சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 561. Acquitas sequitur legem / legm சமன்மை சட்டத்தின் வழியதாகும்.   சமன்மை அல்லது சமன்நெறி அல்லது நடுவுநிலைமை என்பது சட்டத்தைப் பின்பற்றியதாகும்.  இதன் மூலம் சட்டத்தின் வழி நடுவுநிலைமையைப் பேண வேண்டும் எனலாம்.   இஃது இலத்தீன் தொடர். சமன்மை நெறியே சட்ட நெறி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். அதுவே தமிழர் நெறி. நடுவுநிலைமை எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவனர் தனி ஓர் அதிகாரத்தையே தந்துள்ளமை…

தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை-ஓர் ஏமாற்று வேலை- இலக்குவனார் திருவள்ளுவன் + விசவனூர் வே. தளபதி

காணுரை முற்றம் தொலைக்காட்சி தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை இலக்குவனார் திருவள்ளுவன் நேர் காண்பவர் விசவனூர் வே. தளபதி

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 4. கண்டதும்கேட்டதும், 5. கொள்ளும் குத்துவெட்டும், 6. தூங்கு மூஞ்சிகள்

(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 4. கண்டதும் கேட்டதும் மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன் – அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லாரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது. இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன். பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி – ‘உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்?…

சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 551. Acquisition Of Possession   உடைமையைக் கையகப்படுத்தல்   உரிமையாளரிடமிருந்து அவரது இசைவுடனோ இசைவின்றியோ அவரின் உடைமையைக் கைப்பற்றல். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.   கீட்டன் என்பார் கூறுவதற்கிணங்க, விடுதிக் காப்பாளர், விடுதியில் தங்கியிருப்பவர் விடுதிக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அவரது உடைமையைக் கைப்பற்றல் சரியான நடவடிக்கையே. இருப்பினும் இவற்றைக் காவல்துறையினர் முன் மேற்கொள்வது ஏற்றதாகும். 552. Acquisition Of Property சொத்து…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்-தொடர்ச்சி) என் சரித்திரம் நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேட உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு…

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். 1. அச்சுக்கலைத்‌ தந்த ஆந்திரிக்கசு அடிகளார்‌ முன்னுரை : உலக மொழிகள்‌ மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின்‌ முதன்‌ மொழியாக ஒளியுடன்‌ மிளிர்வது தமிழ்‌. இரண்டாயிரத்துப்‌ பத்து மொழிகளில்‌ இடம்‌ பெற்றுள்ள விவிலியத்‌ திருநூல்‌, பாபேல்‌ கோபுரம்‌ கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத்‌ தமிழ்‌ திகழ்ந்ததைத்‌ தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில்‌ (1:1-2)இரண்டு தொடர்கள்‌ இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம்‌ முழுவதும்‌ ஒரே மொழியும்‌ ஒரே வார்த்தையும்‌ இருந்தன. பாபேல்‌ கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர்‌ தமிழர்‌. கிழக்கே இருந்து சென்ற தமிழர்‌ சிநேயார்ச்சு‌ சமவெளியில்‌ தங்கி…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. அறிவியல் அறிமுகச் சொல் இவ்வாறு தனித்தன்மையுடன் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்ட இக்குறட்பாக்கள் மூன்றும் மற்றொரு வியப்பையும் உள்ளடக்கியனவாகும். அதுதான் இக்காலம் வளர்ந்து விரிந்துள்ள அறிவியலின் குறிப்பும் பொருந்தியுள்ளமையாகும். முன்னே கண்ட பக்கம் 25, 26 அறிவியல் விளக்கத்தையும் இக்குறட்பாக்களின் கருத்தேற்றத்தையும் பொருந்திக்காண வாய்ப்புள்ளது. மூன்று குறட்பாக்களும் சொல்லமைப்பிலும், கருத்தமைப்பிலும் பட்டறிவிலும், ஒத்துள்ளமையால் ஒரு குறளைக் கொண்டே பொருத்திக் காணலாம். அவற்றிலும் ”பெறும் அவற்றுள்” (61) என்னும் குறட் கருத்தைப் பொருத்திக்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  11. மனமும் இனமும் செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது: உணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை,…

சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 541. Acquiring Property சொத்தினை அடைதல்   வணிகச்சொத்துகள் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து கை மாறுகின்றன. சொத்து கையகப்படுத்தல் என்பது மனைவணிகச்சொத்தின் மீது உரிமை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கான செயல்முறையைக் குறிப்பது. 542. Acquisition   கையகப்படுத்துதல்   அகப்படுத்தல், கைப்பற்றுகை, கைப்பற்றல், கைக்கொள்ளல், ஈட்டல், திரட்டூக்கம்,  ஊறல், அடைவு, செயல், தேட்டம்,  உழைப்பு, பெற்றி, பேறு, உரிமை,  சேகரம், சம்பாத்தியம், ஈட்டியது, முயன்றடைதல், …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைஇசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாதுவசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;`தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின்…

இராமன்தான் திராவிட மாதிரியின் முன்னோடி என்றால் அது நமக்குத் தேவையில்லை | இலக்குவனார் திருவள்ளுவன் 

முற்றம் தொலைக்காட்சி காணுரை இலக்குவனார் திருவள்ளுவன்  விசவனூர் வே.தளபதி நாள் ஆடி08, 2055 புதன் 24.07.2024 இராமன்தான் திராவிட மாதிரியின் முன்னோடி என்றால் அது நமக்குத் தேவையில்லை

சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 531. Acquired Company நிறுவனத்தைப் பெறுதல்   ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் மீதான உரிமையை வாங்கிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வணிக நடவடிக்கையாகும். 532. Acquired Evidence சான்றாதாரம் அல்லது சான்றாதாரங்கள் அடைதல்   உண்மையை அல்லது குற்றத்தை மெய்ப்பிப்பதற்காக அடையப்படும் சான்று. 533. Acquired Immunity நோய்மி எதிர் அடைவு   நோய்த் தடுப்பாற்றலைப் பெறுதல்.   நோய்த்தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி நோய்…