திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா
பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…
சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்
அசித்தர் பேசி – 93827 19282 தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட் – உருப்பருப்பு, படகரு அங்குட்டம் – பெருவிரலளவு அசோகு – பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம் – கோழி முட்டை நெய்மம் அண்டவாதம் – விரையழற்சி அட்சதை – மங்கல அரிசி அத்தர் …
தொல்காப்பிய விளக்கம் – 5 (எழுத்ததிகாரம்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன் மரபு : 13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகும் தெரியும் காலை. மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும். ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் உள்ள ‘ம்’ அரை மாத்திரை பெறாது. கால்மாத்திரையே பெறும் என்பர். 14. உட்பெறு புள்ளி உருவாகும்மே….
வள்ளுவர் வகுத்த அரசியல்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இ. படைமாட்சி படைமாட்சி – படையினது பெருமை. ஒரு நாட்டாட்சி நன்கு நடைபெறவும், நாட்டில் வாழ்வோர் அச்சமின்றித் தத்தம் கடனை ஆற்றவும் படை மிகமிக இன்றியமையாததாகும். அருள்நெறியில் ஆட்சி புரிவதாகக் கூறும் நாட்டுக்கும் படை இன்றியமையாதது. மக்களுக்குய தீக்குணங்களாம் பொறாமை, செருக்கு, பெருவிருப்பம், பிறரை ஆட்படுத்தும் எண்ணம் முதலியன ஒழியும்வரை படை வேண்டற்பாலதே. ஆதலினன்றோ இன்னா செய்தார்க்கும் இனியன செய்ய வேண்டும் என்று விதித்திடும் ‘குறள் நெறி’ அரசுக்கு வேண்டிய இன்றியமையாதனவற்றுள் படையை முதற்கண் வைத்துள்ளது. “படை, குடி,…
சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்
பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திசம்பர் 11 அன்று பதவி ஏற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில் வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர் இரு முதுகலைப்பட்டங்கள் , இரண்டு சட்ட முதுகலைப் படிப்பு, இரண்டு முனைவர் பட்டம் ஆகியனவற்றிற்கு உரியவர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி அறிவியலராகப் பணியாற்றி…
சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையைத் தடுக்க வேண்டும் – மரு.இராமதாசு
சிங்கப்பூரில் சிற்றிந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப் பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்:– சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் சிற்றிந்தியா (லிட்டில் இந்தியா) பகுதியில் நிகழ்ந்த சாலை நேர்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்றிந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உட்பட 25 இந்தியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் தளையிட்டுள்ளனர்….
தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடின்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது
– செம்மொழி இராமசாமி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் க.இராமசாமி கருத்துரையாற்றினார். அப்பொழுது அவர், “தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றிக்…
மாமூலனார் பாடல்கள் – 5 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான்! இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர்! என் மகளைப் பிரிந்த யானோ? – தாய் கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன். பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். சோழ நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க்கொண்டு வர நினைத்தான்: படை எடுத்துச் சென்றான். சோழநாட்டில் வெண்ணி என்ற இடத்தில்…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள் குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின. குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்). அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டது; மண்ணுமங்கலம் என அழைக்கப்பட்டது(நூற்பா.91,பொருள்). போர்க்களத்தில் வீரர் அடையும் மரணம் சீரும் சிறப்புமாக கொண்டாப்பட்டது. அவரை மதிப்புச் செய்யும் வகையில்…
புதிது புதிதாய் சிந்தனை செய்
-கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை. புதிது உள்ளது சிறத்தல் வளர்ச்சியின்…
மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது
மானாமதுரை: இந்திய அரசின் “சங்கீத நாடக அகாதமி’ சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம் உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இசைக்கருவிகள் உருவாக்தக்தில் பங்களிப்போரையும் கலைஞராகக் கருதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, மானாமதுரை குலாளர் தெரு, கேசவன் மனைவி மீனாட்சி (60), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின்…
கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?
– கலைஞர் வினா? கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில், ”கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?” எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு: “கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்’ எனக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது….
