அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்
(அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ. – தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 3. கருமித்தனமும் சிக்கனமும் பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார். அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே – வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி – குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன்…
சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 521. Acquainted With Handwriting கையெழுத்தை நன்கறிந்திருத்தல் கையெழுத்தைக் கண்டறியும் பழக்கமுள்ள. வழக்குகளில் இடம் பெற்ற சில தொடர்கள்: குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கறிந்த சான்றரால் போலி ஆவணங்களில் உள்ள கையெழுத்து அவருடையது எனக் கண்டறியப்பட்டது. கையெழுத்து வல்லுநர் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கு அறிந்து ஆவணத்திலுள்ள போலி கையெழுத்து அவருடையது என மெய்ப்பித்தார். 522. Acquainted With The Fact Of The Case வழக்கு உண்மை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-61 பிரசங்க சம்மானம் காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன். பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?-தொடரும்) அறிவியல் திருவள்ளுவம் ஆ. திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். ‘பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் ‘பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம். “பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா”[1] என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம். பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 511. Acknowledgement of Signature கையொப்ப ஒப்புகை தொகை பெறுபவர் ஒப்புகை நிறைவேற்றத்தை ஒப்புக் கொள்வதை உறுதிப்படுத்தும் கையொப்பம். கொடுக்கப்பட்ட ஆவணத்தில், குறிப்பிடப்படுபவர் கையொப்பத்தைச் சான்றுறுதியர்(notary) சரிபார்த்து உறுதிப்படுத்தல். 512. Acknowledgment Of A Right உரிமை ஒப்புகை மறு தரப்பாருக்குரிய உரிமையை ஒப்புக் கொள்ளுதல். 513. Acme முகடு முடிஉச்சிநிறைவெய்திய நிலை. கிரேக்க மொழியில்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 10. இனத்து இயல்பாகும் அறிவு நிலம் பெயராப் பொருள்களாம் மரம், செடி, கொடிகளும், நீர்வாழ்வனவும், பறப்பணவும், நிலத்தில் ஊர்வனவும் நடப்பனவும் ஆகிய அனைத்தும், உயிர் உடைய பொருள்கள் என்ற ஒருமைப்பாட்டால் ஓர் இனம் எனக் கருதப்படினும், அவ்வுயிரினம் அனைத்திலும் மனித இனம் உயர்வுடையது எனக் கருதப்படுவதற்குக் காரணமாய் நிற்பது மனித இனம் பெற்றிருக்கும் பகுத்துணர் அறிவே ஆகும். தக்கனவும், தகாதனவும், ஏற்பனவும் மறுப்பனவும் கலந்தே காட்சி…
ஆளுமையர்உரை 103 & 104 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆடி 05, 2055 ஞாயிறு 21.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 103 & 104 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் உழைப்புச் செம்மல் இராம.குரூமூர்த்தி, பொது மேலாளர்,…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும், தந்நல மறுப்பும், தகவும் வேண்டும் 105 இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே; இருளும் தொண்டும் விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்; கழியிருள் அதனுள் கடந்தனன்…
சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! >
சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 491-500 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 501-510 501. acknowledge, doctrine of – ஒப்புகைக் கோட்பாடு இசுலாமியர் சட்டத்தில் இது தந்தைமை ஒப்புகையைக் குறிக்கிறது. மகவேற்புச்சட்டத்தில், ஏற்கப்பெற்ற குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கை இரு்நததாகக் கருதுவதன்அடிப்படையில் ஒப்புகைக் கோட்பாடு உள்ளது. இருப்பினும் உரிய குழந்தையின் பெற்றோரிடையே சட்டபூர்வச் சேர்க்கையின்றித் தகாப் புணர்ச்சியிலோ பரத்தமையிலோ பிறந்ததாயின் இது பொருந்தாது. 502. acknowledgement – ஏற்கை ஒப்புகை பெறுகை ஒப்பம்ஒப்புகைசீட்டுஏற்றுக்கோடல் ஒன்றின் முதன்மையை அல்லது சிறப்பை அல்லது ஒருவரின்…
புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ் நிறைவேறாது – இலக்குவனார் திருவள்ளுவன்
முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ்ச்சட்டம் நிறைவேறாது < https://youtu.be/g7oIcYWAHD4 >
அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ.
(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் கவிராசர் செகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் செகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு,‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ – என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின்…
