சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்

சிங்கள அரசின் ஏமாற்று வேலை   இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில்  ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும்  உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.   அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது.   2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம்  சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2   இந்தோனேசியாவின் எதிர்க்கட்சியான  பார்தை கெரிண்டிரா  (PARTAI GERINDRA) அமைப்பில் அவைத்தலைவர்(chairman) பொறுப்பு வகிக்கும் தமிழர் திரு கோபாலன் அவர்களுடன் இலக்கியவேல் இதழாசிரியர் சந்தர் சுப்பிரமணியன்  நடத்தும் நேர்காணல். வணக்கம். இலக்கியவேல் வாசகர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முனைந்ததற்கு நன்றி. வணக்கம். ?   நீங்கள் இந்தோனிசியாவில் வாழ்கிறீர்கள். உங்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்றது குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? என்னுடைய தாத்தா இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர். நான் மூன்றாவது…

அனைத்துலகப் பெண்கள் நாள் 2017 பேரணிக்கு அழைப்பு

  அனைத்துலகப் பெண்கள் நாள் 2017 இல் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் பெண்களுக்கு அழைப்பு! மாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017  முற்பகல் 11.30  

‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்

 ‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம் மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்!   செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்! எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்! அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்! மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்! வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்! வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்! தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்! தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்! வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்! ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்! படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!…

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண்

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண் உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய நாள் மாசி 29, 2048 /  13.03.2017   புதிதாய்க் குதித்தவளா புதுமைப் பெண் அத்துனைப் பெண்ணின் ஆழ்மனதிலும் அங்கம் கொண்டதே புதுமை -அறிவாய் கல்வியில் ஓங்கவும் கவலைகள் நீங்கவும் கவிதையாய் வாழவும், காட்டாறாய் மாறவும் அவள் கைதேர்ந்த பதுமை- புரிவாய் எத்திசை நோக்கியும் எடுத்தடி வைப்பாள் முக்திக்கு மூர்க்கமாய் முனிவரைத் தேடாள் சக்தியாய் உலகாளும் பெண்ணினை அறிவாய் தெளிந்தே கற்பாள் தலை நிமிர்ந்தே நடப்பாள் தயை கொள்வாள்…

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! – செந்தமிழினி பிரபாகரன்

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ? ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம்? எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி! கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க நேரமில்லை…

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்! – உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு!   இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது.   இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும் இலங்கைப் படை அலுவலர்கள் ஆறு பேரின் விவரங்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய…

நோர்வே : கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல்

நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) நண்பகல் 13:00மணிக்கு  (Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர் கலந்துகொண்டனர். ஈழத் தமிழர்களாகிய நாம் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் அறம்சார் உரிமைப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்குவது குமுக(சமூக)அமைப்பான எமது கடமை என்று கருதி நோர்வே தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. நோர்வே தமிழச்சங்கம்…

“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம், திருச்சிராப்பள்ளி

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. எதிர்வரும் மாசி 15, 2048 _ 27/02/2017 அன்று  தமிழ்த்துறையில் “ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிட்சர்லாந்து