என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09. இறையனார் அகப்பொருள் உரை

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 6. இறையனார் அகப்பொருள் உரை இறையனார் அகப்பொருள் முதல் சூத்திர உரையில் உரை கண்ட வரலாறு பற்றிய விளக்கம் அளிக்கும் பகுதியில் “நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” எனவரும் தொடர்கொண்டு, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர் எனக் கொள்வர் சிலர். நக்கீரனார் கடைச் சங்கப்புலவர்: கடைச்சங்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை இடம்பெறவில்லை: கட்டளைக் கலித்துறைக்குத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கலில்லை;…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல் – தொடர்ச்சி) பூங்கொடி எரிந்த ஏடுகள் அண்டையில் நின்ற அந்நூல் நிலையப்பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், இன்னும் உளவோ ஏடுகள் என்னவும்அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன,வெந்நீர் வேண்டி விறகென அவற்றைஎரித்தோம் என்றனன்; துடித்ததென் மனனே,90 எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! i கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ!கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே!வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும்கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்;95 என்னே! என்னே இவர்தம் மதிதான்! மடமை என்கோ? கொடுமை என்கோ?படம்விரி…

ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம்-23.06.2024 காலை 10.00

தமிழே விழி!                                                                                 தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰௧ – 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 09, 2055  **** 23.06.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பொதுமை…

சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 381-390 381. accommodate இணக்குவி இடங் கொடு   382. accommodation   இடவசதி உறையுள்; தங்கியிருத்தல்   கடனுதவி; பணஉதவி   ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம்   குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது.   அவசரக்காலத்தில், கடனாக அல்லது பணமாக அல்லது வேறு வகையில் தேவைப்படுவதை அல்லது விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு. 383. accommodation acceptor கடனுதவி ஏற்பவர்; பணஉதவி…

தமிழ்நாட்டு மக்களே தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி

தமிழ்நாட்டு மக்களே! தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 216- 229 216.       வாயு சங்கிதை – குலசேகர வரகுணராம பாண்டியர்   217.       தமிழ்நூல் வரலாறு – பாலூர் கண்ணப்ப முதலியார்   1962 218.       தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் – அரு. சோமசுந்தரம்  1968 – தொகுப்பு ஏ.கே. செட்டியார்   219.       சுரதா பொங்கல் மலர் – கட்டுரை – இராம. அரங்கண்ணல்  1970…

சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 371. accidental தற்செயலான எதிர்பாராத; தற்செயலாக   தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை. 372. accidental consequences எதிர்பாரா விளைவுகள்   எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது. 373. accidental death தற்செயலான மரணம்; நேர்ச்சி  மரணம்   எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-57 திருப்பெருந்துறை மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தைமுடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சிலமாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப்பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர். புறப்பாடு எல்லாரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கேதங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 20 : முடிவுரை

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு-தொடர்ச்சி) தமிழர் வீரம் முடிவுரை விழுமிய வீரம்“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு.மறவர் நிலைஅன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ?

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம் -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 5. பெருமை என்பது கெடுமோ? கன்னித் தமிழ் நாட்டில் கடல் வளம் கொழிக்கும் கவின் மிக்கது அந்நாடு. இயற்கை அன்னை அளித்த அரிய செல்வமாய் உப்பு, சிறு சிறு குன்றுகள் போல் ஆங்குக் குளித்து கிடக்கும் உப்பை உள்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கும் உமணர் எனும் உப்பு வணிகர் வண்டிகளை வரிசை வரிசையாக ஓட்டி வந்து நிறுத்தி உப்புப் பொதியேற்றும் காட்சியும், அவ்வண்டிகளில் பூட்டப்பெற்ற வலிய காளைகள்…

சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 361. Accident   நேர்ச்சி   எதிர்பாரா விளைவு   விபத்து; தற்செயல் நேர்வு   accidēns என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிகழ்தல்/நேருதல்.  எனவே, நேர் பொருளாக நேர்ச்சி என்கின்றனர். எதிர்பாரா நேர்வைக் குறிப்பதால், எதிர்பாரா நேர்ச்சி என்பர். இருப்பினும் வழக்கத்தில் விபத்து என்று சொல்லும் பொருளை இதில் உணராமல் பயன்படுத்துவதில்லை. எனினும் வண்டி மோதல், தீப்பற்றியது, என்பதுபோன்று இடத்திற்கேற்பச் சொல்லலாம்.   சட்டமுறையான செயலை  சட்ட…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப்புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன்,நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்அல்லும் பகலும் செல்லும் சிதலும்சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சியகுறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ!தமிழுக் குறுபகை எத்தனை தாயே!அமுதத்தமிழே! அன்னாய்! வாழி!அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம்நவையற நிறுவி நடத்துதல் என்பணி,நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்;…