை 109 & 110 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 109 & 110 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : ஆவணி 30, 2055 ஞாயிறு 15.09.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இதழாளர்…
தமிழர் எண்ணிக்கையைச் சரியாகக் குறிக்க வேண்டாவா? | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
தமிழர் எண்ணிக்கையைச் சரியாகக் குறிக்க வேண்டாவா? | இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை – முற்றம் தொலைக்காட்சி செவ்வி காணுநர் – விசவனூர் வே.தளபதி < https://www.youtube.com/watch?v=A118vVTdmHU >
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 66 : சாதி ஏது?
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்-தொடர்ச்சி) பூங்கொடி சாதி ஏது? சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ? பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்; 155 தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது; அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ? கதிரும் நிலவும் காற்றும் மழையும் 160 எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே! தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ? கபிலர் அகவல்…
சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 741. Additional Court கூடுதல் நீதிமன்றம் நீதிமன்றத்தின் பணிச்சுமையைப் பகிர்வதற்காகத் துணைச் சேர்க்கையாக அமைக்கப்படும் நீதிமன்றம் கூடுதல் நீதிமன்றம் ஆகும். கூடுதல் நீதிமன்றம் என்பது இயல்பான நீதிமன்றமாகவும் இருக்கலாம், அமர்வு நீதிமன்றம் முதலிய பிற நீதிமன்றமாகவும் இருக்கலாம். Additional District Magistrate மாவட்டக் கூடுதல் குற்றவியல் நடுவர் மாவட்டக் குற்றவியல் கூடுதல் நடுவர் கூடுதல் மாவட்டக் குற்றவியல் நடுவர் கூடுதல் மாவட்டத்திற்கான…
அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் ஊ.போப்பு, எ.எல்லீசர், ஏ.ஞானப்பிரகாசர், ஐ.தனிநாயகம்- பா.வளன் அரசு
(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு – தொடர்ச்சி தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 6. இங்கிலாந்துச் சான்றோன் சார்ச்சு யுக்ளோ போப்பு (1820-1908) : அருளாலயம் உருவாக்குதல், அறிவாலயம் எழுப்புதல், திருக்குறள் முதலான இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், அயல் நாட்டவர்க்குத் தமிழை அறிமுகப்படுத்துதல், தமிழ் உணர்வையும் பண்பாட்டையும் நிலைநாட்டுதல் ஆகிய பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்ச்சிக்காகத் தொண்டுள்ளத்தோடு சேவை செய்த செம்மல் போப்பு. எட்டு ஆண்டுகள் சாயர்புரத்தில் திருத்தொண்டாற்றிய…
